தேவனுக்கே மகிமை உண்டாவதாக .!
என்னை தெரிந்துகொண்டவரும், இந்த செய்தியை படிக்க உங்களை அழைத்து வந்தவருமாகிய , ஜீவனுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவை என் வாழ்வில் ஏற்றுக்கொண்டபிறகு நான் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்கள் ஏராளம் என்றாலும் அவை என் இருதயத்தோடும், சிந்தையோடும் சம்மந்தபட்ட விலையுயர்ந்த முத்துக்கள். இதிலும் மிக விலையுயர்ந்த முத்து என்பது அவருடைய மகத்துவமான ஆதி அன்பு ஆகும். அவ்வன்பை ருசிபார்த்த என்னிதயம் தந்த சில வரிகள், இதோ உங்கள் முன்பு. 👇👇👇
நானிலத்திலே யான் கண்ட மாதேவனே.!
யானறிவும், ஆறறிவும் கண்டிராத மெய்யொளியே.!
இருள் துடைக்கும் மா ஈசனே, பரஞ்சோதியே..!
ஈசல் போல நானிருந்து இமை மூடும் நாழிகையில்,
இன்பயக்கும் தேனாய் வந்த மாதேவே...!
இன்துயர் துடைக்க மன்துயரேற்று நின்றீரோ.!
நரனான மாக்களுக்கு அரனருள இப்புவி கண்டீரோ.!
கோமகனின் பாதமுகம் லோகபாவம் ஏற்றின்று,
வெண்ணிற ஆடை இங்கே வேதனை கானுதோ..!
கள்ளமில்லா உள்ளம் இங்கே கருகிடும் காரணத்த,
என்னுள்ளம் அறியச்செய்து, கல்மனம் கரைய கண்டீரோ.!
என் சித்தம் அறிய நானும், இங்கே வந்து விழுந்தேனென்று,
எண்ணத்தில் என்னை நானே, ஏமாற்றிக் கொண்ட வாழ்வை.!
உம் சித்தம் அறியச் செய்து, உள்ளமதில் புரியச்செய்து
உறுதுணையாய் நின்ற 👉👉மாதேவே....!
பட்டத்துயர் பலவென்று பாரெங்கும் வீசும் மனம்.!
சுட்டமண்ணை தொட்டிடவே, துயரெல்லாம் ஆற்றிடவே.!
தூயர் பாதம் கண்டேனும், துதியை மனதில் கொண்டேனும்,
விரயமாகும் காலத்தில் உதயமாகும் கதிரவனாய்.!
காரிருள் அகற்றிட்ட, கருணை தீபம் ஏற்றிட்ட ,
ஆதியின் அதிசயமும், மறைபொருளின் மகத்துவமான உம்மை.!
மனம்குளிரக் காண, மறுதேசம் என்று காண்பேனோ...... ???
நீங்களும் நம் தேவனைப்பற்றி ஏதாவது பதிவு செய்ய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பெட்டியில் பதிவிடவும். கர்த்தர் நித்தமும் உங்களை வழிநடத்தி ஆசீர்வதிப்பாராக.
-- நன்றி 🙏🙏🙏