அன்றும், இன்றும்




*அன்று*
 ஒரு அறை உள்ள வீட்டில் ஐந்து பத்து பேர் ஒன்றாக வாழ்ந்தோம்
 
*இன்று*
 ஐந்து பத்து   அறை உள்ள வீட்டில்  ஒருவர் இருவர் மட்டும் வாழ்கிறோம்
    
*அன்று*
 ஆயிரம் பேருக்கு உதவி செய்தவன் யாரிடமும் விளம்பரம் இல்லாமல் வாழ்ந்தார்
 
*இன்று*
 ஒரு நபருக்கு உதவி செய்தவனை ஆயிரம் பேர் தெரிந்து கொள்கிறார்கள்
 
*அன்று*
வயறு நிரப்புவதற்காக பல கிலோமீட்டர் தூரம்  நடந்து வேலைக்கு சென்றோம்
 
*இன்று*
  வயறு குறைப்பதற்காக பல கிலோ மீட்டர் தூரம்  நடைப்பயிற்சி செய்கிறோம்
 
*அன்று*
  வாழ்வதற்காக சாப்பிட்டோம்
 
*இன்று*
 சாப்பிடுவதற்காக வாழ்கிறோம்
 
*அன்று* 
வீட்டிற்குள் உணவருந்திவிட்டு கழிவறையை வெளியே  பயன்படுத்தினோம்
 
*இன்று*
 வெளியே உணவருந்திவிட்டு கழிவறையை வீட்டுக்குள் பயன்படுத்துகிறோம்
 
*அன்று*
 மானம் காப்பதற்காக உடை அணிந்தோம்
  
*இன்று*
 மானத்தை வெளியுலகத்திற்கு காட்டுவதற்காக உடை அணிகிறோம்
  
*அன்று*
 கிழிந்த ஆடைகளை தைத்து பயன்படுத்தினோம்
 
*இன்று*
   தைத்த  ஆடைகளை  கிழித்து பயன்படுத்துகிறோம்
 
*அன்று* 
இருப்பதை வைத்து பண்டிகை காலத்தை கொண்டாடினோம்
 
*இன்று*
 பண்டிகைக்கு  ஏற்றது போல் கொண்டாடுகிறோம்
 
*அன்று*
 ஆசிரியரிடமிருந்து உதை வாங்காமல் இருக்க மாணவர்கள் ஆண்டவனை வேண்டினார்கள்
 
*இன்று*
 மாணவர்களிடமிருந்து உதை வாங்காமல் இருக்க ஆசிரியர்கள் ஆண்டவனை வேண்டுகிறார்கள்
 
*நாம் கடந்து வந்த பாதை  திரும்பிப் பார்ப்பதற்கு  நம்மால் முடியட்டும்*

Post a Comment

Previous Post Next Post