பதப்படுத்தப்பட்ட உணவுகளை விரும்பி உண்பவரா? இந்த பக்கவிளைவுகள் கட்டாயம் உண்டு!

இன்றைய பிஸி காலகட்டத்தில் காய்கறிகளிலிருந்து இறைச்சி வரை அனைத்துமே பதப்படுத்தப்பட்ட வடிவில் எளிதாகக் கிடைக்கிறது. சமைக்காத உணவுகள் மட்டுமல்ல; ready-to-eat என சூடுபண்ணினால் மட்டும் போதும், அப்படியே சாப்பிடலாம் என்ற வடிவிலும் கிடைக்கிறது. இந்த உணவுகள் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்க அவற்றில் பதப்படுத்தும் காரணிகள் அதிகளவில் சேர்க்கப்படுகின்றன.

ஃப்ரெஷ்ஷான உணவுகளுக்கு மாற்று உணவு என்ற ஒன்றே இல்லை என்பதுதான் உண்மை. பதப்படுத்தப்பட்ட உணவுகளை எப்போதாவது எடுத்துக்கொண்டால் பெரிய பாதிப்புகள் இருக்காது. ஆனால் அவற்றையே வழக்கமாக கொண்டிருந்தால் கண்டிப்பாக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே அவற்றை தவிர்க்கவேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்னென்ன மாதிரியான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

உடல் எடையைக் கூட்டும்

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருப்பதால் கொழுப்புச்சத்து அதிகளவில் உள்ளது. வறுத்த உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளை எடுத்துக்கொள்வது எடையை அதிகரிக்கும்.

image

இதயத்திற்கு ஆரோக்கியமானதல்ல

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ட்ரான்ஸ் கொழுப்புகள் அதிகமாக இருப்பதால் அது தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தி, இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது. மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலிலுள்ள நல்ல கொழுப்புகளின் அளவைக் குறைத்து, கேடு விளைவிக்கும் கொழுப்புகளின் அளவை அதிகரிக்கிறது.

உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் அளவு அதிகமாக இருக்கும். இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகமாகும்போது அது பக்கவாதம் மற்றும் நாள்பட்ட பிரச்னைகளுக்கு அடித்தளமிடும்.

ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்

பதப்படுத்தப்பட்ட உணவுகள் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்க அவற்றில் ஸ்டார்ச் சேர்க்கப்படுகிறது. ஸ்டார்ச்சுகள் சர்க்கரைகளாக உடைக்கப்பட்டு, ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/DKvVPia

Post a Comment

Previous Post Next Post