பரலோக வாசலில் ஓர் உரையாடல்.!

பரலோக வாசலில் ஒரு கலந்துரையாடல்.!
(interview) 

குறிப்பு :
மண்ணுலகில் மன்னாதி மன்னரால் (இயேசுவால்) தெரிந்துகொள்ளப்பட்ட கூடாரமாகிய மனிதன் ஒரு நாள் மரித்து விடுகிறான் பிறகு அவன் பரலோகத்தில் தனக்கான இடத்தை தேடி செல்லும்பொழுது அப்பரலோக வாசலில் நடக்கும் கலந்துரையாடல் பற்றி இப்பகுதியில் நாம் பார்ப்போம். 

இது கற்பனையின் கதையே தவிர உண்மை அல்ல. என்றாலும் இப்படி நம் வாழ்க்கையில் நடக்க விடாமளிருப்போமாக..!




கேள்விகள் : 

1.  நான் நல்லா Church-ல  பாடி, ஆடி ஆராதனை நடத்துவேன்.
    பதில் : அனுமதி இல்லை

2. நான் அதிக காணிக்கை கொடுப்பேன். 
    பதில் : அனுமதி இல்லை

3. நான் அதிகமாக உலகமெங்கும் ஊழியம் செய்தேன். 
    பதில் : அனுமதி இல்லை

4. நான் வார்த்தை ஜாலத்தினால் நல்ல ஆழமான பிரசங்கங்கள் செய்தேன்.
    பதில் : அனுமதி இல்லை

5. நான் பல முறை 72/24/12/ மணி நேர ஜெபங்களை நடத்திருக்கின்றேன்.
   பதில் : அனுமதி இல்லை

6. நான் தெளிவான தீர்க்கதரிசனம் உரைத்தேன்.
    பதில் : அனுமதி இல்லை

7. நான் என் சபையின் மூப்பர் மற்றும் மூத்த விசுவாசி.
    பதில் : அனுமதி இல்லை

நீங்கள் உங்களை மேன்மையாக சொன்னதை நிறுத்திவிட்டு நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். 

1. உங்கள் ஜென்ம சுபாவத்தை அழித்தீர்களா? 
    பதில் : இல்லை 

2. உங்கள் சகமக்களையும், ஊழியர்களையும் நேசித்தீர்களா.?
   பதில் : அதற்குள்ளாகத்தான் மரித்துவிட்டேனே.! 

3. உங்கள் பெற்றோரை கனம் பண்ணினீர்களா?
    பதில் : ஆம் , ஆனால் முதியோர் இல்லத்தில் மட்டும் சேர்த்தேன்.! 

4. ஆத்தும ஆதாயம் செய்தீர்களா? 
    பதில் : செய்ய முயற்சித்தேன்.! 

5. பரிசுத்த வாழ்வு வாழுகிறீர்களா? 
    பதில் : முயற்சி செய்கின்றேன்.!

6. பரலோக சித்தம் செய்தீர்களா? 
    பதில் : அப்படி  யோசிக்கவே இல்லை எங்கள் விருப்படியே செய்தோம். 

7. இயேசுவின் நாமத்தை அதிகமாக உயர்த்தி மேன்மை படுத்தினீர்களா?
    பதில் : என் கஷ்டங்களை பற்றி பேசவே நேரம் சரியாக இருந்தது.

8. ஜாதி, இன, மொழி, அந்தஸ்து வித்தியாசம் பார்த்தீர்களா?
பதில் : திருமண காரியத்தில் மட்டும் பார்த்தேன் .

*பரலோகத்தின் பதில்*🔥
👇👇👇👇👇👇👇

*உங்களுக்கு இங்கு இடம் இல்லை..!*




Post a Comment

Previous Post Next Post