30 மாநிலங்கள்;
1618 மொழிகள்;
6400 சாதிகள்;
6 மதங்கள்;
6 இனங்கள்;
29 பெரிய பண்டிகைகள்;
பல வித 1000க் கணக்கான வித விதமான தெய்வ வழிபாடுகள்
130 கோடி மக்கள் நம்ம இந்தியாவில்...
ஆனால் நாமோ..!
தமிழ் நாட்டில் பத்து அடி தூரம் இடை வெளியில் ஒவ்வொரு சபையையும் வானளாவிய உயரத்தில் கட்டி, அதற்குள் ஒரு 30 ஏ.சி. பெட்டியையும் மாட்டி விட்டு, குளு குளு ஹாலில் கனகச்சிதமான கோட் அணிந்து கொண்டு, 50 லட்சம் மதிப்புள்ள சவுண்ட் சிஸ்டத்தோடு,,,
"இந்தியாவை மாற்றுவோம்
இந்தியாவை இரட்சிப்போம்
இந்தியா இயேசுவுக்கே'ன்னு
கத்துகிறோமே...!
That's great ங்க உறவுகளே...!
இன்று மைக்கை ஸ்டைலாக பிடிப்பதே மாபெரும் சாதனையாகி விட்டது நமக்கு...‼
விமானத்தில் பறப்பதே ஊழியத்தில் வேற "லெவல்"ஆகிவிட்டது நமக்கு.
புதுப் புது Fashion'ஐ நாம் கற்றுக் கொண்டிருப்பதால், Passion for souls (ஆத்தும பாரம்) என்ற வார்த்தையின் அர்த்தமே மறந்து போச்சி நமக்கு...⁉
1 நாள் அமாவாசை ஜெபத்தில்...
3 நாள் கன்வென்ஷன் கூட்டங்களில்...
7 நாள் எழுப்புதல் கூட்டங்களில்...
12 மணி நேர தொடர் ஆராதனையில்...
24 மணி நேர அக்கி🔥னி அபிஷேக முகாமில்...
நாம் Special Speakerஆக அழைக்கப்பட்டால், அதுவே "ஆனந்த" பாக்கியம் நமக்கு...‼
டி.வி.யில் நாம் "பிரசங்கம்" செய்தால் நீண்ட வாலும் உயரமான கொம்பும் வந்து விட்டது போலவே ஒரு "உணர்வு"நமக்கு...‼
ஒரு தகரமும் (car) பல ஆயிரம் செங்கலும் (பெரிய வீடு)ஒரு கலர் பேப்பரும்(Reverand certificate) நம்மிடம் இருந்தால் ஆகாயத்தில் பறப்பது போலவே
ஒரு உணர்வு நமக்கு...‼
என்னைப் பத்தி நீங்க கொஞ்சம் குறைச்சிப் பேசினால் எனக்குக் "கோவம்" வந்துரும்
உங்களைப் பத்தி நான் கொஞ்சம் குறைச்சிப்
பேசினால் உங்களுக்குக் "கோவம்" வந்துரும்,,,‼
ஏனென்றால்.. நாமெல்லாம் ரொம்பத் "தியாகமான" Man of God கள்...!!!
இரட்சிக்கப்பட்டவங்களையே திரும்பத்
திரும்ப ஒன்று திரட்டிஆட வைத்து பாட வைத்து
துள்ள வைக்கும் விசுவாச "மாவீ👍ரர்கள்'' நாம்...‼
சரி சரி... சும்மா மசமசன்னு நிக்காமல் கொஞ்சம் நல்லா கண்களைத்திறந்து நம்முடைய சர்வாயுத வர்க்கமாகிய "மைக்" எங்கே கிடைக்கும்னு நல்லா ஜெபத்தோட தேடிப் பார்ப்போம் வாங்க..⁉ Man of God களே...
அதோட இன்னொரு முக்கியமான விசயத்தை
மனசுல வைத்துக்கொள்ள வேண்டும் நாம்,
அதாவது...எங்கே மைக் பிடிக்க போனாலும்
நம்ம காக்கா கூடு"ஹேர்" ஸ்டைல்,மற்றும் நம்ம ஐரோப்பிய"ட்ரெஸ்சிங்" ஸ்டைல்ல ரொம்ப "கரெக்டா" இருக்கணும்..‼ ஏனென்றால்...
இந்தியாவின் இரட்சிப்பு அதுக்குள்ளே தான்
அடங்கியிருக்கு..⁉
"விபரம்" புரியாத சிருவர்களாகிய... சாது சுந்தர் சிங்...சார்லஸ் பின்னி...ஜான்நாக்ஸ்... பில்லி கிரஹாம்...ஜான் வெஸ்லி...பக்த சிங்... இவர்களால் "செய்ய" "முடியாத" அறுவடைப் பணியை நாம் தானே செய்யப் போகிறோம் !!!
நம்மில் மனமாறுதல் என்றுண்டு சிந்திப்பீரோ ???
✝🛐✝
இதுதான் உண்மை என்று கண்ணீருடன் அறிக்கையிடுகிறேன்...!!!
--உங்களில் ஒருவன் ..!
- உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது.
- கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.
சங்கீதம் 119 : 136-137.
Tags:
சிந்திக்க சில வரிகள்.