வேதத்தின் அடிப்படையில் விடுகதையும், பதிலும்..!


1️⃣
 ```வழவழனு வாயாம்
கொழ கொழனு இனிப்பாம்
தாறுமாறான நடையாம்
சத்திய பாதைக்கு தடையாம்..```
*_விடை என்ன.._* ⁉️🤣

*பரஸ்திரீயின் உதடுகள்*
    ( நீதிமொழிகள்.  5 : 5 , 6 )

2️⃣
 ```மகிழ்ச்சியை மறைக்கும்
சோகத்தை இறைக்கும்
பயிற்சியில் பழகினால்
சமாதானத்தை அளிக்கும்...```
*_அது என்ன.._* ⁉️😌

*சிட்சை* 
    ( எபிரெயர் . 12 : 11)

3️⃣
 ```இதயம் துடித்தாலும்
மூச்சு விட்டாலும்
உடல் அசைந்தாலும்
நான் பிணம்...```
*_நான் யார்.._*⁉️😳

*சுகபோகமாய் வாழ்கிறவள்*
    ( 1 தீமோத்தேயு. 5 : 6 )

4️⃣
 ```சுத்த தங்கம் உடையவர், தங்கத்தோடு கலப்படமான நகை செய்யும்படி ஆர்டர் கொடுக்கத் திட்டமிட்டார்...```
*_அவர் யார்.._* ⁉️🤔

*சாலொமோன் ராஜா*
    (  உன்னதப்பாட்டு. 1 : 11 )

5️⃣
 ```உணவு பொட்டலத்தில்
ஊடுருவி கிடக்கின்றான்
களவாணி பயலாக
தலைமறைவாய் இருக்கின்றான்..```
*_விடை என்ன.._* ⁉️😜

*யோசேப்பின் பானபாத்திரம்*
    ( ஆதியாகமம். 44 : 12 )

6️⃣
 ```அடிக்கலாம் உதைக்கலாம்
திட்டலாம் கொட்டலாம்
கொலை முயற்சிக் கூடாது..```
*_யாரை.._* ⁉️🧐

*உன் மகனை*
    ( நீதிமொழிகள். 19 : 18 )

7️⃣
 ```சிறிய மீனை பிடிக்க
பெரிய வலை விழுந்தது
நண்டு ஒன்று வலையை கடிக்க
சிறிய மீன் தப்பியது..```
*_விடை என்ன.._* ⁉️😌

*ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன்*
    ( பிரசங்கி. 9 : 14 - 16 )

8️⃣
 ```கொலை செய்தவர்களின் வஸ்திரங்களை பாதுகாத்த நானே,கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்துக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்..``` 
*_நாங்கள் யார்..._* ⁉️ 🤔

*அப். பவுல்*
_*ஸ்தேவானுடைய வீட்டாருக்கு*_
( 1 கொரிந்தியர். 1 : 16 )

9️⃣
 ```ஒரு அதிகாரத்தில் ஒருவன் இயற்கையாக மரித்தான், ஒருவன் கொல்லப்பட்டு மரித்தான், ஒருவன் கொல்லப்படாமல் தப்பினான், ஒருவன் கொல்லப்பட்டான், ஒருவன் சில வருடம் உயிருடன் வாழ்ந்து கொல்லப்பட்டான்...```
*_இவர்கள் யார்.._* ⁉️🧐

*தாவீது , அதோனியா , அபியத்தார் , யோவாப் ,*
*சீமேயி*
( 1 இராஜாக்கள். 2 )

🔟
 ```ஒரு ராஜாவால் வெட்டப்பட்டேன்
எனக்கு வாயுண்டு ஆனால் பேசமாட்டேன்...```
*_நான் யார்.._* ⁉️😎

*துரவு*
 ( _உசியா ராஜா_ )
(  2 நாளாகமம். 26 : 10 )

1️⃣1️⃣
ஒருநபர் கூறிய கூற்றில்

*1.* இருவரும் அடித்துக்கொண்டு சாகவேண்டும் (or)
*2.* ஒருவன் செத்து மற்றவன் மரணதண்டனை விதிக்கப்பட்டு மடியவேண்டும் (or)
*3.* ஒருவன் செத்து மற்றவன் தேவன் கையால் சாகவேண்டும்

இம்மூன்றும் அன்றே நிகழவேண்டும்.. 
*_இதன் விடை என்ன.._* ⁉️🤪

ஈசாக்கின் மனைவி ரெபெக்காள்
நான் ஒரே நாளில் உங்கள் இருவரையும் ஏன் இழந்து போகவேண்டும் என்றாள்
ஆதியாகமம்  27 : 45

1️⃣2️⃣
 ```புதிய ஏற்பாட்டில்  இந்த வசனத்தில் இரு கேள்விகள் உண்டு; ஒவ்வொரு கேள்வியிலும் 9 வார்த்தைகள் உண்டு; முதல் கேள்வியில் உள்ள 7 வார்த்தைகளும் இரண்டாவது கேள்வியிலுள்ள 7 வார்த்தைகளும் ஒன்றே...```
*_வசனம் எது.._* ⁉️😉

மனைவியானவளே, நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? புருஷனே,நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்?
1 கொரிந்தியர் 7 : 16

1️⃣3️⃣
 ```புடவை ஓரம் முடிச்சு வெச்சேன்;
பிரிச்சி அதையும் போட்டு வெச்சேன்;
மன்னவர் மனச குளிர வெச்சேன்;
வேதத்தில் நானும் இடம் புடிச்சேன்..```
*_நான் யார்.._* ⁉️
*_அது என்ன.._* ⁉️😌

ஏழை விதவை
காணிக்கை போட்ட இரண்டு காசு
மாற்கு12 : 42 - 44
லூக்கா 21 : 2 - 4

1️⃣4️⃣
 ```உண்மை
     உயிருள்ளவரை
     உண்மை
     உண்மையாயிருப்பின்

     உனக்குத் தரும்
     உயரிய பரிசு....```
                     
*_அது என்ன..._* ⁉️😌

*ஜீவ கிரீடம்*
    ( வெளி . விசேஷம்  2 : 10 )

1️⃣5️⃣
 ```அழகிய உடைகளை
      அசுசிப் படுத்தாமல்
      அவர்களில் சிலர்...
      அவர்கள் பாத்திரவான்களெனில்
      அவர்களுக்கு
      அழகிய வெள்ளை உடை.....```
*_அது யாருக்கு __* ⁉️😎

*சர்தை சபை*
    ( வெளி . விசேஷம் . 3 : 4 , 5 )

1️⃣6️⃣
 ```வேகமாக வருது
விரட்டிக் கொண்டு வருது
தீவிரமாய் வருது
அலறிக்கொண்டு வருது
பொன்னோ பொருனோ எதுவும்
உதவிட முடியாது..``` 
*_அது என்ன.._* ⁉️🥺

*கர்த்தருடைய உக்கிரத்தின் நாள்*
    ( செப்பனியா . 1 : 18 )
கவிஞர். வினோத்குமார் நடேசன்

Thinking is the gateway to the world of imagination. கவிதைகள் தமிழுக்கு அழகு ஆகையால் கவி எழுத பழகு. கவிதையும் கவிதை சார்ந்த இடமும்தான் இந்த இணையதள பக்கம். தொடர்புக்கு : jackibsc@@gmail.com நம் இனிய இன்பத்தமிழின் கவிதைகளை இன்று முதல் இணையத்தில் விதைக்க என்னோடு கைகோருங்கள். என்றும் எழுத்தாணி முனையில் ...✍️ கவிஞர். வினோத்குமார் நடேசன். இவன் ....... சிந்தையின் விந்தையில் வித்திட்ட கவிஞன். �� நன்றி �� Links Instagram instagram.com/itek.kavithaiworld Facebook facebook.com/profile.php?id=61564014760620&mibextid=ZbWKwL

Post a Comment

Previous Post Next Post