இந்தியாவில் மிஷனெரிகள்

இந்தியாவில் மிஷனெரிகள் ஆற்றிய பணி;

மிஷனெரிகள் இல்லையென்றால்
இந்தியா  இடுகாடாக
இருந்திருக்கும்
என கூறியவர்
தந்தை பெரியார் . 

 *இந்தியாவில் மிஷனெரிகள் சாதித்தவைகள்.* 

'கால்டுவெல்' ஐயா போன்றவர்கள் தமிழ்
இலக்கிய பணி ஆற்றினர்.
கால்டுவெல் ஐயா
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற
அரிய நூலை எழுதினார். 

'பென்னிகுக்' மிஷனெரி  முல்லைப் பெரியார்
அணை கட்டினார்

'சி டி ஸ்டட்' போன்ற
மிஷனெரிகள் தேயிலை செடிகளை கொண்டு வந்து தேயிலை தோட்டங்களை
உருவாக்கினர். 
 
மிஷனெரி கிரஹாம் ஸ்டெய்ன்ஸ்'  குஷ்டரோகிகளை
பராமரித்தார்.

மிஷனெரி 'ரேனியஸ்' 
சிறைக் கைதிகளுக்கு
நல் வாழ்வை உருவாக்கினார்.
100 க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களை
தென்னாட்டில்
உருவாக்கினவர்.

மிஷனெரி 
ரேனியஸ்  
பள்ளிக்கூடங்களை,
ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை உருவாக்கினார். 

மிஷனெரி 'ரிங்கிள் தொபே' 
பெண்கள் மாராப்பு
சேலை அணிய இருந்த
தடையை நீக்கினார்.

தாழ்த்தப்பட்ட மக்கள்
உயர வழி வகை செய்தார் மிஷனெரி  ரிங்கிள் தொபே  

மிஷனெரி 'வில்லியம் கேரி' 
சதி எனும் உடன்கட்டை ஏற்றும் கொடிய பழக்கம்
ஒழிய பாடுபட்டார். 

பெண் மருத்துவக் கல்விக்கு  வித்திட்டு
மருத்துவமனையை
உருவாக்கியவர் மிஷனெரி
'ஐடா ஸ்கடர்' அம்மையார் 

ஓலைச்சுவடிகளில் தவழ்ந்த தமிழை அச்சில் ஏற்றி புத்தகங்களை
அச்சடிக்க  உதவியவர்
'சீகன் பால்க்' மிஷனெரி 
தரங்கம்பாடியில்
பெண்களுக்கான தமிழ்
பள்ளியை உருவாக்கினார். 

சிவகாசியில் வெடி
மருந்து ஆலைகளை
உருவாக்கி உலக அளவில் பிரபலமாக
காரணமானவர்
 மிஷனெரி 'இராக்லேண்ட்' . 

'பிரான்சிஸ் சேவியர்' ஐயா  கடற்கரை ஓரங்களில் சென்று
மீனவ மக்கள் நல்வாழ்வுக்கு பாடுபட்டார். 

'ஏமி கார்மிக்கேல்' அம்மையார் சிறுவயதிலே பெண்பிள்ளைகளை
இந்து கோயில்களிலே தேவதாசி என்ற இழிவான பணிக்கு
கொண்டு சென்று விடுகிற மூட பழக்கத்தை தடை செய்ய பாடுபட்டார். 

பெண் பிள்ளைகளை
எடுத்து வளர்த்தார். 
அநாதை பிள்ளைகளுக்கு
அடைக்கலம் தந்து
ஆதரித்தார். 

'லண்டன் மிஷன்' 
சொஸைட்டி மூலம்
கொண்டு வரப்பட்ட
உருளை முட்டைக்கோஸ்
கேரட்  ஆகியன
நீலகிரி பகுதியில்
விளைவிக்கப்பட்டன. 
விவசாயம் செழித்தது. 
மக்கள் வாழ்வாதாரம்
உயர்ந்தது. 

'ஈவ்லின் பிராண்ட்' 
அம்மையார் 
மூலம் சேலம்
கொல்லிமலை பகுதி
ஆதிவாசி மக்கள்
நல் வாழ்வு அடைந்தனர். 
 
'இரட்சண்ய சேனை'
அதாவது Salvation Army 
ஊழியங்கள் மூலம்
ஏழை மக்களுக்கு
சோப்பும் சூப்பும்
கிடைத்தன. உணவும்
உடையும் கிடைத்தன. 
 
'ஜான் பிரிட்டோ' மிஷனெரியின் கடும்
மிஷன் பணி
மூலம் ராமநாதபுரத்தில் திருட்டு தொழிலை குலத்தொழிலாக
செய்கிற இன மக்கள்
நல்ல பாதையில்
கடந்து வந்தனர். 
மிஷனெரிகள் வந்ததால் தான்
ஆங்கில கல்வி நிறுவனங்கள் உருவாகின.

 விஞ்ஞான
கருவிகளும்
தொலைத் தொடர்பு கருவிகளும்  நவீன
வாகனங்களும் மருத்துவ உபகரணங்களும்

எல்லாவற்றிற்கும்
மேலாக ஒழுக்கமும்
நாகரீகமும் உயர்கல்வியும்  கிடைத்தன.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியும் கிடைக்க முக்கிய காரணம் கிறிஸ்தவ மிஷனெரிகள்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு *பஞ்சமி நிலம்* கிடைக்க காரணமானவர்கள் கிறிஸ்தவ மிஷனெரிகள்.

இந்தியா
இன்று தொழில் துறையில்
வளர்ந்த நாடுகளின்
பட்டியலில்  வருவதற்கு
மிஷனெரிகளின்
கண்ணீரும்
அன்பின் வார்த்தைகளும்
கடுமையான உழைப்பும்
மேலான தியாகமும்
இயேசு கிறிஸ்துவின் 
இரக்கத்தால் உண்டான
நேசமும் தான் காரணம்
என்பதை இந்திய மக்கள் நன்கு  உணர வேண்டும் 
என்பதே நமது பணிவான விருப்பம்!

Post a Comment

Previous Post Next Post