வருவாய் சரிவு எதிரொலி - 150 ஊழியர்களை டிஸ்மிஸ் செய்த நெட்ஃபிளிக்ஸ்!

உலக அளவில் மிகவும் பிரபலமான ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ், பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு தனது வாடிக்கையாளர்களை சமீபத்தில் இழந்தது. இதனால் செலவினைக் குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அந்நிறுவனம், 150 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது.

இந்த பணி நீக்க நடவடிக்கை ஆனது பெரும்பகுதி அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிகின்றது. அனிமேஷன் பிரிவில் 70 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது தவிர சமூக வலைதளப் பக்கங்களை கையாளும் ஊழியர்கள் எனப் பலரும் இதில் அடங்குவார்கள் எனக் கூறப்படுகின்றது.

image

ஓடிடி துறையில் கடுமையான போட்டி நிலவி வருவதால் நெட்ஃபிளிக்ஸை பயன்படுத்தும் சந்தாதாரர்களின் எண்ணிக்கைகுறைந்து வருவதாகக் தகவல் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் முதல் காலாண்டில் 2 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளதாகவும். இது அடுத்து வரும் காலாண்டிலும் கூடுதலாக 20 லட்சம் சந்தாதாரர்களை இழக்கலாம் என்றும் மதிப்பிட்டுள்ளது. இது வருவாய் வளர்ச்சிக்கு சரிவுக்கு காரணமாக அமையலாம் என்ற நிலையில் நெட்ஃபிளிக்ஸ் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்கலாம்: சீன விமான விபத்து வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதா? வெளியான பகீர் தகவல்கள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/yEDqgYZ

Post a Comment

Previous Post Next Post