ரயில்வே தகவல் கணினி மையத்தில் இன்ஜினியர், எக்சிகியூட்டிவ்கள்

ஒன்றிய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் சென்னை, புதுடெல்லி, கொல்கத்தா, மும்பை, செகந்திராபாத் ஆகிய மாநகரங்களில் உள்ள ரயில்வே தகவல் கணினி மையங்களில் காலியாக உள்ள இன்ஜினியர், எக்சிகியூட்டிவ்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி:1.     Junior Electrical Engineer: 4 இடங்கள் (பொது-2, எஸ்சி-1, ஓபிசி-1). தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் 60% தேர்ச்சியுடன் 3 வருட டிப்ளமோ.2.     Junior Civil Engineer: 1 இடம் (பொது). தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் 60% தேர்ச்சியுடன் 3 வருட டிப்ளமோ.3.     Executive Personnel/Administration/ HRD: 9 இடங்கள் (பொது-4, எஸ்சி-1, எஸ்டி-1, ஓபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: 60% மதிப்பெண்களுடன் கலை/ வணிகவியல்/அறிவியல் பாடங்களில் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Personnel/HRD/HRMS ஆகிய பிரிவுகளில் முதுநிலை டிப்ளமோ/ எம்பிஏ.4.     Executive, Finance and Accounts: 8 இடங்கள் (பொது-3, எஸ்சி-1, எஸ்டி-1, ஓபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்- 1). தகுதி: வணிகவியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் நிதி பிரிவில் முதுகலை டிப்ளமோ/ 60% மதிப்பெண்களுடன் எம்பிஏ தேர்ச்சி.5.     Executive Procurement: 2 இடங்கள் (பொது-1, ஓபிசி-1). தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிப்ளமோ அல்லது 60% மதிப்பெண்களுடன் Logistics and Supply Chain Management பிரிவில் எம்பிஏ தேர்ச்சி.வயது வரம்பு: அனைத்து பணிகளுக்கும் 31.12.2022 அன்று 22 முதல் 28க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.cris.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.12.2022.



from Dinakaran.com |20 Dec 2022 https://ift.tt/VS1MUbZ

Post a Comment

Previous Post Next Post