தேவன் தேடும் மனிதன்..?



*எழுப்புதலுக்கு தேவன் தேடும் மனிதன்*

 1. ஜெபமே அவனது முக்கிய அலுவலாக இருக்க வேண்டும்.

 2. ஆத்தும் அறுவடையே அவனது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

 3. தேவ சமூகமே அவனது இன்பமாக இருக்க வேண்டும். 

4. தேவ ஊழியமே அவனது பாரமாக இருக்க வேண்டும். 

5. கடின உழைப்பே அவனது பிரியமாக இருக்க வேண்டும்.

6. கர்த்தருக்காகப்படும் பாடுகள் அவனுக்கு சந்தோஷமாக இருக்க வேண்டும். 

7. உலகம் அவனுக்கு வனாந்தரமாக இருக்க வேண்டும்.

 8. சுகபோகம் அவனுக்கு குப்பையாக இருக்க வேண்டும். 

9. நேர்மை அவனுடன் பிறந்ததாக இருக்க வேண்டும். 

10. மாய்மாலம் அவனுக்கு அருவருப்பாக இருக்க வேண்டும்.

11. பாவம் அவனுக்கு கசப்பாக இருக்க வேண்டும். 

12. மன்னிக்கும் சுபாவம் அவனது நண்பனாக இருக்க வேண்டும். 

13. வேதவசனம் அவனது ஆகாரமாக இருக்க வேண்டும். 

14. தேவனைத் துதிப்பது அவனுக்கு பானமாக இருக்க வேண்டும். 

15. ஆவியின் அபிஷேகம் அவனது ஆடையாக இருக்க வேண்டும். 

16. பாவத்தைக் கண்டிப்பதில் அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானாக இருக்க வேண்டும். 

17. பண ஆசை அவனுக்கு எதிரியாக இருக்க வேண்டும். 

18. ஜாதி வேற்றுமை அவனுக்கு வாந்தியாக இருக்க வேண்டும். 

19. அன்பு அவன் வாழ்வில் ஜீவ ஊற்றாக இருக்க வேண்டும்.

20. பிரசங்கத்தில் அவன் நயவசனிப்பில்லாத பவுலாக இருக்க வேண்டும். 

21. உபவாசம் அவனது உயிர்த் தோழனாய் இருக்க வேண்டும். 

22. தேவசித்தம் செய்தல் அவனுக்கு விருந்தாக இருக்க வேண்டும். 

23. வயிறு அவனது தேவனாக இருக்கக்கூடாது.

24. பரிசுத்தமே அவனது அலங்காரமாக இருக்க வேண்டும்.

 25. பரலோகமே அவனது ஆஸ்தியாக இருக்க வேண்டும். 


(அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன் . குப்பையுமாக எண்ணுகிறேன் என்று அறிக்கையிட வேண்டும்
- பிலி 3:11 ) 

*தேசத்தின் எழுப்புதலுக்காக இப்படி, அர்ப்பணிக்கப்பட்ட தேவ மனிதனாக என்னை மாற்றும்; என்னை பயன்படுத்தும்*

ஆமென் அல்லேலூயா
KoodaraVaasi

நிலையில்லாத வாழ்வில் நிலைத்து வாழ ஆசைப்படாதே .! சத்தியத்தை அறிந்து கொண்டு நித்தியத்தை நோக்கி பயணத்தை தொடருங்கள் ..!

Post a Comment

Previous Post Next Post