சங்கீதம் 6

 சங்கீதம் 6


(செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்பவர்களின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்)

கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும், உம்முடைய கடுங்கோபத்திலே என்னைத் தண்டியாமல் இரும்.

 என்மேல் இரக்கமாக இரும் கர்த்தாவே, நான் பெலனில்லாமல் போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன. 

என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர். 

திரும்பும் கர்த்தாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும். 

மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? 

என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என்னுடைய கட்டிலை நனைக்கிறேன். 

துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது, என்னுடைய எதிரிகள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போனது. 

அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என்னுடைய அழுகையின் சத்தத்தைக் கேட்டார். 

கர்த்தர் என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என்னுடைய ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார். 

10 என்னுடைய எதிரிகள் எல்லோரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பி உடனே வெட்கப்படுவார்கள்.







DescriptionDo not desire to live in an unstable life. Know the truth and continue the journey towards eternity..!
KoodaraVaasi

நிலையில்லாத வாழ்வில் நிலைத்து வாழ ஆசைப்படாதே .! சத்தியத்தை அறிந்து கொண்டு நித்தியத்தை நோக்கி பயணத்தை தொடருங்கள் ..!

Post a Comment

Previous Post Next Post