'கிம் ஜாங் உன் ஸ்டைலை காப்பி செய்யாதீர்!' - வட கொரியாவில் லேதர் கோட்டுகளுக்கு தடை

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னின் ஸ்டைலை காப்பி செய்வதை தடுக்கும் வகையில் அந்நாட்டு மக்கள் லேதர் கோட்டுகளை அணிய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்நாட்டு அதிபர் கிங் ஜாங் உன் லேதர் கோட்டுகளை அணியத்தொடங்கினார். இதையடுத்து அந்நாட்டில் உள்ள எலைட் மக்களிடையே இவை பிரபலமடைந்தன. மேலும், அதிபர் மீதான தங்களின் விஸ்வாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அதிபர் அணிந்ததைப்போன்ற கோட்டுகளை மக்கள் அணியத்தொடங்கினர்.

மார்க்கெட்டுகளில் விற்கப்படும் போலி லேதர் ஜாக்கெட்டுகளை பொதுமக்கள் அணிவது, அதிபர் கிம் ஜாங் உன்-னின் மதிப்பையும், அதிகாரத்தையும் குறைத்து மதிப்பிடும் வகையில் இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் இப்படியான போலி லேதர் கோட்டுகளை விற்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2019ம் ஆண்டு டிசம்பருக்கு முன்பு வரை அவர் தனது தந்தை மற்றும் தாத்தாக்களின் உடைகளையே பெரும்பாலும் விரும்பி அணிந்துவந்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3E0fdZJ

Post a Comment

Previous Post Next Post