செய்தியாளர்களின் ட்விட்டர் அக்கவுண்ட் இடைநிறுத்திய எலான் மஸ்க்... எதற்காக தெரியுமா?

சிஎன்என் செய்தி நிறுவனத்தில் இருந்து டேனி ஓ' சுலிவன், தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தில் இருந்து டிரு ஹார்வேல், நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனத்தில் இருந்து ரயன் மேக் மற்றும் இன்டிபென்டன்ட் செய்தி நிறுவனத்தில் இருந்து ஆரோன் ருபர் ஆகியோரின் ட்விட்டர் அக்கவுண்ட் முடக்கபட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் உள்ளிட்ட பிரபல வெளியீடுகளின் போட்டியாளரான மாஸ்டோடன் மற்றும் பல பத்திரிகையாளர்களின் கணக்குகளை ட்விட்டர் இடைநிறுத்தியுள்ளது. ட்விட்டரின் புதிய தனியுரிமைக் கொள்கைகளின் ஒரு பகுதியாக, `மற்றவர்களின் நல்வாழ்வுக்கு அச்சுறுத்தல்’ என்ற அடிப்படையில் இந்த அக்கவுண்ட்களை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இவற்றில் மாஸ்டோடன் அக்கவுண்ட் இடைநிறுத்தப்பட்டதன் காரணம் மட்டும் ட்விட்டர் தரப்பில் இன்னும் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. மற்றொருபக்கம் எலான் மஸ்க்கின் தனிப்பட்ட ஜெட் விமானத்தின் நகர்வுகளைக் கண்காணித்த, எலன் ஜெட் அக்கவுண்ட் இந்த வார தொடக்கத்தில் இடைநிறுத்தப்பட்டது.

எலன் ஜெட் ட்விட்டர் கணக்கை பற்றி முன்பொருமுறை பேசிய எலான் மஸ்க், `ஜெட் விமானத்தைக் கண்காணிப்போர் தன் பயனர்களிடம் சுதந்திரமாக பேச ட்விட்டர் அனுமதிக்கிறது’ என்றெல்லாம் கூறியிருந்தார். ஆனால் இப்போது எலன் ஜெட் அக்கவுண்டின் உரிமையாளர் ஜாக் ஸ்வீனி, மஸ்க் மற்றும் அவரது கூட்டாளிகளைப் பின்தொடர்வதைத் தொடங்கியபோது, ட்விட்டர் தனது தனியுரிமை விதிகளை மாற்றியுள்ளது. இந்த விதிகளினால், புதுப்பிக்கப்பட்ட தனிப்பட்ட தகவல் கொள்கை பயனர்கள் வேறொருவரின் நேரடி இருப்பிடத்தைப் பகிர்வது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் ட்விட்டரில் நேரடியாகப் பகிரப்பட்ட தகவல் அல்லது பயண வழிகளின் 3-ம் தரப்பு URL(கள்)க்கான இணைப்புகள் உட்பட, நேரலை இருப்பிடத் தகவலைப் பகிர்வதைத் தடைசெய்வதாகவும் ட்விட்டர் கூறியுள்ளது.

image

அதன் நீட்சியாகவே தற்போது ட்விட்டர் அதன் தனியுரிமைக் கொள்கைகளை மீறியதற்காக சொல்லி, சில பத்திரிகையாளர்களின் அக்கவுண்ட்களைத் தடை செய்துள்ளதென்றும், பத்திரிகையாளர்களுக்கோ அல்லது வேறு எந்தக் அக்கவுண்டுகளுக்கோ விதிவிலக்கு அளிக்காது என்றும் தி வெர்ஜிடம் ட்விட்டர் தெரிவித்துள்ளது.

அதிலும் மாஸ்டோடன் என்பது ஒரு தனி நிறுவனமோ அல்லது ஒரு தனி நபருக்கோ சொந்தமானது அல்ல. மாறாக அது ஒரு பரவலாக்கப்பட்ட சமூக ஊடக தளமாகும், சுயாதீனமாக இயங்கும் சேவையகங்களின் நெட்வொர்க்கால் ஆனது மாஸ்டோன். அப்படிப்பட்ட அக்கௌண்டிற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது, தீங்கு விளைவிக்கும் போக்கு எனக் கூறப்படுகிறது. 

image

எலோன்ஜெட்டின் உரிமையாளர் ஸ்வீனி -- மஸ்க்கைப் பின்தொடர்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர், இப்போது மாஸ்டோடன் சேவையகங்கள் மூலம் செயல்படுகிறார் என்று ஒரு அறிக்கை குறிப்பிடுகிறது. அதனால்கூட மாஸ்டோனுக்கு தடைகள் நிலவலாம் என சொல்லப்படுகிறது.

-ஷர்நிதா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/QBFMq3P

Post a Comment

Previous Post Next Post