உனது அழைப்பை பார்.!
கர்த்தர் ஒரு ஊழியத்தை கொடுத்தால் அதற்கு வேண்டியவர்களை அவரே இனைப்பார் , வேண்டாதவர்களை அவரே தடுப்பார்.!
ஒரு தீர்க்கதரிசியை போஷிக்க ஆறு அறிவு மனிதனை பயன்படுத்த வேண்டுமா அல்லது ஐந்து அறிவு காகத்தை பயன்படுத்த வேண்டுமா என்று வனாந்திரம் வரைக்கும் கொண்டு வந்த தேவனுக்கு தெரியும்.!
சில நேரங்களில் கர்த்தர் கொடுத்த ஊழியத்தில் நாம் நம்பி இணைத்த திறமையான மனிதர்கள் தான் அதை வெறுமையான ஊழியமாக்கி விடுகின்றனர்.!
சிலர் தேவ தரிசனங்களை நிறைவேற்ற மனிதர்கள் பின் சென்று கடைசியில் தரிசனங்களையே இழந்து நிற்கின்றனர்.!
செத்துப் போன சாராளின் கர்ப்பத்தில் ஒரு சந்ததியை உருவாக்க வேண்டும் என்பது கர்த்தரின் திட்டம் என்றால் அதில் ஆகாரை இனைப்பது நம் தவறு.!
... நீ குறையுள்ளவன் என்று அறிந்தும் கர்த்தர் அழைத்திருக்கிறார் என்றால் நீ பார்க்க வேண்டியது உன் குறைவுகளை அல்ல, உன் அழைப்பை..!
தேவைகளை நோக்கி அல்ல தேவனையே நோக்கி நிற்ப்போம் ..! 🙏🙏🙏
Tags:
சோர்ந்து போகாதே .!