இதுவா வாழ்க்கை..?

எது வாழ்க்கை?

💮 *உலகப்பேரழகி  கிளியோபாட்ராவின்  கல்லறை  வாசகம*்.  

"உலகத்திலேயே அழகானப் பிணம்   இங்கே  உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல  வேளை  இவள்  பிணமானாள்,  இல்லாவிட்டால்   இந்தக் கல்லறைக்குள்  ரோமாபுரி  சாம்ராஜ்யமே  பிணமாகியிருக்கும்."

 💮 *மகா அலெக்சாண்டரின்  கல்லறை  வாசகங்கள்*.  

"இந்த  உலகம்  முழுவதுமே  போதாது  என்று  சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி  போதுமானதாக ஆகிவிட்டது."

💮 *ஒரு  தொழிலாளியின் கல்லறை வாசகம*்.

"இங்கே  புதை குழியில் கூட  இவன்  கறையான்களால்  சுரண்டப்படுகிறான்."

💮 *அரசியல்வாதியின்  கல்லறையில்*, 

"தயவு செய்து  இங்கே  கை தட்டி  விடாதீர்கள்,  இவன்  எழுந்து விடக்கூடாது."

💮 *ஒரு  விலை மகளின்  கல்லறை  வாசகம்.*  

"இங்கு  தான்  இவள்  தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு  செய்யாதீர்கள், பாவம்  இனி  வர முடியாது  இவளால்."

இவ்வளவு  தானா வாழ்க்கை...

ஆம்   அதிலென்ன  சந்தேகம். 

ஆனானப்பட்டவர்களின்  ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல். உலகையே  நடுங்க  வைத்த  *ஹிட்லர்*  தன்  சாவைக்கண்டு  நடுங்கி  ஒடுங்கி  அடங்கிப்போனான்.

அவனோடு  கூட்டு சேர்ந்து  சர்வாதிகார ஆட்டம்  போட்ட   *முசோலினி*   இறந்த போது  ரஷ்ய  தலை நகரில்  முசோலினியின் பிணத்தை  தலைகீழாக தொங்க  விட்டு   ஒரு வாரம்  வரை  அத்தனை பொதுமக்களும்   தங்களது  செறுப்பால் அந்தப் பிணத்தை அடித்து  தங்கள் மனக்குமுறலை  தீர்த்துக் கொண்டார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆணவக்காரர்கள் அடங்கிப்போன கதைகளை.

நாம்  *எதை*  ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம்..❓ 

நமது  *பதவியா?
நாம் சேர்த்த சொத்து சுகங்களா?
நமது  *படிப்பா?*
நமது  *வீடா?*
நம்  முன்னோர்களின் *ஆஸ்தியா?*  
நமது  *அறிவா?*   
நமது  *பிள்ளைகளா?
எது  நம்மைக் காப்பாற்றப் போகிறது?

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? 

மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான் ? "
மத்தேயு 16 : 26

இந்த உலகத்தில் நமக்கு முன் பிறந்து எல்லா நன்மைகளையும், கஷ்டங்களையும் அனுபவித்த நம் முன்னோர்கள் தாங்கள் அனுபவித்த வாழ்க்கையை பற்றி  இப்படியாக சொல்கின்றனர் .

மாயை, மாயை, எல்லாம் மாயை 
                                                                    பிரசங்கி ௧ 1 : 2

என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.
                                                                      பிரசங்கி 2 : 11

சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.
                                                                 பிரசங்கி 1 : 14
மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான்; அவன் நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம்.
                                                                    சங்கீதம் 144 : 4
மாயையான மாதங்கள் என்னுடைய சுதந்தரமாகி, சஞ்சலமான ராத்திரிகள் எனக்குக் குறிக்கப்பட்டது.
                                                                    யோபு 7 : 3

இப்படியிருக்கிறதை அரோசிக்கிறேன், எந்நாளும் உயிரோடிருக்க விரும்பேன், என்னை விட்டுவிடும்; என் நாட்கள் மாயைதானே.
                                                                    யோபு 7 : 16

முழு வசனங்கள் கீழே கடைசியில் உள்ளது .
👇👇👇👇👇👇👇👇
*ரத்தம்  சுருங்கி, நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின்   எதுவுமே  நம்மை காப்பாற்றப் போவதில்லை*.

*பசித்தவனுக்கு  உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு  உடை கொடுத்து,  எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள்.*

சுயநலம் கொண்டு தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும், பெண்களும் பெருகி வரும்  சமூகத்தில் வாழும்  நாம்   எச்சரிக்கையோடு  நம்மை  காத்துக்கொள்ள  வேண்டும்.

*ஒரே முறை வாழப்போகிறோம*் , எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம். 

நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம். அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை  செய்வோம்  நன்மைகளை  ஆயிர மடங்காக. 

*பிறரை  வாழ  வைத்து  வாழ்வோம்.*👍🏻👍🏻👍🏻


பரிசுத்த வேதம் சொல்லும் உலகத்தின் வாழ்க்கை :
  1. தாவீதின் குமாரனும் எருசலேமின் ராஜாவுமாகிய பிரசங்கியின் வாக்கியங்கள்.

  2. மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.

  3. சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன?

  4. ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.

  5. சூரியன் உதிக்கிறது, சூரியன் அஸ்தமிக்கிறது; தான் உதித்த இடத்திற்கு அது திரும்பவும் தீவிரிக்கிறது.

  6. காற்று தெற்கே போய், வடக்கேயுஞ்சுற்றி, சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும்.

  7. எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.

  8. எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது; அது மனுஷரால் சொல்லிமுடியாது; காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை.

  9. முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை.

  10. இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள பூர்வகாலங்களிலும் இருந்ததே.

  11. முன் இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை; அப்படியே பின்வரும் காரியங்களைப்பற்றியும் இனிமேலிருப்பவர்களுக்கு ஞாபகம் இராது.

  12. பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலருக்கு ராஜாவாயிருந்தேன்.

  13. வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என் மனதைப் பிரயோகம்பண்ணினேன், மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்கு தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்.

  14. சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.

  15. கோணலானதை நேராக்கக் கூடாது, குறைவானதை எண்ணிமுடியாது.

  16. இதோ, நான் பெரியவனாயிருந்து, எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஞானமடைந்து தேறினேன்; என் மனம் மிகுந்த ஞானத்தையும் அறிவையும் கண்டறிந்தது என்று நான் என் உள்ளத்திலே சொல்லிக்கொண்டேன்.

  17. ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என் மனதைப் பிரயோகம்பண்ணினேன்; இதுவும் மனதுக்குச் சஞ்சலமாயிருக்கிறதென்று கண்டேன்.

  18. அதிக ஞானத்திலே அதிக சலிப்புணடு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன்.
  19. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.

  20. பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு; நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு;

  21. கொல்ல ஒரு காலமுண்டு, குணமாக்க ஒரு காலமுண்டு; இடிக்க ஒரு காலமுண்டு, கட்ட ஒரு காலமுண்டு;

  22. அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு; புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு;

  23. கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலமுண்டு; தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு;

  24. தேட ஒரு காலமுண்டு, இழக்க ஒரு காலமுண்டு; காப்பாற்ற ஒரு காலமுண்டு, எறிந்துவிட ஒரு காலமுண்டு;

  25. கிழிக்க ஒரு காலமுண்டு, தைக்க ஒரு காலமுண்டு; மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு;

  26. சிநேகிக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு; யுத்தம்பண்ண ஒரு காலமுண்டு, சமாதானம்பண்ண ஒரு காலமுண்டு.

  27. வருத்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன?

  28. மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன்.

  29. அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.

  30. மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன்.

  31. அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்துத் தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.

  32. தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடே ஒன்றும் கூட்டவுங் கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங் கூடாது; மனுஷர் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.

  33. முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்னமே நடந்தது; நடந்ததையோ தேவன் விசாரிப்பார்.

  34. பின்னும் சூரியனுக்குக் கீழே நான் நியாயஸ்தலத்தைக் கண்டேன், அங்கே அநியாயம் இருந்தது; நீதி ஸ்தலத்தையும் கண்டேன், அங்கே அநீதி இருந்தது.

  35. சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்க்கிறார் என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.

  36. மனுபுத்திரர் தாங்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்களென்பதை அவர்கள் அறியும்படிக்கு தேவன் அவர்களைச் சோதிக்கிறாரென்று நான் மனுஷருடைய நிலைமையைக்குறித்து என் உள்ளத்திலே எண்ணினேன்.

  37. மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே இவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.

  38. எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.

  39. உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழப் பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்?

  40. இப்படியிருக்கிறபடியால், மனுஷன் தன் செய்கைகளில் மகிழ்ச்சியாயிருக்கும் நன்மையையேயல்லாமல், வேறே நன்மையில்லையென்று கண்டேன்; இதுவே அவன் பங்கு; தனக்குப் பின்வரும் காரியங்களைக் காணும்படிக்கு அவனைத் திரும்பிவரப்பண்ணுகிறவன் யார்?

இந்த காரியங்களை குறித்து மேலும் தெரிந்துகொள்ளவும், தொடர்ந்து படிக்கவும் பரிசுத்த வேதாகமத்தில் பிரசங்கி அத்தியாயத்தை படிக்கவும்...!

Post a Comment

Previous Post Next Post