அதோ, அந்த அடிச்சுவடுகள்..!
நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது, அதினால் உமது
பிரமாணங்களை கற்றுக்கொள்கிறேன்,
சங்கீதம் 119 :71.
இதினிமித்தம் என்தாய், தகப்பன், ஆசிரியர் அனைவரும் என்னை வெறுத்து
அன்பற்ற முறையில் என்னை நடத்திவந்தார்கள். நான் கல்வி பயின்றுவந்த வகுப்பில் என்னைப்போன்ற
துர்பிள்ளைகளை என்னுடன் உட்காரவைப்பார்கள்.நல்லபண்பும், நன்றாகபடிக்கும் பிள்ளைகளை
என்னுடன் பழகாவண்ணம் வகுப்பு ஆசிரியர் நடத்துவார். எப்போதும் வகுப்பில் பின்புறம் உள்ளசுவர்
புறமாக பெஞ்சில் உட்காரவைப்பார்கள். கொள்ளுமந்தி என்கிற வயதுமுதிர்ந்தவர்கள் எங்கள்
குடும்ப ஜோசியராக இருந்துவந்தார். எனக்கென்று ஒரு ஜாதகம் எழுதிவைத்திருந்தார்கள், என்
ஜாதகத்தை பார்க்கும் பொழுதெல்லாம் என்னைக்குறித்து தீயதாகவே சொல்லுவார். திரு.அண்ணாமலை
மூலம் குடும்பத்திற்கு கெட்டபெயர் நேரிடும், அவர் வருங்காலத்தில் நல்லதொழில் செய்யாமல்
இழிவான தொழில்தான் செய்வான், குடும்பத்திற்கு உதவியாக இருக்கமாட்டான் என்று குடும்பஜோசியரும்,
இரவு ஜாமத்தில்வரும் கோடாங்கியும் கூறுவார்கள். ஜோசியர் எங்கள் இடத்திற்கு வருவது எனக்கு
சற்றும் பிடிக்காது காரணம் எப்போதும் தீயதாகவே ஜோசியம் சொல்லுவதால் ஜோசியர்கள் வந்து
என்ஜாதகத்தை பார்ப்பதற்கு முன்பாகவே என்ன சொல்லுவார்கள் என்று என் மனதில் என்ன நினைக்கின்றேனோ
அதைத்தான் அவர்கள் கூறுவார்கள். குடும்ப உறவினர்கள் வந்தாலும் என்னிடத்தில் அன்பு செலுத்தமாட்டார்கள்,எப்பொழுதும்
என் மூத்தசகோதரன் திருஅ.சுந்தரதாஸ் அவர்களை குறித்துதான் கண்ணியமாக கூறுவார்கள். தாய்தகப்பனுக்கு
உதவிசெய்து ஆதரிப்பவர் என்று கூறுவார்கள் என்னை இழிவுபடுத்தி என் மூத்தசகோதரனை பெருமைப்படுத்தி
ஜோசியம் கூறுவது எனக்குமிகுந்த எரிச்சலையும், கோபத்தையும் உருவாக்கும் இருப்பினும்
நான் என்ன செய்யக்கூடும்.
1999 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 -ஆம் தேதி ஓமலூர் வட்டத்திற்கு உரிய ஒரு இந்து கோவிலில் திருவிழா நடந்தது. திருவிழாவுக்கு
சென்று விக்கிரகத்தை வழிபட்டுவருவதற்கு என்னை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு, அனைவரும்
கோவிலுக்கு சென்றுவிட்டார்கள். தனித்திருந்த என் உள்ளம்பொங்க துக்கமும், வெறுப்பும்
ஏற்பட்டு, மரணதிற்கேதுவான நாட்டுமருந்து தயார் செய்து குடித்துவிட்டு என் படுக்கையில்
கால், கரங்களை ஒழுங்காக வைத்து படுத்துக்கொண்டு சற்று நேரத்திற்குள் மரித்துவிடுவேன்
என்ற நினைவுடனிருக்கையில், என் மரணத்திற்கு நான் குடித்த விஷமருந்து வாந்திமூலம் வெளியேவந்துவிட்டது.
அருகிலுள்ளவர்கள் ஓடி வந்து எனக்கு உதவி செய்து வைத்தியம் செய்தார்கள். ஆண்டவரின்
அநாதி தீர்மானத்தின்படி நான் உயிர்தப்பி வாழகிருபை செய்தார். நாளுக்கு நாள் குடும்பத்தில்
வறுமை அதிகரித்தது. மனது சஞ்சலமுற்று வேதனை அடைந்து வாழ்ந்து வந்தேன். 1959-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு நாள் எங்கள் கிராமத்தின் வழியில்
சுவிசேஷகர் திரு.தங்கையா என்பவரைப்பார்த்து, நான் கிறிஸ்தவனாக மாற என்ன செய்யவேண்டு
மென்றுகேட்டேன். அவர் மறுமொழியாக வேதகலா சாலைக்கு சென்று இரண்டு ஆண்டுகள் வேதப்பயிற்சி
பெற்றுவந்தால் கிறிஸ்துவை அறிந்து, கிறிஸ்தவனாய் மாறுவாய், பிறகு திருப்பணியும் செய்யலாம்.
அப்போது மாதம்
60-ரூபாய் உதவி பெறலாமென்று தெளிவாக கூறிய அந்த வார்த்தை எனக்கு
நம்பிக்கையையும், ஆறுதலையும் கொடுக்க, வேதகலாசாலைக்குச் சென்று பயிற்சி பெறவிருப்பம் தெரிவித்தேன். வேதபயிற்சி
பெற உடனே ஆவன செய்து பயிற்சி பள்ளியில் என்னை சேர்த்துக்கொண்டார்கள்.
வேதப்பயிற்சி நாட்களில் உண்டான சிறப்பு அனுபவங்கள்:-
1959-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி காலை-9 மணியளவில் இந்திய சுவிசேஷ ஐக்கிய சபையின் நிர்வாகத்தினரால் இயங்கிவந்த வேதகலாசாலையில் பயிற்சிபெற சேர்த்துகொள்ளப்பட்டேன். மூன்று மாதங்களுக்குப்பின் யாத்திராகமம் புத்தகத்தில் உள்ள சம்பவங்களை கேட்கவும், தியானிக்கவும் தேவகிருபை கிடைக்கப்பெற்றேன். அடிமைத்தனத்தில் 400-ஆண்டுகாலமாக நடத்தப்பட்ட மக்களை மீட்கவும் கானான் தேசத்திற்கு அழைத்துச்செல்ல தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்டு, மோசேயை அழைத்து பயன்படுத்திய விதங்கள் என் உள்ளத்தில் மின்சக்தியைப் போன்ற இறைசக்தி என் உள்ளத்தில் கிரியை செய்தது. அதின் பயனாக என் உள்ளத்திலிருந்த உலகப்பிரகாரமான நினைவுகள், சிற்றின்பங்கள், பிழைப்புக்கு அடுத்தநினைவுகள் அனைத்தையும் குப்பைகூளங்களை வெளியில் அப்புறப்படுத்துவது போல் அப்புறப்படுத்தப்பட்டதையும், சம்பளம் பெறுவதற்காக வேதபயிற்சிக்கு வந்ததையும் நினைத்து வெட்கப்பட்டு துக்கமடைந்தேன். அடிமை வாழ்விலிருந்து இஸ்ரவேல் மக்களை விடுவித்து கானானுக்குள் செல்ல வழிநடத்திவந்தது போல், என் இனத்தையும் ஓமலூர்வட்டத்தில் உள்ள மக்களையும் விக்கிரகவழிபாட்டில் இருந்து விடுவித்து மெய்யான உயிருள்ள தேவனாகிய கர்த்தரைச்சேவிக்க, வழிநடத்த ஆவியானவர் என்னை பக்குவப்படுத்தவும், வழிநடத்தவும் தூண்டிவிட்டார். பயிற்சி காலத்தில் வேதபயிற்சி கொடுத்துவந்ததான சங்கை.ராஜா ஸ்டீபன் அவர்கள் எனக்கு பொறுப்பான பணி ஒன்று செய்ய கட்டளையிட்டார். அது என்ன வென்றால் அவர்கள் 10 சீமைநாய்களை வளர்த்து வந்தார்கள். ஒவ்வொருநாளும் அவைகளுக்கு உணவு கொடுக்கவும், குளிப்பாட்டி, துண்டால் ஈரத்தைதுடைத்து, பவுடர்போட்டு, சீப்பால்சீவி அலங்கரிக்கும் பணி எனக்கு கொடுக்கபட்டது. முதலாவது தேவனாகிய கர்த்தர் என்னை பத்துநாய்களுக்கு மேய்ப்பனாக அமர்த்தி பயிற்சிகொடுத்தார். அப்பணிகளை முறுமுறுப்புகளுடன் செய்தாலும், செம்மையாக செய்துவந்தேன். மோசே இஸ்ரவேல் ஜனங்களை விடுவித்து, அழைத்துச் செல்வதற்கு முன் பார்வோனின் அரண்மனையில் 40 ஆண்டுகள் பயிற்சி, 40 ஆண்டுகள் வனாந்திரத்தில் ஆடுகளை மேய்க்கும் மேய்ப்பனாக அமர்த்தினார். இரண்டு பயிற்சிகளிலும் தேர்ச்சி அடைந்தபின் மக்களைவழிநடத்தும் மேய்ப்பனாக தேவன் அவரை தெரிந்துகொண்டார். இந்த எண்ணங்கள் மனதில் கடல் அலைகளைப் போல என் இரத்தத்தில் ஓடிக்கொண்டிருந்ததை இந்நாட்களிலும் உணர்கிறேன். விடுதலையின் பணியில் ஓருவனைஈடுபடுத்தி கர்த்தர் அழைப்பாரானால் மோசே பெற்ற பயிற்சி போல ஒவ்வொருவரும் பெற்றால்தான் மேலான மகிமையான ஊழியத்தில் நிலைத்திருந்து மாதிரியான வாழ்க்கை வாழ்ந்துகாட்டி, ஊழியம் செய்யக்கூடும். இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள். ஏனெனில் கிறிஸ்துவும் உங்களுக்காக பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளை தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியை பின்வைத்துப்போனார். 1பேதுரு 2:21 1962-ஆம் ஆண்டு மே மாதம் சேலத்தில் விசேஷித்த எழுப்புதல் கூட்டம் ஒன்று நடந்தது. கூட்டத்தில் கலந்து சென்று சகோதரர் பால் ஆசிரியர் அவர்களை தேவனாகிய கர்த்தர் பயன்படுத்தினார். குருடர்கள் பார்த்தார்கள், செவிடர்கள் கேட்டார்கள் மாபெரும் அற்புதங்கள் நடப்பதை என் கண்களால் கண்டேன்.எனக்குள் வளர்ந்து வந்த விசுவாசம் வேர்பிடித்து உறுதிப்படவும், கிரியை செய்யவும் ஆரம்பித்தது. அந்நாட்களில் பரிசுத்த ஆவியானவர் என்னை நிறைத்து அபிஷேகித்தார். தேவன் என்னை ஊழியத்திற்கு அழைத்த அழைப்பை பெற்றுக்கொண்டேன். அன்று முதல் ஒவ்வொருநாளும் என் சொந்த ஜனங்களைக்குறித்தும், ஓமலூர் வட்டாரத்தில் உள்ள மக்களைக்குறித்தும் அவர்கள் இயேசு தேவனை ஏற்றுக்கொள்வதற்கு நான் சென்று சுவிசேஷப் பணி செய்யவேண்டுமென்ற ஆவல் அதிகரித்துவந்தது. ஊக்கமாக பாடுபட்டு ஜெபித்துவந்தேன். வேதபயிற்சி முடித்து சேலம் IGL-அமைப்பின் முன்னாள் தலைவர் சங்கை.ராஜா ஸ்டீபன் அவர்கள் இல்லத்தில் இருந்து கொண்டு, வீட்டு வேலைகளை செய்துகொண்டு, CAR-துடைப்பது, நாய்களை பராமரிப்பது, விசேஷமாக சுவிசேஷபணி செய்துவந்தேன் 1962-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி அன்று திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறி தாலுகாவிலுள்ள சந்தைகளுக்குச் சென்று சுவிசேஷப்பணி செய்வதற்காக வந்த குழுவுடன் என்னை சேர்த்துவிட்டார்கள். Rev.ஸ்மித், சகோ.P.சாமுவேல் (தற்போதுள்ள பெத்தேல் ஸ்தாபனத்தலைவர்) சங்கை Pr.ஜாஸ்மபன்ஸ் ரெயின் ஹார்ட் USA- சகோ மாசிலாமணி, சங்கை.ஞானதாஸ் ஆகிய ஊழியர்கள் இக்குழுவில் பணி செய்தவர்கள். அக்டோபர் 5-ஆம் தேதி சுவிசேஷ குழுவினருடன் சேர்ந்து புறப்பட்டு ஓரு Ford van-ல் சென்றோம். அங்கு செல்லும் போது நான் உடுத்திக் கொண்டிருக்கும் உடையுடன் (பேண்ட்&சர்ட்) ஒரு வேட்டி மட்டுமே எடுத்துச்செல்ல முடிந்தது. தொட்டியம் என்கிற இடம் கடந்த பின் வேனில் ஒருவிதமான சத்தம் இஞ்சின் அடிப்பாகத்தில் வந்தது. வண்டியை நிறுத்தினார்கள். வண்டியை ஓட்டுவதற்கு டிரைவர் இல்லை ராஜாஸ்டீபன் அவர்கள் ஓட்டிக்கொண்டு வந்தார்கள். எனவே அவர்கள் உடனே என்னை இஞ்சின் அடிப்பகுதியில் பார்த்து பழுது பார்க்க என்னை கீழே தரையில் படுத்து சரிப்படுத்த கூறினார்கள். என் மனதில் ஒரே போராட்டம் தரையில் படுத்து பழுதுபார்த்தால் உடை அழுக்காகும் மாற்றிக்கொள்வதற்கு மாற்று வஸ்திரம் இல்லை என்ன செய்வதென்று விளங்கவில்லை கீழ்படிந்து தரையில் படுத்து பழுதுபார்த்துவிட்டு உடையில் படிந்திருந்த மண்ணைத்தட்டி அப்புறப்படுத்திவிட்டு வாகனத்தில் அமர்ந்து பிரயாணம் செய்து முசிறியை அடைந்தோம் முசிறி பகுதியில் காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது நன்றாக குளித்து, உடையை துவைத்து இரவு நேரத்தில் காயவைத்துவிட்டு நான் படுத்துக்கொண்டேன். காலையில் எழுந்து வேதம்வாசித்து, ஜெபித்த பின் ஒவ்வொருநாளும் வாகனத்தை தண்ணீரால் கழுவி சுத்தப்படுத்தி துடைப்பேன். மதிய உணவுக்குப்பின் சுவிசேஷம் குழுவினருடன் சேர்ந்து, திரளானமக்கள் கூடிவருகின்ற சந்தைக்கு ஒவ்வொரு நாளும் சொல்லுவோம். குழுவில் உள்ள அனைவரும் உற்சாகமாக ஆத்மபாரத்துடன் சுவிசேஷ பிரதிகளை கொடுத்து சுவிசேஷம் அறிவிப்போம். 7-8 மணிக்குள் தங்கும் இடத்திற்கு வந்துசேருவோம் பதினைந்து தினங்கள் முடிந்தபின் திருச்சி வந்து அப்போஸ்தலர் திருச்சபையில் போதகராக இருக்கிற பாஸ்டர்.ஸ்டீபன்ஸ்மித் அவர்கள் இல்லத்தில் 15 தினங்கள் முகாமிட்டு ஊழியம் செய்துவந்தோம். என்னை ஒரு நாள் நாங்கள் தங்கியிருக்கின்ற தளத்தில் பாதுகாப்பிற்காக விட்டுவிட்டு சந்தை ஊழியத்திற்கு சென்றுவிட்டார்கள். ஒவ்வொரு நாளும் விற்பனை செய்யும் புத்தகங்களுக்குரிய பணத்தொகை வைக்கும்பெட்டி ஒன்று உண்டு. பெட்டியை பூட்ட மாட்டார்கள் காரணம் தங்கியிருக்கும் அனைவரும் ஊழியர்கள், தேவ ஊழியர்கள் என்ற நம்பிக்கையினால் பூட்டுவதில்லை. அன்று அது எனக்கு சோதனை ஆகிவிட்டது. என் தேவை என் மனதை உந்தித்தள்ளியது போல இருந்தது உடனே எழுந்து துணிவிற்பனை கடைக்கு சென்று ஒருபேன்ட் & சர்ட்டிற்கு என்ன தொகை ஆகும் என்று கேட்டேன், ரூபாய்-30 ஆகும் என்று கூறினார்கள். தங்கியிருக்கும் இடத்திற்கு வேகமாக வந்து தங்கிவிட்டேன். பணப்பெட்டியில் கையை விட்டேன்,பணத்தை பொருக்கி கையில் பிடித்து, பணப்பெட்டியிலிருந்து கையை வெளியே எடுக்கமுடியவில்லை. காரணம் யாரோ ஒருவர் என்கரத்தை பிடித்துக்கொண்டது போலிருந்தது. மனம்பதறியது, கை நடுங்கியது, சரீரம் ஆட்டம் கொண்டது. தெய்வபயம் என்னை சூழ்ந்துகொண்டது உடனே கரத்தால் பிடித்திருந்த ரூபாய் நோட்டுகளை விட்டேன். பிறகு என் கரத்தை வெளியே எடுக்கமுடிந்தது. ஒரே உடை ஒரு வேஷ்டியுடன் ஒருமாத ஊழியத்தை முடிக்க தேவன் கிருபை செய்தார். இரவு நேரங்களில் உடையை துவைப்பது, பகலில் உடுத்துவது, ஒரு மாதம் முழுவதும் ஒரே உடை உடுத்தி இருப்பதையும் எனக்கென்று பெட்டி அல்லது சூட்கேஸ் இல்லாமல் இருப்பதையும் அப்போஸ்தல சபை பாஸ்டர்.டீபன்ஸ்மித் கவனித்து வந்திருந்தார்கள். ஒரு நாள் இரவு உணவு உட்கொண்ட பின் தனிமையில் என்னுடன் உரையாடினார்கள். என்சாட்சி, குடும்ப சூழ்நிலைகளை அறிந்து கொண்டார்கள். குடும்பமக்கள், என் கிராமத்து மக்கள் யாவரும் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளவே தேவன் என்னைத் தெரிந்து கொண்டுள்ளார். நீங்கள் முகாம் முடித்து சென்றபின் உன் சொந்தஊரில் ஊழியம் செய்து கர்த்தருடைய வருகைக்கு ஒருகூட்ட ஜனங்களை ஆயத்தம் செய், திருச்சபை ஸ்தாபிக்க கர்த்தர் உதவிசெய்து வழிநடத்துவார் என்று கூறி என் உள்ளத்தில் ஆத்துமபாரத்தை எழுப்பிவிட்டார். அன்று இரவு என் ஜெபத்தில் பரிசுத்த ஆவியானவர் என் சொந்தகிராமத்திற்கு சென்று ஆத்தும ஆதாயம் செய்யவும், திருச்சபை ஸ்தாபிக்கவும் உறுதியான விசுவாசம், மகிழ்ச்சியையும் என் உள்ளத்தில் நிரப்பிவிட்டார். அதே நினைவுகள்தான் இரவு, பகல் என்று மனதில் காணப்பட்டது. நவம்பர் மாதம் 2-ஆம் தேதி சேலம் வந்துசேர்ந்தோம். நவம்பர் மாதம் 3-ஆம் தேதி காலை -9 மணி அளவில் என் வேலைகள் அனைத்தும் முடித்து விட்டு சங்கை.ராஜா ஸ்டீபன் அவர்களை அணுகி, ஐயா இன்று என்னை என் சொந்த கிராமத்திற்கு அனுப்பிவையுங்கள் நான் போகிறேன். என்கிராமத்தில் ஊழியம்செய்து சபை ஒன்று ஸ்தாபிக்க வேண்டும் என்று பணிவுடன் என்மனதில் நினைவுகளை சமர்ப்பித்தேன். அப்போது எனக்கு வயது 20, நீ எப்படி அங்கு ஊழியம் செய்வாய்? யார் உதவிசெய்வார்? எப்படிசாப்பிடுவாய்? என்று வினவினார். என் பதில் ஐயா, நான் விசுவாசத்தில் ஊழியம்செய்வேன். கிராமங்களுக்கு சென்று சுவிசேஷம் அறிவிப்பேன், நோயாளிகளைப் பார்த்து ஜெபம் செய்வேன், கர்த்தர் சுகம் கொடுப்பார். அப்போது அவர்கள் காணிக்கை கொடுப்பார்கள் அதை கொண்டு சாப்பிட்டு ஊழியம் செய்வேன் என்று கூறினேன். அந்ததருணத்தில் ஓமலூரில் உள்ள IGL சபையில் 3 ஊழியர்கள் திருப்பணி செய்துவந்தார்கள். ஓமலூர் ஆலயத்திற்கு நான் சென்றபோது 3 ஊழியர்களும் 2 ஊழியக்குடும்பத்தினர் மட்டுமே ஆராதனையில் பங்கு பெற்றிருந்தார்கள் ஏறக்குறைய மூன்று ஊழியராக 5 ஆண்டுகாலம் ஊழியம் செய்துவைத்திருந்தார்கள், ஆத்தும ஆதாயம் இல்லாமல் இருந்தது எனவே சங்கர் ராஜாஸ்டீபன் அவர்கள் ஓமலூரில் உள்ள 3 ஊழியர்களும், ஏராளமாக ஆத்துமாக்களை ஆதாயம்படுத்தி விட்டார்கள். நீ மட்டும் தான் இருக்கிறாய் போ என்று அலட்சியமாககூறி அனுப்பிவைத்தார்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி கூறிவிட்டு நான் என் சொந்தவீடு உள்ள ஆர்.சி.செட்டிப்பட்டி கிராமத்திற்கு 1962 ஆம் ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி மாலை வந்துசேர்ந்தேன்.
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்து கதறுகிறது
சங்கீதம் 42:1.
1. ஏரி அருகில் உள்ள வயல்,வரப்பின்
மேல் அடிமையும் நம் தேசப்பிதா காந்திஜி அவர்களுடன் உட்கார்ந்து வேதாகம காரியங்களை பேசிக்கொண்டிருந்தோம்.
2.
அதே வயல்,வரப்பின் மீது
அடிமையுடன் நம்நாட்டு முதல் பிரதமர் நேருஜி அவர்கள் இறைவன் இயேசு கிறிஸ்துவைகுறித்து
சத்தியங்களை உரையாடினார்கள்.
3.
மூன்றாவது நாள் நான்
ஜெபித்துவந்த ஏரியில் பிரம்மாண்டமான திமுக மாநாடு ஒழுங்குசெய்து கலைஞர் கருணாநிதி அவர்கள்
பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏரி இடம் கொள்ள திரள் கூட்டம் கலைஞர் கருணாநிதி அவர்கள்
என்னை மேடையின் மீது நிற்கச்செய்து மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்திவைத்து சகோதரர்.ஜோசப்
அவர்கள் இயேசு ஆண்டவரைகுறித்து அருளுரை ஆற்றுவார்கள் என்று கூறி மறைந்து விடுகிறார்கள்.
மேற்கண்ட மூவரும் எனக்கு சம்பந்தமுமில்லை, பார்த்ததுமில்லை, கனவிலும் அவர்கள் அருகில்
செல்வதற்கு எனக்கு தகுதியில்லை விசேஷமாக திமுக-தலைவர் கருணாநிதி அவர்கள் நான் விரும்பாதவர்களில்
அவர் ஒருவர் காந்திஜி, நேருஜி ஆகிய உயர்ந்த தலைவர்களுக்கும், எனக்கும், மலைச்சிகரத்துக்கும்,மகுடிக்கும்
உள்ள தூரம் அல்லது வித்யாசம்.
அவர்களை கனவில் கண்டு உறவு கொண்டது பாறையில் நார் உரித்து கயிறு
திரித்த சம்பவமாயிருக்கிறது. இன்று வரை எனக்கு மேற்கண்ட தரிசனம் புரியவில்லை ஆனால்
என்னால் மறக்கவும் முடியவில்லை. என் மனதில் எழுதிவைத்த பத்திரம் போல் பத்திரமாக பதிந்துவிட்டது.
காந்தி, நேரு, மறைந்து விட்டாலும் அவர்களுக்கு ஒப்பான தலைவர்களுக்கு சத்தியம் கூறி
சரித்திரம் படைக்க எதிர்பார்த்திருக்கிறேன்.
1964 ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதியன்று எங்கள் கிராமத்திற்கு வெகு மிக அருகில் “பல்பாக்கி” கிராமம்
உண்டு. அக்கிராமத்தில் ஓங்காளி அம்மனுக்கு திருவிழா நடந்துகொண்டிருந்தது. மாலை பொழுதில்
அங்கு சென்று சுவிசேஷம் அறிவிக்க ஆயத்தப்பட்டோம். வெளியூர்களிலிருந்து திரள், திரளான
மக்கள் கூடிவருவார்கள் கோயிலுக்கு சற்று தூரத்தில் ஒதுக்குப்புறத்தில் ஓரமாகநின்று
“தாசரே இத்தரணியை அன்பாய்” என்கிற பாடலை மேளம், டேமரின் தட்டி பாடினோம். அப்பொழுது
பீடி விளம்பரத்திற்கு டான்ஸ் ஆடி, மக்கள் கூட்டத்தை சேர்த்த, பீடி விற்பனை செய்யவந்த
நடனக்காரர்கள் எங்கள் பாடலை கேட்டு நிற்க முடியாமல் நடனமாடினார்கள்.
அப்போது ஓங்காளியம்மன் பொம்மை உருவத்தை தேரில் வைத்துக் கொண்டுவந்து
கொண்டிருந்தார்கள். தேரைச்சுற்றி பார்த்துகொண்டிருந்த கூட்டம் எங்கள் பாடலை கேட்டு,
பீடி விளம்பரத்திற்கு வந்தவர்கள் சுவிசேஷ பாடலுக்கு நடனமாடியதை பார்த்த திரள் கூட்டம்
எங்களை சூழ்ந்து நின்று விட்டார்கள். சில ஆண்டுகளாக இக்கூட்டத்தில் சுவிசேஷம் அறிவித்தோம்.
ஒருமுறை தெருக்கூத்து நாடகநடிகன் ஆண்டவரை ஏற்றுக்கொள்ள முன்னுக்கு வந்து கர்த்தரை ஏற்றுக்கொண்டான்
சம்பவம் அனைவருக்கும் தெரியவந்தது. இம்முறை தேர்பவனியில் இருந்து திரள் கூட்டம் எங்களை
சூழ்ந்திருந்ததை பார்த்த திருவிழா குழுத்தலைவர் என்னிடத்தில் வந்து நீங்கள் இங்கு வந்து
சில ஆண்டுகளாக கிறிஸ்துவைப் பற்றிய பிரசாரம் செய்வதால் எங்கள் கோயிலுக்கு வரும் கூட்டம்
குறைந்துவிட்டது. எனவே ஒழுக்க முறையோடு கூறுகிறோம் இனி எப்போதும் இங்கு வரக்கூடாது.
அப்படிவந்தால் உங்களுக்கு நேரிடும் சம்பவம் அபாயமாயிருக்கும் என்று கூறியதினிமித்தம்
நாங்கள் தொடர்ந்து செல்லவில்லை.
ஓமலூரில் உள்ள கருப்பணம்பட்டி, கோட்டகவுண்டன்பட்டி கிராமங்களுக்கு 5,
6 கிலோமீட்டர்தூரம் நடந்து சென்று சுவிசேஷ ஊழியம், ஓய்வுநாள் பாடசாலை
நடத்திவருவேன். ஒவ்வொரு ஓய்வுநாள் ஆராதனைக்கும் ஓமலூர் சென்று ஆராதனை முடிந்தபின் கோட்டகவுண்டன்பட்டி
கிராமத்திற்கு நடந்து சென்று சிறுபிள்ளைகளுக்கு ஓய்வுநாள் பாடசாலை நடத்திவிட்டு மாலை 5 மணி அளவில் வீடுவந்து சேர்வேன். மதிய உணவு உண்ணுவதற்கு வசதியிருக்காது.
சிறப்பாக ஊழியம் செய்து தேவனைதுதிப்பது எனக்கு சத்துணவாக இருக்கும்.
ஒருசமயம் எங்கள் கிராமத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தூரத்திலுள்ள வேடப்பட்டி கிராமத்திற்கு கதாகால ஜெபத்தின்
வாயிலாக சுவிசேஷம் அறிவிக்க என்னுடன் 4-சகோதரர்களை அழைத்துக்கொண்டு வாத்திய கருவிகளுடன்
பேருந்தில் பிரயாணம் செய்து அந்தகிராமத்திற்கு சென்றோம். மக்களுக்கு பாடல்கள் இசைக்கருவிகள்
மூலம் சுவிசேஷம் அறிவித்தோம். இரவு 10 மணிக்கு கூட்டம் முடிந்தது, அந்த நேரத்தில் பேருந்து இல்லாததால் நடந்தே சென்றோம்.
அனைவருக்கும் வயிற்றில் பசி அலைபோல் மாறியது இசைக்கருவிகளின் பாரம் ஒருபுறம், வழியில்
கடைகள் ஒன்றும் இல்லை.
ஆண்டவரே எங்களுக்கு உணவுதாரும் என்ற வேண்டுதல் ஏக்கத்துடன் தளர்ந்த
நடைபோட்டு சென்றுகொண்டிருந்த போது அப்பாதையில் சென்றிருந்த கரும்புலாரியிலிருந்த சில
கரும்புகள் வழிப்பாதையில் விழுந்து கிடந்தது. நல்ல நிலா ஒளியில் கண்பார்வைக்கு எளிதாக
இருந்ததால் ஒவ்வொருவருக்கும் நீளமான கரும்புகளை எடுத்து கடித்து, ருசித்து இறைவனுக்கு
நன்றி கூறி வீடுவந்து சேரும்வரையிலும் அந்தகரும்பு எங்களுக்கு உணவானது.
கரும்பு உணவு இரவு நேரத்தில் கிடைத்ததை நாங்கள் நினைக்கும் போது
எங்களுக்கு தேவபலனாக இருந்தது.“கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து
பட்டினியாயிருக்கும் கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒருநன்மையும் குறைவுபடாது” சங்கீதம் 34 :10. இந்த ஜீவ வார்த்தையின்படி
தேவனாகிய கர்த்தரை நம்பி பணிசெய்கிற பக்தனுக்கு குறைவு ஏற்படாமல் நன்மைசெய்து பக்தர்களை
தாங்கி,ஏந்தி வருவதை பின்வரும் சம்பவங்கள் மூலம் அறியலாம்.
மாதம்தோறும் ரூபாய் 30/- ஊழியம் இதில் தசமபாகம் ரூ3/-,பிஎஃப் ரூ 3 /-, ஆக ரூ 6/- போக 24 பெருமிதத்துடன் பெற்றுவருவேன். புதிதாக ஆண்டவரை ஏற்றுக்கொண்ட சகோதரன் தானியேல்
என்பவர் டி.பி-வியாதியில் பிடிக்கப்பட்டு
தொழில் செய்யமுடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்.
1964 ஆம் ஆண்டு 1லிட்டர் பால் 80 பைசாவிற்கு எங்கள் கிராமத்தில்
கிடைக்கும். தினமும் ¼ லிட்டர் பால் குடிப்பதற்கு உதவிசெய்து வந்தேன்.
மாதம் 6/- ரூபாய் தானியேல் பால்குடிப்பதற்கு கொடுத்துவிடுவேன். எஸ்தர் என்கிற சகோதரிக்கு
பேறுகாலத்தில் இரட்டை குழந்தை பிறந்தது. சகோதரியின் கணவர் சரியாக கவனித்துக் கொள்ளாததை
அறிந்து குழந்தைக்கு பண உதவிசெய்தேன். அநேக நாட்கள் என் குடும்பத்தினருக்கு தெரியாமல்
நான் உண்ணயிருக்கும் உணவை மறைவாக எடுத்துச்சென்று எஸ்தர் சகோதரிக்கு கொடுத்துவிட்டு
நான்பட்டினியாக இருந்திருக்கிறேன்.
அத்தருணங்களில் என் உள்ளம் இறைவனின் அன்பினால் பூரித்திருக்கும்
இக்காலங்களில் எங்கள் இல்லத்திலும் உணவு பற்றாக்குறை, வறுமை வாட்டியது. ஒருநாள் என்
மனதில் எண்ணம் ஒன்று உதயமாகிறது எனவே சங்கை.ராஜாஸ்டீபன்ஸ் அவர்களை அணுகி எங்கள் குடும்பத்தில்
உணவு பற்றாக்குறையால் அதிகம் கஷ்டப்படுகிறோம், எனவே கொடுக்கும் உதவித்தொகையுடன் ரூபாய் 5 கூட்டிக்கொடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொண்டேன். அவர்
தாராளமாக உதவி செய்யும் மனமுடையவர் ரூபாய் 5 அவருக்கு பெருந்தொகையுமல்ல. நான் கேட்டமாத்திரத்தில்
அவர் செய்தது என்ன வென்றால் உதவியை கூட்டிகொடுப்பதற்கு பதிலாக என்னை அமரவைத்து அருள்
உதவி செய்தார்கள். அவர்கள் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்கள் இயேசு தேவன் 5 அப்பம்,
2 மீன் துண்டைக்கொண்டு எத்தனை பேர்களுக்கு போசித்தார்? புருஷர்கள் மட்டும் 5000 பேர்கள் என்று பதிலளித்தேன் 5 அப்பம், 2 மீன்களையும் கொண்டு 5000 பேருக்கு போஷித்த தேவன் உங்களை போஷிக்கமாட்டாரா?
என்கிற அருளுரையை கேட்ட மாத்திரத்தில் உள்ளத்தில் விசுவாசம் துளிர்விட்டெழுந்தது பரவசத்துடன்
பதில் உரைத்தேன். நிச்சயமாக ஆண்டவர் எங்களை போஷிப்பார் என்று பரவச கண்ணீர்ததும்ப பதிலுரைத்து
தெம்புடன் சைக்கிள் மிதித்துக்கொண்டு என் வீடு வந்தடைந்தேன்.
ஐயா, அவர்கள் கொடுத்த விளக்கம் என் ஆவிக்குரிய வாழ்வுக்கு
வெளிச்சமாக அமைந்துவிட்ட தேவனுக்கு மகிமை உண்டாகட்டும். நாட்கள் கடந்தன, சரீர பலவீனத்தில்
சோர்வடைந்து இயேசு ஆண்டவருக்கு வெள்ளைத்தாள் எடுத்து எங்கள் வறுமை பிரச்சனைகளை விண்ணப்பமாக
எழுதி, என் இரண்டு கரங்களையும் வைத்து ஜெபம் செய்தேன். விண்ணப்பத்தின் பொருள், உண்ண
உணவு, உடுக்க உடையும் தாரும். பல விண்ணப்பங்கள் எழுதியுள்ளேன். என் நேசகர்த்தர் அனைத்தையும்
பார்த்து கவனித்தார். ஓர் இரவு உறங்காமல், “சுந்தர வீடே சோபித வீடே என்றும் ஆனந்தமாய்
அங்கு வாழ்ந்திடுவேன்” என்கிற பாடலை பாடிக்கொண்டே உறங்கி, உறக்கத்தில் ஒருதரிசனம் கண்டேன்.
செங்குத்தான மலை ஒன்று கண்டேன் மலைசிகரத்தில் அழகான மாளிகை ஒன்று தெரியவந்தது மலை சிகரத்திற்கு
செல்வதற்கு ஒத்தைஅடி பாதை காணப்பட்டது. அதில் ஒருவரும் சொல்லவில்லை நான் மாத்திரம்
சென்று சிகரத்தின் மீது காணப்பட்ட மாளிகையை அடைந்து உள்ளே நுழைந்தேன். நுழைவாயில் அருகில்
ஒரு தங்கசிம்மாசனம் அதன் மீது அருள்நாதர் தூயவெள்ளை அங்கி அணிந்தவராய் தன் இடதுகால்
மீது வலதுகாலை வைத்து அமர்ந்திருந்த கண்கொள்ளா மகிமையான காட்சி என் உள்ளத்தை பரவசப்படுத்தி,
என் சரீரம் துள்ளிக்குதிக்க ஸ்தோத்திரம்! ஸ்தோத்திரம்! என்று என் நாவு உச்சரிக்க உறக்கம்
தெளிந்து, தந்தை இறைவன் இயேசுவை கண்ட கண்கொள்ளா காட்சி மறைந்து புத்துணர்வு பெற்று
என்சரீரம் முழுவதிலும், உள்ளத்திலும் ஆனந்தம் பொங்கி, பொங்கி வழிந்தது. இரண்டு நாட்களாக
உணவு உண்ண முடியாமல் இருந்தேன். எப்போதும் என்கண் முன் அக்காட்சி என்னைவிட்டு அகலாமல்
இருந்து கொண்டிருந்தது.
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் அதிசயமான இறைவனை குறித்து அறிந்து
கொள்வதினாலும், வேதாகமத்தை வாசித்து, யோசிப்பதினாலும் துதிகீதங்கள் பாடி மகிழ்வதுதான்
எங்கள் சத்துணவாக இருந்தது. ஆத்துமாவளர்ச்சிக்கு உதவியாக இருந்தது ஆனால் ஒவ்வொரு நாளும்
உணவுப்பிரச்சினை, குடும்பத்தில் கடன்தொல்லைகள் எங்கள் மனதை சோர்வடைய செய்தது. எங்களுக்கு
2 ஏக்கர் தோட்டம் உண்டு, எங்கள் தகப்பனார் பொதுதொண்டு செய்து ஊர்மக்களுக்கு உதவியாக
இருந்தார். ஆனால் ஒரு கெட்டபழக்கத்திற்கு அடிமையாகஇருந்தார். “குடி குடியை கெடுக்கும்”
என்ற பழமொழியின் படி அவர்கள் குடித்து, குடித்து கடன் அதிகமானதினால் தோட்டம் அடமானத்திற்கு
அகப்பட்டுக்கொண்டது.
ஜெர்மனி தேசமக்களால் தொழுநோய் மருத்துவமனை ஒன்றில் எங்கள் கிராமத்தில்
சிறப்பாக பணியாற்றிவருகிறது. மருத்துவமனையில் வேலை கிடைத்தால் வேலை செய்துகொண்டு திருப்பணி
செய்வதற்கு உதவியாக இருக்கும் என்று கருதினேன். அந்நாட்களில் கத்தோலிக்க மார்க்கத்திற்கும்,
ஆவிக்குரிய மார்க்கத்திற்கும் உள்ள அதிகமான வேறுபாடு தெரியாதிருந்ததினால் நான் சுவிசேஷப்பணி
செய்துவருகிறேன். மருத்துவமனையில் வேலை கொடுத்தால் வேலை செய்துகொண்டு திருப்பணி செய்வதற்கு
உதவியாய் இருக்கும் என்று குறிப்பிட்ட மருத்துவமனை, மருத்துவ மேலாளரிடத்தில் விண்ணப்பம்
கொடுத்தேன். அப்போது மருத்துவமனை ஆலோசனைக் குழுத்தலைவராக சேலம் மாவட்டம்
கத்தோலிக்க திருச்சபையின் பேராயராக அருள்திரு.செல்வநாதன் அவர்கள் இருந்து வந்தார்கள்.
அவர்கள் என் விண்ணப்பத்தை பரிசீலித்து பார்த்துபின், என்னை நேர்முகத்தேர்வுக்கு அழைத்தார்கள்.
நான் சுவிசேஷப்பணி செய்துவருவதை விண்ணப்பத்தின் வாயிலாக அறிந்த அவர்கள், நீயும் உன்
வீட்டாரும் புதிதாக இயேசுவை ஏற்றுக்கொண்டிருக்கிறவர்களும் RC- யில் சேரவேண்டும், காரணம்
உங்களிலிருந்து வரும் சபை அரைவேக்காடு, கத்தோலிக்க திருச்சபை முழுவேக்காடு எனவே RC-சபைக்கு வருவாயானால் உனக்கு மருத்துவமனையில் வேலை செய்யலாம்
அல்லது திருச்சபையில் உபதேசியாக பணியாற்றலாம் அல்லது உன்னை RC-வேதாகமக்கல்லூரிக்கு
படிக்க அனுப்புகிறேன். என்று கூறினார்கள். சிறுவயதிலிருந்து RC-பள்ளியில் படித்தேன்.
அதே மக்கள் மத்தியில்தான் வளர்ந்து,வாழ்ந்துவருகிறேன். ஆனால் இயேசுவை அறியவும் கண்டு
கொள்ளமுடியவில்லை. அரைவேக்காடுசபை என்று கூறின சபையின் மூலம்தான் இயேசு ஆண்டவரை அறிந்து
ஏற்றுக்கொண்டேன். உங்களிடத்தில் வேலை கேட்டுத்தான் விண்ணப்பித்தேன், சபை சம்பந்தமாக
அல்ல என்று தெளிவாகவும், தைரியமாகவும், பணிவாகவும் கூறினேன். உனக்கு மருத்துவமனையில்
வேலை கொடுக்க சாத்தியமாகாதென்று கூறிவிட்டார்கள். உள்ளம் உடைந்தவனாக என் வீட்டிற்குவந்து
முழங்கால்படியிட்டு “வேலைக்காரன் கண்கள் எஜமானை நோக்குகின்ற” வண்ணம் தேவசமூகத்தில்
என் கண்களை ஏறெடுத்து ஒரு ஆண்டுகாலம் மருத்துவமனையில் வேலை கிடைத்தால், சம்பாத்தியம்
செய்து கடனுக்கு அடமானப்பட்டிருக்கும், எங்கள் தோட்டத்தை மீட்டுக்கொண்டு என் வேலை வேண்டாமென்று
விட்டு விட்டு முழுநேரமாக திருப்பணிக்கு வந்துவிடுகிறேன் என்கின்ற பொருள்பட ஊக்கமாக
ஜெபித்து என் வேதாகமத்தை எடுத்துதிறந்து வாசித்தேன்.
இரக்கமுள்ள இறைவன் மனமிரங்கி, “அவர் உமது மனவிருப்பத்தின்படி
உனக்குத் தந்தருளி உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக”. சங்கீதம் 20:4 வசனத்தை வாக்குத்தத்தமாக
அருளினார். மேற்கண்ட வசனத்தை பார்த்து வாசித்த மாத்திரத்தில் எனக்கு மருத்துவமனை பணிக்கு
உத்தரவு கிடைத்தாற்போல் என்மனதில் நினைவு உறுதிப்பட்டது. விசுவாசம், சந்தோஷம் பொங்க
தேவனை ஸ்தோத்திரித்து எங்கள் வீட்டுக்கு எதிர் புறத்திலுள்ள வீட்டு சகோதரனை நான் அழைத்து,
செட்டிபட்டி மருத்துவமனையில் வேலைசெய்ய கர்த்தர் எனக்கு, உதவிசெய்வார் என்று என் விசுவாச
வார்த்தையை அறிக்கை செய்தேன். 3 மாதங்களுக்குப் பின் நற்செய்திப்பணி செய்வதற்காக தொப்பூர்
என்ற பகுதிக்கு வாடகை சைக்கிள் ஒன்றில் பிரயாணம் செய்துகொண்டிருந்தேன்.
தருமபுரி சாலையிலிருந்து
தின்னப்பட்டி பிரிவு சாலையில் மருத்துவ முகாமை முடித்த மருத்துவ உதவியாளர்கள் சிற்றுண்டி
சாலையில் தேனீர் அருந்திக்கொண்டிருக்க மருத்துவ மேலாளர், டாக்டர் அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். VAN தர்மபுரி சாலை ஓரமாக நின்றுகொண்டிருந்தது. சைக்கிளில் சென்றுகொண்டிருந்த
நான் டாக்டர் அம்மையாரைப்பார்த்து சைக்கிளிலிருந்து கீழே இறங்கினேன் வணக்கம் செலுத்தினேன்.
என்னைப்பார்த்து புன்சிரிப்புடன் ” where you going
by cycle?”
I said i am going to thoppur, again she asked
me “for
what”
i reptied to her for Gospel work,( thoppur is 22km
for away from chettipatti.) உடனே அனுகூலமான வார்த்தையே கூறினார் “I
know that you are expecting a from us twice long long time.
I will let you know with in a week. “ அவர்கள் வார்த்தை என்னை மகிழ்வுரச்செய்து உற்சாகப்படுத்தியது.
டாக்டர் அம்மையாருக்கு நன்றிகூறி விடைபெற்று, பாடிக்கொண்டே தொப்பூர் சென்று சுவிசேஷப்பணி
மகிழ்வுடன் செய்துவிட்டு மாலை 5 மணியளவில் வீடு வந்துசேர்ந்தேன்.
மருத்துவப்பணியின்
அனுபவங்கள்:-
1965-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு வேலையில் சேர்க்கப்பட்டேன். நான் வேலை செய்யும் ஸ்தலத்திற்கு
பொறுப்பாளரான சகோதரி தெரசா(பிரான்சிஸ்) அவர்கள், நான் வேலையில் சேரும்போதே ஒரு நிபந்தனைக்கு
கட்டுப்பட்டிருக்கவேண்டி, மருத்துவமனைக்குள் சுவிசேஷப்பணி செய்யமாட்டேன் என்று எழுதிக்கொடுக்க
கட்டளை கொடுத்தார்கள். சற்று சிந்தித்துப்பார்த்தேன், சம்மதம் தெரிவித்தேன். மருத்துவமனையில்
பணியில் சேர்ந்த 1-மாதத்திற்குப்பின் மருத்துவபணியில் 60-க்கும் அதிகமானோர் வேலை செய்து
கொண்டிருந்தார்கள்.
யாவரும் ஒற்றுமையுடன் பணிசெய்யவும் இறைவன் நாமம் மகிமைப்பட,
மருத்துவப்பணி சிறப்பாகயிருக்க வேலை செய்யும் பணியாளர்களை உற்சாகப்படுத்த தியானக்கூட்டம்
ஒன்று ஒழுங்கு செய்து, கூட்டத்தில் அருள் செய்தி கொடுத்து கூட்டத்தை நடத்துவதற்கு
சங்கை.தந்தை மேத்யூ மூழிஸ், (கேரளா) அவர்கள் அழைக்கப்பட்டு தியானக்கூட்டத்தில் பவுலடியாரைக்குறித்து
ஆங்கிலத்தில் செய்தி கொடுத்தார்கள். அவர்கள் சொற்பொழிவு முடிந்தபின் அருள் உரையின்
கருத்துக்களை தமிழில் பேசும்படி கேட்டுக்கொண்டார்.
கத்தோலிக்க திருச்சபையில் பணிசெய்ய 6ஆண்டுகள் 7ஆண்டுகள் 9 ஆண்டுகள் படித்தவர்கள் இங்கு அருளுரையைக்கேட்டு
கொண்டிருந்தார்கள். ஆனால், ஒருவருக்கும் தமிழில் மொழிபெயர்ப்பு கூற முன்வரவில்லை.
முடிவில் கத்தோலிக்க குருவானவர் கூறிய கருத்துக்களையும், பவுல்
அடிகளைக்குறித்தும் 1 மணிநேரம் நான்பிரசங்கித்தேன் . அப்பொழுது Rev.Fr.Mâthew muzhis அவர்கள் என்னை பாராட்டி ஊக்குவித்தார்கள். மேலும், ஒவ்வொருநாளும்
காலை மருத்துவபணி செய்யும்முன் பணியாளர்கள் ஓரிடத்தில் கூடி வேதாகமத்தில் ஒரு அதிகாரம்
வாசித்து, ஜெபம்செய்தபின் பணிசெய்ய வேண்டும். தினம் ஒரு வேதவாக்கியம். Black board- ல் எழுதவேண்டும். இப்பணிகளை பொறுப்பேற்று செய்ய என்னை சாமியார் கேட்டுக்கொண்டார்கள்.
மகிழ்ச்சியுடன் இப்பணியை செய்ய ஒப்புக்கொண்டேன். ஒழுங்கு செய்தபடி
ஒவ்வொருநாள் காலையில் வேதம்வாசித்து, ஜெபம் செய்தபின் பணி செய்வார்கள். இப்பணியை உற்சாகமாக செய்துவந்தேன்.
ஒவ்வொருநாளும் கரும்பலகையில் வேதவாக்கியம் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிவிடுவேன்.
வருகின்ற அனைவரும் நாள்முழுவதும் வேதவாக்கியத்தை வாசிப்பார்கள். ஜெர்மன்,பிரான்ஸ்,இங்கிலாந்து
மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து(Visitors) பார்வையாளர்கள் மருத்துவமனைக்கு வருவார்கள்.
அவர்கள் வேதவாக்கியங்களை வாசிப்பார்கள், வேதவாக்கியம் அவர்களுக்குக்குள்
கிரியைசெய்யும். வேதவாக்கியங்களை யார் எழுதுகிறார்கள்? எனக்கேட்டு, என்னைப்பற்றி அறிந்து
கொண்டு என்னிடத்தில் அன்பாகப்பழகுவார்கள். எங்கள்வீட்டிற்கும் வருவார்கள். 1967-ஆம் ஆண்டு மார்ச் மாதம் Rev.Adam frame அவர்கள் ஒரு மாதகாலம் மருத்துவமனையில் தங்கியிருந்தார்கள். அவர்கள்
தங்கியிருந்த நாட்களிலெல்லாம் காலை ஜெபத்திற்கு வருவார்கள். Board-ல் எழுதியிருக்கும் வேதவாக்கியத்தை
வாசிப்பார்கள். தேவகிருபையால் என்னை நேசித்தார்கள். மேலும் என்னை France அழைத்தார்கள். நானும் விருப்பத்துடன் அவருடன் France தேசத்திற்கு செல்வதற்கு
சம்மதம் தெரிவித்துவிட்டேன். என்னை அழைத்துச்செல்வதற்கான
ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்கள்.
மேற்கண்ட நோக்கங்களை மருத்துவமனை மேலாளர் டாக்டர்.எலிசபெத் வாம்ஸ்டீன்
அம்மையாரிடத்தில் தெரிவித்தேன். Rev. Fr. Adam உடன் நான் France செல்வது டாக்டர் அம்மையாருக்கு சந்தோஷம். ஆனால் அவர்கள் கருத்தைத்
தெரிவித்தார்கள். அதாவது “நீ அவருடன் France தேசத்திற்கு செல்வது நல்லது. France சென்றடைந்தபின் உன்னை கத்தோலிக்க சபையில் சேர்த்துவிட முயற்சித்தால், அப்போது, நீர்
கத்தோலிக்க மார்க்கத்திற்குள் இணைந்துவிட்டால் உமக்கு உதவிசெய்வார் அல்லது நீயோ கத்தோலிக்க
மார்க்கத்தில் சேர்ந்து கொள்ளாவிட்டால் உன்னை கைவிட்டால் என்ன செய்வீர். இதை சிந்தித்து
முடிவு எடுத்துக்கொள் என்று கூறினார்கள். ஜெபத்துடன் ஆலோசித்தேன், ஆவியானவர் எனக்குதடையுத்தரவு
அருளினதால் Rev.Fr.Adam அவர்களிடத்தில் France தேசத்திற்கு அவருடன் செல்ல சம்மதம் தெரிவித்ததை திரும்ப பெற்றுக்கொண்டேன்.
மருத்துவமனைக்கு வரும் வெளிநாட்டு மக்கள் என்னை நேசிப்பார்கள்.
எல்லாம் தேவகிருபை மருத்துவமனையில் பணிசெய்யும் அனைவரும் எனக்கு விரோதமாக நினைத்துப்பேசுவார்கள்.
வெளிநாட்டு மக்களுடன் பேசினால் “காக்கா” பிடிக்கிறான், என்ன “மை” வைத்திருக்கானோ? என்று
பேசிக்கொள்வார்கள். என்னுடன் நெருக்கமாக பழகும் சிநேகிதர்கள், பணியாளர்கள் மற்ற பணியாளர்கள்
கூறுவதை எண்ணிடத்தில் கூறுவார்கள். ஆம் என்னிடத்தில் “இயேசு மை” வைத்திருக்கிறேன்
. இயேசு மை இருப்பதினால்தான் அனைவரையும் கவர்ந்துகொள்ள முடிகிறது என்று மகிழ்ச்சியுடன்
கூறுவேன். காலை 7:30 மணிக்கு மருத்துவப்பணிக்கு செல்வேன் 11:30 மணிக்கு வீட்டிற்குவருவேன்.
மதியஉணவு
3 மணிக்கு வேலைக்கு செல்ல வேண்டும் இடையில் மூன்றரை மணிநேரம் ஓய்வு
உண்டு. இந்தநேரத்தை வீணாககழிக்க எனக்கு மனம் இல்லை. தொழுநோயால் பிடிக்கப்பட்டு கஷ்டப்படுகிறவர்கள்
வார்டில் சேர்க்கப்படுவார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள்
கல்வி அறிவில்லாதவர்களை கூட்டிச்சேர்த்து மருத்துவ அதிகாரியின் அனுமதியுடன் கல்விகற்றுக்கொடுப்பேன்.
அத்துடன் முக்கியமாக இறைவன் இயேசுவின் அன்பு, சத்தியங்களை கூறுவேன். மதியம் 1:30 மணி
முதல்
3 மணி வரை வகுப்பு நடக்கும். 3 மணிக்கு என் வேலைக்கு சென்றுவிடுவேன் ஒருசமயம் காலை 11 மணியளவில் சாமுண்டி என்று அழைக்கப்படுகின்ற ஒரு இந்து சாமியார்
தொழுநோயால் பிடிக்கப்பட்டு வியாதி அதிகரித்து பாதிக்கப்பட்ட நிலையில் கால்,கை,விரல்களில்
நாற்றமுள்ள ரணத்துடன் நடக்க முடியாமல் மருத்துவமனையின் நுழைவுவாயில் உள்ள கேட்டைப்பிடித்து
நின்று கொண்டிருந்தார், அவரிடத்திலுள்ள துர்நாற்றம் OP யில் நாங்கள் அமர்ந்திருக்கும் அறையில் துர்வாசனையை அனைவரின் நாசியில் நுழைந்ததால் கண்டு
கொண்டோம். யாரோ ஒரு நோயாளி ரணத்துடன் வந்திருக்கிறான் என்ற நினைவுடன் கேட்டுக்கு நேராக
பார்த்தோம். அங்குநடுக்கத்துடன் நிற்க முடியாமல் நின்று கொண்டிருப்பவரை பார்த்து வேலை
முடிந்து வீட்டிற்கு போகும் நேரத்தில் நாற்றமுள்ள ஒரு நோயாளி இப்போது வந்திருக்கிறானே
காலையில் வரக்கூடாதா அல்லது 3 மணிக்குமேல் வரக்கூடாதா இப்போது சாப்பாட்டிற்கு போகும்போது
வந்திருக்கிறானே என்று திட்டிக்கொண்டிருந்தார்கள். குளிர், காய்ச்சல், ரணவேதனையுடன்
கண்களில் கண்ணீர்ததும்பின நிலையிலிருந்தான். இந்ததருணத்தில் ஜெர்மன் தேசத்தில் பணிசெய்யவந்துள்ள
செவிலியர் சகோதரி.கேத்தரின் நோயாளியை பார்த்தார்கள், நோயாளி நடக்கமுடியாத சூழ்நிலையை
புரிந்துகொண்டு உடனே நோயாளி அருகில் சென்றார்கள், ஒருகுழந்தையை அணைப்பது போல் நோயாளியை
தூக்கி தோள்மீது வைத்து தூக்கி கொண்டுவந்து ரணசிகிச்சை அறையிலுள்ள டேபிளில் படுக்கவைத்ததை
பார்த்தா என்கண்கள் கலங்கியது. உள்ளம் உடைந்தது, நான் உண்மையான கிறிஸ்தவன்தானா? என்ற
கேள்வி என் உள்ளத்தில் எழும்பியது. மணி 11:30 ஆனது வேலை நேரம் முடிந்தது. பணியாளர்கள்
அனைவரும் மறைந்து வீட்டிற்கு சென்றுவிட்டார்கள். ஆனால் என்னால் செல்லமுடியவில்லை. சகோதரி
கேத்திரின் என்னைப்பார்த்து அவர்தலைமுடியை சிறைத்து ,கால்கைகளிலுள்ள கட்டுத்துணிகளை
அகற்றி குளிப்பாட்டக்கூறினார்கள். நாங்கள் இருவரும் தலைமுடிய சிறைத்தோம். அவர் இந்துசாமியாராக
இருந்தபடியினால் தலைமுழுவதும் சிம்சோன் போன்ற உடைகள், தலையில் நிறைய பேண்கள் ஒவ்வொரு
பேண்களும் ஈ-க்கு ஒத்ததாக இருந்தது. கால், கைகளிலுள்ள கட்டுகளை அறுத்து எடுக்கும்போது
சகித்துக்கொள்ள முடியாத துர்நாற்றம், கை, கால்களில் உள்ள புண்களில் ஏராளமான
புழுக்கள் மேய்ந்தவண்ணமிருந்தது. அதைபார்த்த மாத்திரத்தில் என் சரீரம் சிலிர்த்து குலுங்கியது.
சகோதரி.கேத்திரின் நோயாளியிடத்தில் அவர்களுக்கு தெரிந்த தமிழ்
அன்பாக பேசினார்கள். ஆறுதலான வார்த்தைகளை கூறி எதிர்காலத்தில் உனக்கு ஆண்டவர் வாழ்வளிப்பார்
எனக்கூறினார்கள். இந்தசம்பவம் எனக்கு நல்ல பயிற்சியாகயிருந்த்து. கால், கைகளிலுள்ள விரல்கள் அனைத்தையும் வெட்டிஎடுக்கப்பட்டு சில எலும்புகள்
வெட்டி அகற்றப்பட்டது. ரணங்களுக்கு மருந்துவைத்து கட்டிவார்டிலுள்ள ஒருபடுக்கையில்
அவரை படுக்கவைத்து, உணவு உண்ணவைத்து, வீட்டிற்கு செல்லும்போது மதியம் 1:30 மணியாகிவிட்டது. நோயாளிக்கு சிகிச்சைசெய்து வீட்டிற்கு செல்லும்போது
இறைவன் இயேசுவுடன் செல்வதுபோல் உணர்ந்தேன். சகோதரி .கேத்திரினுக்கு என்மீது அன்பும்,
நட்பும் ஏற்பட காரணமாகிவிட்டது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இறைவன் இயேசு கூறின “நல்லசமாரியன்”
சம்பவம் என் நினைவில் ஆவியானவர் கொண்டுவந்து என் மனதை பூரிப்பாக்கினார். அல்லேலூயா!
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.!!!
மருத்துவ பணியாற்றின ஆண்டுகளில் நடந்த நிகழ்ச்சிகளை எழுதினால்
எனக்கு நேரம் போதாது. மறக்க முடியாத ஒரு சம்பவத்தை குறிப்பிடுவதை நல்லதாக கருதுகிறேன். 1967-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் என்று நினைக்கிறேன் ரோம் நாட்டிலுள்ள
உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் அவர்களின் பிரதிநிதி Rev.Fr. Gabirial அவர்கள் எங்கள் மருத்துவமனைக்கு வந்திருந்தார்கள். என்னைக்குறித்து
கேள்விப்பட்டு என்னுடன் சம்பாஷிக்க அழைப்பார்கள். மனமகிழ்வுடன் அவர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன்.
எங்கள் சம்பாஷணையின் போது ஒரு அழகான கேள்வி ஒன்று கேட்டார். “இயேசு கிறிஸ்துவைப்பார்க்க
முடியுமா?” என்று, பார்க்க முடியும் என்று பதில் கூறினேன்.அடுத்த கேள்வி “எப்படி பார்க்கமுடியும்?”
விசுவாசத்தினால்.
70 மார்க் என்று கூறினார்கள். பரிசுத்தத்தினால் 75 மார்க், ஜெபத்தினால் 76 மார்க், கொடுத்தார்கள். அவர்கள் எதிர்பார்த்த கருத்தை எனக்கு தெரிவிக்க இயலாமையால்,
நானே Rev.Fr.Gabirial அவர்களை நோக்கி எப்படி பார்க்கலாம்? நீங்கள் கூறுங்கள் எனக்கேட்டுக்கொண்டேன்.
அவர்கள் கேட்ட கேள்விக்குக்கொடுத்த பதில் “கிறிஸ்து பெருமானை” கிறிஸ்தவர்கள் மூலம்தான்
பார்க்கமுடியும். அவருடைய பதில் என்னை வியப்படையசெய்தது. உண்மையான சத்தியத்தை அன்று
அறிந்தேன். பச்சைமரத்தில் அடித்த ஆணியைப்போல் அவருடைய பதில் என் உள்ளத்தில் ஆழமாகப்
பதிந்துவிட்டது. எனவேதான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களுக்கு கிறிஸ்தவன் என அழைக்கப்படுகிறார்கள்.
மருத்துவமனையின் பணியிலிருக்கும் போது ஒவ்வொருநாளும் மதியம்
பணி செய்து கொண்டிருக்கும்போது வேலைநேரம் முடிந்த உடன் எந்தகிராமத்திற்கு செல்வது என்று
மனதில் யோசித்துக்கொண்டே இருப்பேன். மருத்துவ பணியின் ஸ்தாபகர் மிஸ்.டேனிஸ் அவர்கள்
என்னைப்பார்த்து Along where are you? I think that now you are in a village .
மாலை 5 மணிக்கு பணி முடிந்தபின்
வீட்டிற்கு செல்லாமல் கிராமங்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க சென்றுஇரவு 9-10 மணிக்கு
வீட்டிற்குவருவேன். ஆத்தும ஆதாயம் செய்வதற்கு மருத்துவபணி உறுதுணையாக இருந்தது. மருத்துவமனையில்
வேலைசெய்து கொண்டிருக்கும் போது என் மனம் பரவசமடைந்து தேவனைதுதித்து ஜெபிக்க மனதில்
ஆவல் எழும்பிவிடும். என்னால் எழுந்த ஆவலை அடக்கிவைக்க முடியாமல், கழிப்பிடம் சென்றுவருகிறேன்
என்று கூறி, கழிப்பிடம் அறைக்குள் சென்று தண்ணீர் ஊற்றி அறையை நன்றாக சுத்தம்செய்து
முழங்காலில் நின்று மறைவிடத்தில் கள்ளக்காதலர்கள் சந்திப்பது போல் இறைவனை சந்திப்பேன். எனவே தேவனாகிய கர்த்தர் என்னை மருத்துவமனையில் ஆசீர்வதித்து
உயர்த்தினார். என் சொந்தமருத்துவமனை போல் கருதி பணிசெய்துவந்தேன். வருகின்ற நோயாளிகள்
அனைவருக்கும் இரட்சிப்பின் செய்தி அறிவிப்பேன். பணியாளர்கள் அனைவரும் என்னை சாமியார்
என்று அழைப்பார்கள்.
இயேசு ஆண்டவன் செய்வார் என்று விசுவாச வார்த்தைகளை பயன்படுத்தினேன்.
ஒரு மாதத்திற்குள் 2 ஏக்கர் நிலத்தை செட்டில்மென்ட் செய்ய ஒழுங்கு செய்து 2 ஏக்கர்
நிலம் கிரயம் செய்ய கேட்டுக் கொண்டார். நிலம் கிரயம்
செய்வதற்கு என்னிடத்தில் பணவசதியில்லை எனவே, எங்கள் அருகிலுள்ள பெத்தேல் ஸ்தாபனதலைவர்
பி. சாமுவேல் அய்யா அவர்களுக்கு என்னை நன்றாக அறிந்திருந்தபடியால் அவர்களை அணுகி, நிலம்
கிடைத்தவகையை குறித்தும், கிரயம் செய்வதற்கு என்னிடத்தில் வசதி இல்லா நிலைகுறித்தும்
தெரிவித்தேன். கரத்தர் அவர் உள்ளத்தில் கிரியை செய்ததால் நிலத்தைபார்க்க விரும்பி,
நங்க வள்ளிக்கு வருகைதந்து நிலைத்தை பார்த்தார்கள். ஆண்டவருக்குநன்றி, துதி செலுத்தி
ஜெபித்தார்கள். இறைவனின் இரக்கத்தைக்கொண்டு, கிரயம் செய்வதற்கான முழு
செலவு தொகைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். தேவ ஒத்தாசையை கொண்டு செட்டிபட்டி திருச்சபையின்
பெயருக்கு நிலம் கிரயம் செய்யப்பட்டது. கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும்.
1979 ஆம் ஆண்டு நங்கவள்ளியில் தேவஉதவி கொண்டு ஒருநர்சரி ஆங்கிலப்பள்ளி
ஒன்று தொடங்கப்பட்டது. சிறப்பாக சுவிசேஷப்பணியும், கல்விப்பணியும் நடந்துவந்தது. நிலம்
கிரயம்செய்ய பெரும் உதவியளித்த பெத்தேல் ஸ்தாபனத்தலைவர் திரு.பி.சாமுவேல் ஐயா அவர்களுக்கு
நன்றியுள்ளவர்களாக இருந்துவருகிறேன். நிலம் கிரயம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் கடந்து
சென்றப்பிறகும் பணவசதி இல்லாததினால் நிலத்தை பயன்படுத்த இயலவில்லை.
ஜெபத்துடன் இறைவனின் நடத்துதல்படி ஒரு தீர்மானம் என்மனதில் உதயமானது.
எங்களால் நிலத்தில் ஆலயம், சமூகப்பணி செய்வதற்கு கட்டமுடியவில்லை. வசதியுள்ள ஸ்தாபனத்தாரிடம்
கொடுத்து ஏன்? திருப்பணியைச் செய்யக்கூடாது என்று மனதில் கருதி, சேலம் IGL ஸ்தாபகர் சங்கை.ராஜா ஸ்பன்ஸ் அவர்களை அணுகி மேற்கண்ட காரியங்களை பகிர்ந்துகொண்டேன். தேவனுடைய வழிநடத்துதலைக்
கேட்டறிந்த அவர்கள் அங்கு திருப்பணி செய்ய ஒப்புக்கொண்டார்கள். எனவே 2 ஏக்கர் நிலம் நர்சரிபள்ளியுடன் அனைத்தையும் இலவசமாகப் பெற்ற
நான் இலவசமாக நர்சரி பள்ளியுடன் அவர்களிடம் ஒப்படைத்தேன்.
கர்த்தர் அப்பணிகளை ஆசிர்வதித்ததினால் நங்கவள்ளி நிலத்தில் திருச்சபையாகக்கூடி
ஆராதிக்க ஆலயம்,
50 பிள்ளைகள் கொண்ட அனாதைவிடுதி, ஏற்படுத்தி சிறப்பாக பணிநடந்துவருகிறது.
யார் குத்தினால் என்ன நெல் அரிசியாக வேண்டுமென்பது போல் IGL-ஸ்தாபன பணி இறைவனின் ஆத்தும ஆதாயப்பணிதான். அதுவே ஆண்டவரால்
அழைக்கப்பட்ட மக்களின் நினைவு. IGL ஸ்தாபனமும், திருப்பணியும் இவ்விடத்தில் தோற்றுவித்ததிற்கு காரணம்
தேவனாகிய கர்த்தர் குறிப்பிட்ட காலம்வரை மருத்துவப்பணியில் என்னைப் பயன்படுத்தியது
தான். இத்தருணத்தில் காலம் சென்ற திரு.சுந்தரம் ஐயா அவர்களுக்கு சுவிசேஷம் அறிவித்ததின்
பலனாக மேற்கண்ட ஸ்தாபனம் தோற்றுவிக்கப்பட்டது.
தேவனாகிய கர்த்தர் என்னை ஊழியத்திற்கு அழைபித்தது உண்மைதானா
என்பதை பரிசோதித்து அறிந்து கொள்ளுதள்:-
தேவனாகிய கர்த்தர் திருப்பணிக்கு தெரிந்துகொண்டு அளித்துள்ளாரா?
என்கிற கேள்வி என் உள்ளத்தில் எழும்பினதில், இக்கேள்விக்கு நடைமுறையில் அனுபவரீதியாக
அறிந்துகொள்ள எனக்குள் ஒரு ஆலோசனை உருவானது. ஒருமாத விடுமுறை பெற்றுக்கொண்டு முன்பின்
அறியப்படாத இடங்களுக்கு சென்று ஊழியம் செய்யவேண்டும். அந்நாட்களில் உண்ண உணவு, தங்குவதற்கு
இடவசதி, பிரயாண செலவு பணஉதவி அனைத்தையும் ஆண்டவர் அனுக்கிரகம் செய்து வழிநடத்தி ஊழியத்தில்
பயன்படுத்திடவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு, பரிசுத்தவேதாகமம், கைப்பிரதிகளுடன்
பிரயாணப்பட்டு முன்பின் அறியாத இடங்களுக்குச்சென்றேன்.
முதலாவது அரூருக்குச்சென்றேன் எண்ணிடத்திலுள்ள ரூபாய் 3/-, அரூர் செல்வதற்கு போதுமானதாயிருந்தது. மதியம் 3 மணி
போல் அரூர் சென்றடைந்தேன். என்னிடத்திலுள்ள கைப்பிரதிகளை தெருத்தெருவாக சென்று கொடுத்தேன். இரவு தங்குவதற்கு
அங்குள்ள Mission church-க்கு சென்றேன். சபைபோதகராக கருணை பிரகாசம் என்பவரை சந்தித்தேன். தேவகிருபையால்
என்னை அன்போடு உபசரித்து, பசிக்கு உணவு அளித்தார்கள். இரவுபடுப்பதற்கு இடமளித்தார்கள்.
3-ஆம் தேதி காலை உணவு உண்டபின் இன்று எங்கு போகிறீர்களென்று கேட்டார்கள்.
அரூருக்கு அடுத்த பெரிதான ஊர் எது என்று கேட்டேன்? திருப்பத்தூர் என்றார்கள்.
திருப்பத்தூர் செல்லும்வழியில் 5 கிலோ மீட்டர்தூரத்தில்
சக்களிப்பட்டி என்கிற கிராமம் உண்டு அங்கு சென்று ஊழியம் செய்தபின், அப்புறம் நீங்கள்
திருப்பத்தூர் செல்லலாம் என்று என்னை அங்கு அழைத்துச்சென்றார். அங்கு ஊழியம் செய்துமுடித்துவிட்டு
திருப்பத்தூர் சாலைக்குவந்தோம், அங்கு ஒரு டீக்கடை இருந்தது ஒரு டீ வாங்கிகொடுத்தார்,
புளியமரத்தடியில் ஒரு சிறுஜெபம் செய்துவிட்டு பாஸ்டர். கருணைபிரகாசம் அவர்கள் பேருந்து
வரும் நேரத்தை குறிப்பிட்டு கூறின பின் அரூர் சென்றுவிட்டார்.
என் கரத்தில் பைசா ஒன்றுமில்லை. 60 கிலோ மீட்டர்தூரம் உள்ள திருப்பத்தூருக்கு எப்படி செல்வது என்று
வகைதெரியாமல் புளியமரத்தடியில் நின்றவண்ணம் ஜெபித்துக்கொண்டிருந்தேன். லாரி ஒன்று வந்து
நின்றது கட்டணம் ரூபாய்
2.50 பைசா மட்டும் என்று கூறினார்கள் அனேகர் பின்புறமாக மேலே ஏறிக்கொண்டார்கள்.
நானும், சென்றேன் வண்டி ஓட்டுநர் அருகில் ஒருமுஸ்லிம் நபர் அமர்ந்திருந்தார்கள் அவர்
என்னை முன் இருப்பிடத்தில் உட்காரவைத்துக்கொண்டார். வண்டி திருப்பத்தூர் சென்றுவண்டி
நின்றது.பயணிகள் அனைவரிடத்திலும் பணம் வசூலித்தார்கள். என்னை கேட்பதற்குமுன்பாக
உமக்கு ஒரு கடிதம் என்ற தலைப்புள்ள கைப்பிரதி ஒன்றினை எடுத்து பணம் வசூலிப்பவரிடம்
கொடுத்தேன். நீங்கள் யார் என்று கேட்டார்கள்? நான் இறைவனின் தொண்டன் எனக்கூறினேன்.
நீங்கள் இறைவனுக்கு தொண்டு செய்வதினால் கட்டணம் வேண்டாம். நீங்கள் வண்டியில் வந்தது
எங்களுக்கு நல்லது எனக்கூறினார்கள். மதியம் 3 மணியளவில் வயிற்றில் பசி கடினமான உஷ்ணம், கையில் காசுஇல்லை ஆனால் கட்டணம் வசூலித்தவர்
கூறினவார்த்தை என் வயிற்றுக்கு உணவாயிருந்தது, பெலனடைந்து ஆவியானவரால் ஊக்குவிக்கப்பட்டு
ஊழியம் செய்யப்புறப்பட்டேன்.
தெரு தெருவாக, வீடுவீடாக சென்று பிரதிகளை விநியோகம் செய்து சுவிசேஷம்
அறிவித்தேன். காலை உணவு சாப்பிட்டதுதான் இரவு 9 மணிக்கு ஒரு CSI ஆலயத்தை நாடிச்சென்றேன். ஆலயவளாகத்தில் உள்ள இல்லத்தில் பாஸ்டர்
அவர்களை சந்தித்தேன் படுக்கஇடம் கேட்டேன் இங்கு படுக்கவேண்டுமானால் செயலாளரைக்கேட்கவேண்டும்
அவரை இப்போதுபார்க்க இயலாது. எனவே டேவிட் என்கிற சுயாதீன ஊழியர் விலாசத்தை கொடுத்து
அனுப்பிவிட்டார். தெருவில் நடந்துசென்று கொண்டிருந்தேன், அப்போது இரவு 10 மணி இருக்கும் “இயேசு என்ற திருநாமத்திற்கு எப்போதுமே மிக ஸ்தோத்திரம்”
என்கிற இனிய பாடலின் தொனி தொலைதூரத்திலிருந்து கேட்க பரவசமடைந்தேன். தெருபிரசங்கம்
செய்துவிட்டு பாடலை பாடிக்கொண்டுவந்தார்கள். அவர்களை எதிர்நோக்கி சென்றேன்.
என்னைப்பார்த்த மாத்திரத்தில் ஊழியர் என்று அறிந்துகொண்டு என்னை
கட்டித்தழுவினார் ஒருவர், அவர் திரு.தொண்டைமான் கிறிஸ்துக்குல ஆசிரமத்திலிருந்து தொண்டு
பணிசெய்கிறவர். என்னை ஆசிரமத்திற்கு அழைத்துச்சென்றார், நல்ல உணவு கொடுத்தார், தங்குவதற்கு
நல்லவசதியான ஒரு அறையை ஒழுங்குபடுத்தி கொடுத்தார். சொர்க்கத்தில் இருப்பதாக உணர்ந்தேன்.
அன்புடன் என்னை அழைத்த ஆண்டவருக்கு எப்படி நன்றி கூறுவதென்று புரியாமல் திகைத்தேன்.
ஸ்தோத்திரம்.!!!
ஆசிரமத்தில் சில தினங்கள் தங்கவும், இரவு நேரங்களில் மருத்துவமனை
படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு சுவிசேஷம் அறிவிக்க கேட்டுக்கொண்டதின்படி சில
தினங்கள் தங்கியிருந்து ஊழியம் செய்ய கர்த்தர் கிருபையளித்தார். கிறிஸ்து குல ஆசிரம
ஸ்தாபர்கள் பெரியண்ணன்,சின்னண்ணன் என்று அழைக்கப்படுகின்ற டாக்டர் பேட்டன், டாக்டர்.ஏசுதாஸ்சவுரிராயன்
அவர்களை சந்தித்து பேசும்படியான சிலாக்கியத்தைப்பெற்றேன். டாக்டர்.ஏசுதாஸ் சவுரிராயன்
அவர்கள் இங்கிலாந்தில் பட்டப்படிப்பு படித்தவர்கள் பாரதத்தின் பிதா என்று அழைக்கப்படுகின்ற
காந்திஜி அவர்களுடன் படித்தவர். இருவரும் நெருக்கமான சிநேகிதர்கள். உப்புசத்தியாகிரகத்தில்
காந்திஅவர்களுடன் உறுதுணையாக இருந்தவர். இயேசு ஆண்டவரின் அழைப்பை பெற்று திருப்பத்தூரில்
டாக்டர்.பேட்டன் அவர்களின் பெரும் உதவியாலும் டாக்டர்.யேசுதாஸ்சவுரிராயன் அவர்கள் ஆசிரமத்தை
நிறுவி கண் சிகிச்சை மருத்துவபணி செய்துவந்தார்கள். காந்தியடிகள் அவர்களும் ஆசிரமத்தில்
தங்கி இருக்கிறார்கள், காந்தியடிகள் இயேசு ஆண்டவரை சிறப்பாக அறிந்தவர். வேதாகமத்தின்
சத்தியங்களை வாழ்க்கையில் பயன்படுத்தி பயனடைந்தவர்.
அரசியல் சூழ்நிலைகள் காரணமாக இந்து இயக்கங்களினிமித்தமாக கிறிஸ்துவை
அறிக்கை செய்யாமல் மாண்டுவிட்டார். காந்தியடிகள் தான் அறிந்த சத்தியத்தை அறிக்கை செய்திருப்பாரானால்
இந்திய மக்கள் குறைந்த பட்சம் 50% ஏற்றுக்கொண்டிருப்பார்கள்,
என்று கூறினார்கள் இதுவே உண்மை.
4 தினங்களுக்கு பின் தொடர்ந்து பிரயாணப்பட பரிசுத்த ஆவியானவர்
என்னை ஏவினார். நான் பிரயாணப்பட ஆயத்தமானபோது சகோதரர் தொண்டைமான் அவர்கள் மூன்று ரூபாய்
கொடுத்தனுப்பினார்கள். அதைப்பெற்றுக்கொண்டு வாணியம்பாடிக்கு சென்றேன். காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை தெருத்தெருவாக சென்று ஒவ்வொரு வீட்டிற்கும் கைப்பிரதிகளை கொடுத்துக்கொண்டு
வந்தேன். ஒரு தெரு ஓரத்தில் தையல் பணி செய்து கொண்டிருந்த ஒரு டெய்லருக்கு கைப்பிரதி
ஒன்று எடுத்துகொடுத்தேன். கடுமையான ஏப்ரல் மாதவெயில் பசியினால் துவண்டு கொண்டு, என் உள்ளம் உணவு கொடும் இயேசு தேவனே என்று கேட்டுக்கொண்டிருக்கும்
சமயம், டெய்லர் என்னை பார்த்து உங்களைப்போன்று வீடுவீடாக ஒரு தலைமை ஆசிரியர் நோட்டீஸ்
கொடுத்துகொண்டே செல்வார் எனகூறினார். அவர்வீடு எங்கேயிருக்கிறது என்று நான் கேட்டபோது,
வீடு எனக்குத்தெரியாது, ஆனால் இதே வழியில்தான் வருவாரென்று கூறினார். இப்போது இந்தவழியில்
அவர் வந்தால் நலமாயிருக்கும் என என் இருதயத்தில் நினைவாயிருக்கும்போதே, சைக்கிளில்
வந்தவர் என் கரத்தில் பிரதிகள் இருப்பதை பார்த்தவுடன் சைக்கிளை நிறுத்திவிட்டு என்னை
கட்டித்தழுவி என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச்சென்றார். உண்மையான தெய்வன்புடன் என்னை
இல்லத்தில் ஏற்றுக்கொண்டு, நல்ல உணவளித்து, ஓய்வு எடுக்க படுக்கைகொடுத்தார்கள். “நீபோகும்
இடமெல்லாம் உன்தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” என யோசுவாவிற்கு கொடுத்த வாக்குப்படி
உண்மையாக அவரை பற்றிக்கொண்டுள்ளவர்களோடே இருந்து வருகிறார் என்பதற்கு நானும் ஒருசாட்சி.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.!!!
என்னை அழைத்துச்சென்ற தலைமை ஆசிரியர் சகோதரர் கனகராஜ் அவர்கள்
குடியிருப்புயிருந்த காம்பவுண்டில் மேலும் இரண்டு விசுவாசிகளிருந்தார்கள். இரவு உணவு
உண்ணும் நேரத்தில் மூன்று வீட்டை இணைக்கும் பொதுவான வராண்டா காணப்பட்டது, மூன்று வீட்டாரும்
சமைத்து உணவு கொண்டுவந்து வைத்தார்கள். ஒருமனதுடன் ஒருகுடும்பத்தைப்போல் உணவைப்பகிர்ந்து
சாப்பிடும் காட்சி எனக்கு வியப்பை உண்டாக்கியது. அன்றுமாத்திரமல்ல ஒவ்வொருநாளும் இரவுவேளையில்
மூன்று குடும்பத்தாரும் கிறிஸ்துவுக்குள் ஒரேகுடும்பத்தினரைப்போல் ஒன்றாக சேர்ந்து
புசிப்பார்களாம். மேற்கண்ட மூன்றுகுடும்பத்தினரும் பரிசுத்த பக்தசிங் அவர்களால் வழிநடத்தப்பட்டவர்கள்.
அடுத்தநாள் காலையில் நான் பிரயாணப்பட்ட போது மதிப்பிற்குரிய தலைமை ஆசிரியர் எங்கு செல்கிறீர்கள்
என்று கேட்டார்கள் ஆம்பூர் வழியாக ராயவேலூர் செல்கிறேன் என்று கூறினேன்.
என்னை பேருந்து நிலையத்திற்கு அழைத்துவந்து ஆம்பூருக்கு டிக்கெட்
வாங்கிகொடுத்து பஸ்சீட்டில் அமரவைத்து என் சட்டைபாக்கெட்டில் ரூபாய் ஐந்து வைத்து ஸ்தோத்திரம்
கூறி விடைபெற்றுச்சென்றார். ஆம்பூர் வந்துசேர்ந்தேன், பகல் முழுவதும் ஊழியம் செய்தேன்.
அன்று இரவு ஒரு நாள் பாஸ்டர் ஸ்டீபன் அவர்கள் இல்லத்தில் தங்கினேன்.
காலை எழுந்து வேலூர் வந்துசேர்ந்தேன். வேலூரிலிருந்து காட்பாடிவரையிலும்
நடந்தே சுவிசேஷ பிரதிகளை கொடுத்து ஊழியம் செய்துவந்தேன். சித்தூர் சாலையில் சி.எஸ்.ஐ
ஆலய போதகரை சந்தித்து படுக்க இடம் கேட்டேன். சாப்பிட்டீர்களா? என்று கேட்க இல்லையென்று
பதில்கொடுக்க
25 பைசா கொடுத்து சாப்பிட்டுவிட்டு ஓய்வுநாள் பாடசாலையில்
படுக்க Watchman-னிடம் கூறினார். Watchman-என்னை அழைத்துச்சென்று எப்படி இந்த புழுதியான தரையில் படுப்பீர்கள், உங்களைப்
போன்றவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர் ஒருவர் உண்டு அங்கு நீங்கள் சென்றால் தங்குவதற்கு
நல்லஇடம் கொடுப்பார். அங்குபோக என்னை ஏவினார் இரவு 10 மணி, இருக்கும் இடம் எனக்கு தெரியாது
எவ்வண்ணம் செல்வது எனக்கேட்டேன். தேவன் Watchman உள்ளத்தில் பேசினதால் Watchman அவர்களே என்னை அவர் குறிப்பிட்ட இடத்திற்கு
அழைத்துச்சென்றார். கதவைதட்டினேன் கதவைத்திறந்து வெளியில்வந்தார். அவர்தான் சங்கை.ஏ.ஜோதிரத்தினம்
என்பவர் நீங்கள் யார்? என்று கேட்டார் நான் ஊழியம் செய்துவருகின்ற ஒரு ஊழியன் எனக்கூறினேன்.
இந்தநாட்களில் வேலை கிடைக்காததால் வாலிபர்களெல்லாம் தோளில் பை மாட்டிக்கொண்டு, கையில்
வேதத்தை ஏந்திக்கொண்டு வயிற்றுப்பிழைப்புக்காக
சுற்றுகிறார்கள்.
சி.எஸ்.ஐ போதகர் படுக்ககொடுத்த இடத்தைக்காட்டிலும் இது நன்றாக
இருந்தபடியினால் கர்த்தருக்கு நன்றி கூறி படுத்துக்கொண்டேன். அடுத்தநாள், காலை உணவுக்குப்பின்
சங்கை ஏ.ஜோதிரத்தினம் அவர்களை சந்தித்து நன்றி கூறி பிரயாணம் செய்ய அனுமதிகேட்டேன்.
அப்போது என்னைக்குறித்து விவரமாக விசாரித்தார்கள். மருத்துவமனையில் ஒரு மாதம் விடுப்பு
எடுத்துக்கொண்டு ஊழியபிரயாணத்தை பற்றி அவர்களுக்கு தெளிவாக்க்கூறினேன்.
ஆவியானவர் அவருக்குள் கிரியைசெய்ய அவர்கள் என்னை நேசிக்க முற்படுவதை
அறிந்தேன். இரண்டு தினங்கள் அவர்களுடன் தங்கி ஊழியம்செய்ய கேட்டுக்கொண்டதின் பேரில்
அங்கு சிலநாட்கள் தங்கி திருப்பணிசெய்தேன். சித்தூர் (ஆந்திரமாநிலம்) அருகிலுள்ள பச்சனப்பள்ளி
நாரக்கல் என்கிற கிராமங்களுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ஊழியம் செய்துவரும் ஊழியர்
ஜேக்கப் என்பவரிடம் என்னை அறிமுகப்படுத்தி அங்கு தங்கியிருந்து சில தினங்கள் ஊழியம்
செய்தபின் திரும்ப என்னை காட்பாடிவரும்படி கூறி என்னை பச்சனபள்ளியில் விட்டுவிட்டு
சங்கை.ஜோதிரத்தினம் அவர்கள் காட்பாடி சென்றுவிட்டார்கள்.
அநேக நாட்கள் அங்கு தங்கி ஊழியம் செய்தேன். என் விடுமுறை நாட்கள்
கடந்துவிட்டதால் நேரடியாக சொந்தஇடத்திற்கு வந்துவிட்டேன். என் வீட்டிற்கு வந்தபோது
என் பாக்கெட்டில் மூன்றுரூபாய் இருந்தது. ஒரு மாதம் முழுவதும் பிரயாணம் செய்வதற்கும்,
தங்குவதற்கும் உண்ண உணவும், அறிமுகம் இல்லாத இடங்களில் வழிநடத்திவந்த நிலையை நினைத்து
இறைவனின் சித்தத்தையும் அறிந்துகொண்டேன். ஊழியத்திற்கு என்னை அழைத்தது உண்மை என்பதே
ஆக்கப்பூர்வமாக உள்ளத்தில் உறுதிப்படுத்திக்கொள்ள கர்த்தர் கிருபைசெய்தார். மே மாதம்
முதல் தேதியன்று மிகுந்த மகிழ்வுடன் திரும்ப மருத்துவபணி ஸ்தலத்திற்கு சென்று பணிசெய்தேன்.
இல்லறவாழ்க்கை :-
மருத்துவமனையில் பணிசெய்துகொண்டு ஆத்தும ஆதாயம் செய்துவருவதை
கேள்விப்பட்ட சேலத்தில் உள்ள ஒரு விசுவாச குடும்பத்தினரும், ஒரு தேவ ஊழியரும் என்னை
சந்தித்தார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு மகள் உண்டு. அவளை திருமணம் செய்துகொண்டால் 4 ஏக்கர் நிலம் தருவதாகவும் மாதமாதம் ஊழியத்திற்கு உதவிசெய்வதாகவும்
அவர்கள் அழைத்துவந்த போதகர் ஆசீர்வாதம் முன்னிலையில் கூறினார்கள். ஊழியம் செய்வதற்கு
உதவிசெய்யும் குடும்பம் கிடைப்பது தேவகிருபை என்று கருதி ஒப்புதல் கொடுத்தேன். அத்தருணத்திலிருந்து
அவர்கள் இல்லத்திற்கு நான் செல்லும்போதெல்லாம் வருங்கால மருமகன் என்ற எதிர்பார்ப்புடன்
அன்புடன் உபசரிப்பார்கள்.
தேவனின் அனாதி தீர்மானமும் ஆலோசனையும் :-
நான் பிறந்துவளர்ந்து கிராமத்தில் ஊழியம் செய்யவும், திருச்சபை
சந்திக்கவும் கற்றுக்கொண்டபடியால் அனேகர் ஆண்டவரை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களில் சில
வாலிபப்பெண் பிள்ளைகளும் உண்டு என்னை ஆவிக்குரிய வாழ்க்கையில் பக்குவப்படுத்தி வழிநடத்தினவர்
சங்கை.ஞானாதிக்கம் அய்யா அவர்கள், சங்கை.ராஜா ஸ்டீபன் அவர்களின் மாமனார் என்பதை குறிப்பிடுகிறேன்.
என் ஊழியத்திலும், ஆவிக்குரிய வளர்ச்சியிலும் அதிக முயற்சியுடன் உதவிசெய்தவர்கள்.
பலமுறை எங்கள் கிராமத்திற்கு வந்து வசதியில்லாத எங்கள் இல்லங்களில்
எங்களுடன் தங்கியிருந்து ஆவிக்குரிய கூட்டங்களை நடத்தி எங்களை ஊக்குவித்து வளர்த்துவந்தார்கள்.
எனவே சிறியோர், பெரியோர் அனைவரும் அவரிடத்தில் பாசத்தோடு பழகுவார்கள். அய்யா அவர்களும்
கரிசனையுடன் அனைவரையும் விசாரிப்பார்கள். இப்படியாக ஒருநாள் ஒவ்வொரு வாலிப பெண்
பிள்ளைகளைக்குறித்து விசாரித்து ஆலோசனை கொடுத்துவந்தார்கள். முறையுள்ள பெண் பிள்ளைகளுக்கு,
முறையான வாலிபர்கள் இருந்தால் அவர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும், விசேஷமாக ஜான்சிராணி
என்கிற வாலிபபெண் விசுவாசியைக் குறித்து விசாரித்தார். ஜான்சிராணி எனக்கு ஜோசப்முறையாக
இருக்கிறார், என்பதை அறிந்துகொண்ட அவர், கல்யாணம்
செய்துகொள்ளவும், விசுவாச ஊழியத்திற்கு தகுந்ததாகவும், திருச்சபை கட்டுவதற்கு வளர்ச்சிக்கேதுவாகவும்
கூறி, ஜான்சியை திருமணம் செய்துகொள்ள கட்டளையாக கூறினார்கள்.
அவள் நல்ல உறுதியான விசுவாசி, ஆனால் அவள் குடும்பம் மிகவும்
ஏழ்மையானது. நாகரீகமற்றவர்கள், விரும்பக்கூடியவர்களல்ல இருப்பினும் போதகர் ஐயா அவர்கள்
வார்த்தை தேவவாக்காக கருதி ஜான்சியை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்துவிட்டேன்.
இறைவனின் திருதிட்டமாக இருந்ததால் பெற்றோர், சகோதர, சகோதரிகள் அனைவரும் விரும்பியதால்
திருமணம் செய்வதற்கு ஏற்பாடுகள் நடக்க ஆரம்பமானது.
ஆனால் திருமணச் செலவிற்கு பணம் இல்லை. ஆனால் என் பெற்றோர் அச்சப்படவில்லை காரணம்
தோட்டம் இருக்கிறது. தோட்டத்தின் பெயரில் கடன்கொடுக்க ஆட்கள் உண்டு கடன் பெற்று திருமணத்தை
சிறப்பாக செய்துவிட தீர்மானித்தார்கள். ஆண்டவரோடு இணைக்கப்பட்ட ஒருநல்ல அனுபவமிருந்ததால்
கடன் பெற்று கல்யாணம் செய்யமாட்டேன், என் திருமணத்திற்கு கடன் பெறவேண்டாம். கடன்படாமல்
திருமணம் செய்யவேண்டும் கர்த்தர் உதவி செய்வார் என திட்டமாகக்கூறினேன். திருமண பத்திரிக்கையை
கர்த்தருடைய பிள்ளைகள் அனைவருக்கும் அனுப்பிவைத்தேன்.
என்னுடன் பணி செய்துவந்த வெளிநாட்டு மக்கள், எனது திருமணத்திற்கு
ஒருவாரத்திற்கு முன்னதாகவே வெகுமதியாக பணம் கொடுத்தார்கள். அதைவைத்துக்கொண்டு ரூபாய் 100 க்குள் மாப்பிள்ளை பெண் இருவருக்கும் ஒரே சாதாரண வகையில்
உடை எடுத்துக்கொண்டேன்.
தமிழ் மாதமான ஆடியில் திருமணம் வைக்கக்கூடாது என்பது இந்துமக்களின்
கலாச்சாரம். தேவதயவால் ஆடி மாதம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி 1967 ஆம் ஆண்டு காலை 10 மணியளவில் திருமணம் தேவ ஆசீர்வாதத்துடன் நடைபெற கர்த்தர் கிருபை அளித்தார்.
கடன்பெறா, ஆடம்பரமற்ற திருமணம், தேவ ஆடம்பரம் நிறைந்த திருமணம். திருமணத்தில் ஜான்சிராணி
பெற்றோர் அவளுக்கு காதணி, கழுத்துசெயின் அணிவித்திருந்தார்கள். திருமணம் நடந்த
அடுத்த தினம் இறைவனால் எனக்கு துணைவியாக இணைக்கப்பட்ட ஜான்சியுடன் ஒரேமனதுடன் சேர்ந்து
ஜெபிக்க கர்த்தர் கிருபை செய்தார். ஜெபம் முடிந்தது இருவரும் நன்றி நிறைந்தமனதுடன்
கர்த்தருடைய புனித நாமமகிமைக்காக இருவரும் அர்ப்பணிப்புடன் சம்பாசித்தோம். ஆடம்பர
வாழ்வை வெறுத்து ,ஆடம்பர வாழ்வுக்கு செலவாகும் தொகையை கர்த்தருடைய திருப்பணிக்கு
பயன்படுத்த வேண்டும். எனவே உன்கழுத்திலும், செவியிலும் அணிந்திருக்கின்ற ஆபரணங்களை
கழற்றி ஊழியத்திற்கு பயன்படுத்த கொடுக்க ஆலோசனை கூறினேன். தாமதமின்றி திருமணம் நடந்த
இரண்டாம் நாளில் காதிலும், கழுத்திலும் அணிந்திருந்த ஆபரணங்களை கழற்றிகொடுக்க ஜெபத்துடன்
பெற்றுக்கொண்டேன். இரு வீட்டார் பெற்றோர்கள் ஆலோசனை கேட்காமலும், தெரியாமலும், விற்று
கர்த்தருடைய திருப்பணிக்கு பயன்படுத்தப்பட்டது. வாலிப வயதில் மறுக்காமல் கர்த்தரைப்
பிரியப்படுத்த தம்மை ஆண்டவருக்கு அர்ப்பணித்து வெறுமையாக்கிக்கொண்டது, பரிசுத்த ஆவியானவரின்
வழிநடத்துதல் என்பதில் ஐயமில்லை. என் திருமண உடைகளை ஒருமாதத்திற்கு பின் நேபால் பகுதிக்கு
ஊழியம் செய்யசென்ற ஊழியருக்கு சங்கை.ஜோதிரத்தினம் அவர்கள் மூலம் அனுப்பப்பட்டது. இறைவனின்
திருப்பணிக்கு என்று கொடுப்பது எனக்கு அதிக மகிழ்ச்சி.
மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவம்.
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கட்ராமஐயர் என்பவர் சர்க்கரை
வியாதியால் பிடிக்கப்பட்டு, தனது வலதுகாலில் அழுகின புண்ணுடன் பயத்துடனும், வேதனையுடனும்
வந்தார்கள். அவரை வேதனைப்படுத்தி கொண்டிருந்த புண்ணை சுத்தம் செய்யும் போது
புழுக்கள் ரணத்தில் காணப்பட்டது. நன்றாக சுத்தம் செய்யும்செய்து மருந்துவைத்து கட்டினோம்.
அதன் பிறகு வேதனைக்குறைய ஆரம்பித்தது. அடுத்த தினம் மகிழ்ச்சியுடன்
வந்தார். இயேசு ஆண்டவர் சுகம் தந்தார். கடந்த இரவு தான் நன்றாக உறங்கினேன் என்று கூறிக்கொண்டு
ரூபாய் 10 கொடுத்தார். அதைபெறுவதற்கு எனக்கு சற்றும் மனமில்லை. ஆனால் என்னுடன் பணி
செய்துவருகின்ற இருவர் பெற்றுக்கொண்டார்கள். என்னையும் பணத்தை பெற்றுக்கொள்ள வற்புறுத்தினார்கள்
எனவே பெற்றுக்கொண்டேன்.
ஆனால் என்னால் வீட்டிற்கு செல்லமுடியவில்லை. மனதில் போராட்டம்,
ஆவியானவர் திட்டவட்டமாக பேசினார். எனவே நேராக தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர்.எலிசபெத்
வாம்ஸ்டன் அவர்களிடத்தில் சென்று நடந்த நிகழ்ச்சியை கூறினேன். வெங்கட்ராமன் அய்யா அவர்களிடத்தில்
பெற்றுக்கொண்ட ரூ-10 திருப்பி கொடுத்துவிட்டு மன்னிப்புகேட்டேன். டாக்டர் அம்மையார்
பணத்தை பெற்றுக்கொண்டு என்னை மன்னித்து, ஆறுதல்படுத்தி அனுப்பினார் இந்தநிகழ்ச்சியின்
மூலம் என்மீது தொடர்ந்து நம்பிக்கை கொண்டார். என்னை தேவமனிதனாக பார்க்கவும், உதவி செய்யவும்
கர்த்தர் கிருபை செய்தார். நல்ல சம்பளம், வசதிகள் மேலும் மருத்துவமனையின் மேலாளர் என்னை
அன்புடன் நேசித்தார்கள். பலவகையில் ஆண்டவரின் திருப்பணிக்கு உதவிசெய்தும் வந்தார்கள்.
ஒரு புறத்தில் ஊழியம்
வளர்ந்து வந்தது. அநேக குடும்பங்கள் கர்த்தரை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்டார்கள்.
அனைவரும் கூடிஆராதிக்க இடமில்லாதிருந்ததால் ஒருமனதுடன் ஜெபித்தோம். கர்த்தர் ஓர் இடத்தைத்தந்தார். 1969 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய இல்லந்தோறும் நற்செய்தி
ஸ்தாபனத்திலிருந்து ஒரு சுவிசேஷ குழுவினர் ஓமலூரில் முகாமிட்டு ஊழியம் செய்துவந்தார்கள்,
அந்தநாட்களில் கூடி ஆராதிக்க ஜெபிக்க இடமில்லாததினால் எங்கள் இல்லத்தின் முன்புறத்தில்
அனைவரும்கூடி ஓரு ஜெப வீடு கட்டுவதற்காக ஜெபித்துவந்தோம்.
தேவதயவால் ஜெப வீடு தோற்றுவித்தல் :-
“ பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தை கட்டுவதற்கு கர்த்தர்
உன்னைத் தெரிந்துகொண்டார்.நீ திடன்கொண்டு அதை நடப்பி என்று சொன்னார்“.
1 நாளாகமம் 28:10.
“ஜெபஆலயம் ஒன்று கட்ட தேவ ஒத்தாசையாக தாவீதின்
அரசன் கூறினவண்ணம் எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்”. சங்கீதம்
121:1.
====================================================
ஜெப ஆலயம் கட்டுவதற்கு உள்ளத்தில் ஏக்கமும், ஆலயம்கட்டுவோம்
என்கின்ற நிறைவும்,உறுதியான விசுவாசம் இருந்தது. ஆனால் கையில் பணம்மில்லை, இந்திய இல்லந்தோறும்
நற்செய்தி குழுவினருடன் ஆலய பணியைக் குறித்து பகிர்ந்து கொண்டேன்.
அக்குழுவில் உள்ள ஒரு சகோதரன் கட்டிடம்கட்டும் பொறியாளரிடம்
பணியாற்றினவர், எனக்கு கட்டிடவேலை தெரியும் என உற்சாகமாககூறினார். குழுவில் இருந்த
அனைவரும் வாலிபர்கள். இன்று இரவு ஆலயபணியைத் துவங்குவோம் என்று கூறி ஒரே இரவில் 25’15’ நீளம், அகலம் கடக்கால்வெட்டி வேலையை முடித்துவிட்டார்கள்.
ஆலயபணியை ஆரம்பிக்க ஆவியானவர், ஊழியர்கள் அனைவர் உள்ளத்திலும் அனல் மூட்டிவிட்டார்
அற்புதம்! அற்புதம்! அற்புதம்!!!. ஒவ்வொரு ஊழியர்களும் உற்சாகமாக ஆலய கட்டிடபணிக்கென
காணிக்கை தந்தார்கள். சங்கை.ஜோதிரத்தினம் அவர்கள் ரூபாய் 150/- அனுப்பிவைத்தார்கள். ரூபாய் 500/-
என் கரத்திலிருக்க கர்த்தர் உதவி செய்திருந்ததால் என் திட்டங்கள்
மாற்றமடைந்து, போடப்பட்ட கடக்கால் நீளம்,அகலத்தை சற்று விஸ்தாரப்படுத்தி வசதியாக கட்ட
ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
என்மீது நல்லநம்பிக்கை உள்ள தேவபிள்ளைகள் உதவிசெய்தார்கள். கட்டிடவேலை
முடியும்தருணத்தில் பணக்கஷ்டம் உண்டானபோது கடனாக பொருட்களைப்பெற்று ஆலயபணியைமுடித்தேன்.
1969-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதி சம்பளம் பெற்று முழுதொகையை
கட்டிடபணிக்காக பெற்றகடனைத் தீர்த்துவிட்டேன்.
எனவே குடும்பத்திற்கு தேவையான உணவுபண்டங்களை வாங்கமுடியவில்லை,
சம்பளம் பெற்ற முதல்தேதி உணவு இல்லாபட்டினி ,2-ஆம் தேதி, 3-ஆம் தேதியும் வழக்கம் போல்
வெளிப்புற மருத்துவமுகாம் பணிக்குசென்றேன். மருத்துவமுகாம் முடிந்து வீட்டிற்குவரும்போது
20-பைசா தேனீர் அருந்துவதற்கு வழங்குவார்கள். அந்நாட்களில் போண்டா,
பஜ்ஜி 5-பைசாவிற்கு கிடைக்கும். உணவு விடுதிக்குச்சென்று உட்கார்ந்து 4-பஜ்ஜியை சாம்பாருடன் பெற்று சாம்பாரை மட்டும் அதிகம் சாப்பிட்டு
பஜ்ஜியைக்காட்டி திரும்ப இரண்டுமுறை சாம்பார் ஊற்றக்கேட்டு அதிகசாம்பாருடன் பஜ்ஜியை
புசித்து என்வயிற்றை தண்ணீர் குடித்து நிரப்பிக்கொள்வேன். மூன்று தினங்கள் எங்கள் வீட்டில்
உணவு இல்லாமல் முறுமுறுப்புடன் இருந்தார்கள். எங்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்து 8-மாதம் கடந்து தவழ்ந்து, தவழ்ந்து உருண்டு, பிரண்டு இல்லத்தில்
விளையாடிக்கொண்டிருந்த நாட்கள். தனித்து குடும்பவாழ்க்கை செய்வதற்கு ’’ஆலயம் கட்டும்பெயரில்’’
வீடு கட்டுகிறேன் என்று என் பெற்றோர் நினைத்து முறுமுறுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆலயக்கட்டுமான பணி முடிவடைந்தது. கட்டிமுடித்த ஆலயம் பிரதிஷ்டை
செய்து திறந்து வைப்பதற்காக என்னை கிறிஸ்துவுக்குள் வழிநடத்திய சங்கை.ராஜா ஸ்டீபன்ஸ்
அவர்களை அழைப்பதற்காக என் மூத்தசகோதரர். சுந்தரதாஸ் அவர்களை அழைத்தேன். உணவில்லாமல்
பட்டினியாய் இருக்கும் மூன்றாம் நாள் மாலை நேரம், மூன்று தினங்களாக இருந்துவருகிறோம்.
எனவே சேலத்திற்கு செல்லும் பிரயாண செலவுக்கு பயன்படுத்தும் ரூபாய்க்கு உணவுபண்டங்கள்
பெற்றுவிட்டால் அனைவரும் சாப்பிடலாமே என என் மூத்தசகோதரர் ஆலோசனை கூறினார்கள்.
ஆண்டவரை ஆராதிக்கும் ஸ்தல வேலையாக இருப்பதினால் தேவ ஊழியரை அழைக்கசெல்வது
நல்லது எனக்கூறினேன். எனது மூத்த சகோதரர் சம்மதித்தார்கள் பிரயாணம் சேலம் சென்று, அன்று
இரவு 7-மணி அளவில் சங்கை.ராஜா ஸ்டீபன்ஸ் அவர்களை சந்தித்து ஆலயபிரதிஷ்டை
செய்து திறந்துவைக்க பணிவுடன் வேண்டினோம்.
சமயம் வாய்க்காததால் வர இயலாது என பதில் கூறிவிட்டார்கள். எனவே
பேருந்தில் பிரயாணம் செய்து ஓமலூர் வந்து ஓமலூரிலிருந்து செட்டிப்பட்டி நடந்துவந்தோம்.
அப்போது இரவு 9:00-மணி. அன்று மருத்துவபணி முடிந்து மாலை 5-மணிக்கு வீட்டிற்கு வரும்போது என்னுடன் வேலை செய்துகொண்டிருந்த
ஜெர்மன் தேசத்தை சேர்ந்த சகோதரர், மேர்மீயர் என் முகத்தை சற்று கூர்ந்து கவனித்துப்பார்த்து
ஏன் உன்முகம் மிக வாடலாயிருக்கிறது?, இன்று நீ சாப்பிட்டாயா? என பலமுறைகேட்டார். அவர்
கேட்டுக்கொண்டிருக்கும் போது என் வாயால் பதில் கூறமுடியாமல் என் கண்களிலிருந்து வழிந்த
கண்ணீர்வெள்ளம் அவருக்கு பதில் கொடுத்தது. அவர் அறிந்து புரிந்துகொண்டார்.
ஏன் சாப்பிடவில்லை என
கரிசனையோடு கேட்டார்?. உண்மை சம்பவத்தை கூறினேன் அன்றிரவு (நாங்கள் ராஜாஸ்டீபன் அய்யா
அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த நேரம்) 7-மணி அளவில் மருத்துவமனை
கார் டிரைவர் லூர்துசாமி என்பவரை சகோ.மேர்மியர் அவர்கள் என் வீட்டிற்கு அனுப்பி என்னை
அழைத்திருக்கிறார், அப்போது நான் இல்லை. ஓமலூரில் இருந்து நடந்து வந்தபோது எங்கள் சூழ்நிலைகளை
நினைத்து, எட்டுமாத குழந்தைக்கு பால்கூட வாங்கிகொடுக்க முடியாத நிலைமையாக இருக்கிறதே
என சத்தமில்லாமல் என்னுடன் நடந்துவந்த என் அண்ணனுக்கு அழுகையின் சத்தம் கேட்டுவிடாதபடி
கண்ணீர்வடித்து, அதே வண்ணமாக கர்த்தரோடு பேசிக்கொண்டே வீடுவந்து சேர்ந்தோம். வீட்டிற்கு
வந்தவுடன் உன்னை மருத்துவமனையில் உள்ள சகோ.மேர்மியர் வரும்படி செய்தி அனுப்பினார் என
என் வீட்டில் கூறினார்கள்.
“என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம்
என்று கவலைப்படாதிருங்கள் ”. மத்தேயு 6:31.
மேற்கண்ட செய்தி என்
செவிக்கு இனிமையாக இருந்தமையால் தாமதமின்றி சென்று சகோ மேர்மியர் அவர்களை சந்தித்தேன்
மூன்று தினங்களாக உணவு இல்லாமல் பட்டினியாய் இருப்பதை அறிந்த சகோதரர் அவர்கள் கருணை
உள்ளத்துடன் அன்று மாலையே 100 கிலோ அரிசி 100 கிலோ ராகி கடையிலிருந்து தன் காரில் வாங்கிக்
கொண்டு வந்துள்ளார். அரிசி,ராகி மூட்டைகளை தன் வாகனத்தில் எடுத்து செல்ல இரக்கம் உள்ள மெல்லிய
குரலில் கூறின வார்த்தை தேவனாகிய கர்த்தர் கூறின வண்ணமாக என் உள்ளம் விசுவாசிக்க கண்ணீர்
துளிகள் முத்து துளிகளாக தேவனின் பாதத்தில்
காணிக்கையாக படைத்து பணிந்து கொண்டேன். இரண்டு மூட்டைகளை நான் எவ்வாறு எடுத்துச் செல்வேன் என்று விலம்பினதை அறிந்து சகோ.மேர்மியர்
அவர்கள் காரோட்டியை அழைத்து கட்டளையிட காரில் கொண்டு வந்து என் வீட்டில் இரண்டு மூட்டைகளை
கொடுத்துச் சென்றார்.
அடுத்தநாள் ஸ்தோத்திர
ஜெபக்கூட்டம் வைக்க ஒழுங்குசெய்த அனைத்து விசுவாசிகளையும் வரவழைத்து கர்த்தர் அற்புதமாக
அரிசி,ராகி கொடுத்ததை அவர்களுடன் பகிர்ந்துகொண்டேன்.
“கர்த்தர் எனக்குச்செய்த, எல்லா உபகாரம்களுக்காகவும் அவருக்கு என்னத்தை
செலுத்துவேன். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்”.
சங்கீதம் 117 :12-13
கர்த்தருடையஆலோசனையின்படிபுதியவிசுவாசிகள்உடன்சேர்ந்துதேவனாகியகர்த்தரைபுரிந்துகொண்டேன்கூட்டமுடிவில்அனைத்துவிசுவாசிகளுக்கும்நன்றிநிறைந்தஉள்ளத்துடன்விருந்துகொடுத்தார்கர்த்தர்உதவிசெய்தால்கர்த்தருக்குஸ்தோத்திரம்.
“என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை”
யோவேல் 2:26.
ஆலய பிரதிஷ்டை ஆராதனை:
1969-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 9 மணி அளவில் பிரதிஷ்டை
செய்து ஆலயத்தை திறந்து வைக்கும்படி காட்பாடியில் உள்ள சங்கை.ஜோதிரத்தினம் அவர்களை
அழைத்திருந்தோம்,
எங்கள் அழைப்பிற்கிணங்கி 27ஆம் தேதி காலை 10 மணிக்கு வந்துவிட்டார்கள். ஆலய திறப்பு விழாவிற்கு வருகை தரும்
மக்களுக்கு என்ன விருந்து கொடுக்கயிருக்கிறீர்கள் என்று வினவினார்கள்.
எங்களிடத்தில் பண வசதியில்லாததால்
விருந்து அல்லது தேனீர் கொடுக்க ஆலோசிக்கவில்லை என்று பதிலளித்தேன். ஆண்டவரின் அருளால்
Rev.A.
ஜோதிரத்தினம் ஐயா அவர்கள் பிரதிஷ்டை ஆராதனைக்கு வருகின்ற அனைவருக்கும்
விருந்தளிக்க பொறுப்பேற்று விருந்திற்கு உணவு பண்டங்களை கொண்டு வர ஆயத்தம் செய்தார்கள்.
அவர்களுடன் திருப்பத்தூரில் உள்ள கிறிஸ்து குல
ஆசிரமத்தின் தலைவர்களில் ஒருவரான திரு ஜெயாதாவீது அவர்களை அழைத்து வந்திருந்தார்கள்.
தேவ ஒத்தாசையைக் கொண்டு 1969-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி புனித ஆராதனை நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் திரு. ஜெயா தாவீது அவர்கள் ஆலயத்தை திறந்து வைக்க
சங்கை A.ஜோதிரத்தினம் அவர்கள் பிரதிஷ்டை செய்து ஆண்டவரின் அருள் செய்தியை
பொருளுடன் பிரசங்கித்தார்கள்.
என் நாமும் இந்த ஆலயத்தில் என்றென்றைக்கும் இருக்கும்படி, நான் இதைத்தெரிந்துகொண்டு பரிசுத்தபடுத்தினேன்; என் கண்களும் என் இருதயமும் என்னாளும் இங்கே இருக்கும். 2 நாளாகமம் 7:16
உள்ளவைகளை அவமாக்கும்படி,உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் என்ன பட்டவர்களையும், இல்லாத வகைகளையும் தேவன் தெரிந்துகொண்டார் 1 கொரி 1:28 என்ற திருவார்த்தையின்படி
என்னையும்,
ஆராதனை செய்வதற்காக கட்டின ஸ்தலத்தையும் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்டார்
என்பதில் சற்றும் ஐயப்படவில்லை.
சுவிசேஷ குழு தோற்றுவித்து சுவிசேஷ பணி செய்தல்:-
ஆலயபிரதிஷ்டைக்கு பின் அக்டோபர் மாதம் 1969 முதல் ஞாயிற்றுக்கிழமை
ஆராதனைக்குபின் விசேஷ ஊழியத்தில் நாட்டமுள்ள சகோதரர்கள் 1.சுந்தரதாஸ் 2.டேனியல்
3.சாமுவேல் டம்பாச்சாரி 4.ஜேக்கப் மற்றும் என்னைச்சேர்த்து ஐந்து சகோதரர்கள் கூடி ஊக்கமாக
ஜெபம் செய்தோம். ஆவியானவரின் ஊந்துதலினால் கிராமங்கள் தோறும் சென்று ஊழியம் செய்து,
இரட்சிக்கப்படுகின்ற ஆத்துமாக்களை கொண்டு ஆங்காங்கு திருச்சபை ஸ்தாபிக்க ஒருமனதுடன்
தீர்மானித்துக்கொண்டோம். தேவஒத்தாசை கொண்டு எங்கள் தீர்மானத்தின்படி சமயம் வாய்க்கும்
போதெல்லாம் மூன்றுமைல் தூரத்திற்குள் இருக்கும் கிராமங்களுக்கு நடந்து செல்வோம். அதிக
தூரமான இடங்களுக்கு வாடகைக்கு மிதிவண்டி எடுத்துசொல்வோம். குறிப்பிட்ட இடத்திற்கு சென்று
இசைக்கருவிகளுடன் பாடல்களை பாடும்வேளையில் சகோ. டேனியல் சில சமயங்களில் நடனமாடுவார்.
அப்போது ஏராளமான மக்கள் திரண்டு கூடிவிடுவார்கள். அப்போது கிறிஸ்துவின் தெய்வீக பிறப்பு
அவர் செய்த அற்புதங்கள், மனந்திரும்புதல்கேற்ற பிரசங்கங்கள், அவருடைய பாடு, மரணம்,
உயிர்த்தெழுதல், பரம்ஏறுதல், திரும்ப கிறிஸ்துவின் இரண்டாம் வருகை ஆக பூர்ண சுவிசேஷத்தை
கூறிமுடித்தபின் யார் யாருக்கு பாவமன்னிப்பு வேண்டும்?, நல்வாழ்வு வேண்டும் என்ற கேள்வியுடன்
அழைப்பு கொடுக்கப்பட்டும், பரிசுத்த ஆவியானவர்
கிரியை செய்வார் அனேகர் முன்வந்து அழுகையுடன் தெருவில் முழங்கால்படியிட்டு ஒப்புக்கொடுப்பார்கள்.
1971-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள
கோட்டகவுண்டன்பட்டி கிராமத்திற்கு மாலைநேரத்தில் ஊழியத்திற்கு சென்று, ஒருதெருவில்
நின்று பாடல்கள்பாடி, சுவிசேஷம் அறிவித்தோம். மக்கள் திரண்டு கூடிவந்து நற்செய்தியை
கேட்டார்கள்.கூட்டமுடிவில் அழைப்பு கொடுத்தபோது 9 நபர்கள் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்தார்கள். நன்றாக சத்தியம் அறிந்தபின் 1972-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் தேதியன்று பாவமன்னிப்புக்கென்று
ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்கள், கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
அதுமுதற்கொண்டு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலையில் ஜெபக்கூட்டம்
நடத்திவந்தோம் 1975 –ஆம் ஆண்டு முதல்
ஒருவாடகை வீட்டில் கூடி ஆராதித்து வந்தோம்.தேவகிருபையால் 1983 –ஆம் ஆண்டு கோட்டகவுண்டன்பட்டி சபையிலுள்ள விசுவாசி ஜெபரத்தினம் என்பவர் 3 –சென்ட் உள்ள காலி இடத்தில் ஜெபவீடு கட்டுவதற்கு இலவசமாக தந்தார்.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஜெபவீடுகட்டுவதற்கு மனதும், விசுவாசமுமேயன்றி எங்களிடத்தில்
பொருளாதார வசதி இல்லை.
எங்கள் சுவிசேஷப்பணியில் இரட்சிக்கப்பட்டு சபைக்கு வருகிறவர்கள்
கூலிவேலை செய்கின்ற பாமர மக்கள். ஏராளமான விசுவாசிகள் பிழைப்பதற்காக வெளியூர்களுக்கு
சென்று குடியேறியுள்ளார்கள் விசுவாசிகளிடத்தில் பொருளுதவி எதிர்பார்ப்பதற்கு ஒன்றுமில்லை,
சங்கீதம்
121:1-2
வசனத்தின்படி ஒத்தாசைவரும் பர்வதங்களுக்கு நேராக எங்கள்
கண்களை ஏறெடுத்தோம்.கர்த்தரிடத்திலிருந்து ஒத்தாசை வந்தது. எப்படி? டாக்டர்.செல்வராஜ்
முன்னாள் மாவட்ட மருத்துவ அதிகாரி பிறகு அறிந்துகொள்வீர்கள்,இவர் இரட்சிக்கப்படாத ஒரு
கிறிஸ்தவர்.ஓமலூர் பட்டணத்தில் நடந்த “சமாதானப்பெருவிழா” கூட்டங்களின் மூலம் நம்
சபையுடன் தொடர்புகொண்டு இரட்சிக்கப்பட்டு எங்கள் ஊழியத்திற்கு உதவிசெய்ய முன்வந்தார்.
கோட்டகௌண்டன்பட்டியில் ஜெபவீடு கட்டுவதற்கு நிலம் கொடுக்கப்பட்டதை
டாக்டர்.செல்வராஜ் அழிந்துகொண்டார். அவரிடத்தில் சிகிச்சைக்காக வருபவரிடம் நன்கொடையாக
ரூபாய்
2500 திரட்டி கொடுத்தார்கள். இத்தொகையைக் கொண்டு ஒரு சிறு ஜெப ஆலயமாகக்கட்டி
1986 ஆம் ஆண்டு மே மாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முதல் கிளைசபையாக உருவானது. தற்போது
இச்சபையில் ஏழை, எளியவர்களாக இருந்தாலும், உற்சாகமாக ஆலயத்திற்கு வரவும்,
ஊழியருக்கு உதவிசெய்ய வருகிறார்கள்.
சுவிசேஷ குழுவிற்கு என்னுடைய மூத்த சகோதரர், A.சுந்தரதாஸ் தலைமைப் பொறுப்பேற்று ஊழியத்தை நடத்தி வந்தார்கள்.
சுவிசேஷ குழுவில் உள்ளவர்கள் அனைவரும் சகோ.தானியேலை தவிர வேலையில் இருந்து கொண்டு சுவிசேஷப் பணி செய்து வந்தார்கள்.
நான்(ஜோசப்) தொழுநோய் மருத்துவமனையில் பணி செய்து கொண்டிருந்தேன் சுந்தரதாஸ் குமஸ்தா(Clark) , ஜேக்கப், டீச்சர் சாமுவேல்( EB ) அவரவர் வருவாயிலிருந்து உற்சாகமாக தசமபாக காணிக்கை கொடுப்பார்கள்.
இதைக் கொண்டே ஊழியம் சிறப்பாக செய்ய கர்த்தர் அருள்புரிந்தார்.
நான் மருத்துவ பணி செய்துகொண்டு சுவிசேஷப் பணி செய்வதற்கு மிக
உதவியாய் இருந்தது. என்னுடைய மூத்த சகோதரர் A.சுந்தரதாஸ் அவர்கள்
சுவிசேஷ திருப்பணியில் எனக்கு வலதுகையாக இருந்துவந்தார்.
மருத்துவத்துடன்
சுவிசேஷப் பணியில் :-
மருத்துவமனையில் 5:30 PM மணிக்கு சேவை செய்யும் நேரம் முடியும். மருத்துவமனைக்கு மிக அருகாமையில் என் வீடு
இருந்தமையால்,
விரைவாக வீட்டிற்குச் சென்று சுவிசேஷ கைப்பிரதிகளை எடுத்துக்
கொண்டு,
ஓமலூரை நோக்கி பெங்களூர் - சேலம் செல்லும் வழியில் நடந்து செல்லுவேன்.
என் எதிரே வரும் மக்களுக்கு சுவிசேஷ புத்தகம், பிரதிகளை கொடுப்பேன்.
இவ்வண்ணமாக ஒவ்வொரு நாள் மாலையும் சுவிசேஷப் பணி செய்துகொண்டு ஓமலூர் நோக்கி செல்லும்போது
அதிகம் படித்த ஒரு பட்டதாரி, வயது 50 இருக்கும் அவரை
சந்தித்து பிரதி ஒன்று கொடுத்தேன். பயபக்தியுடன் பெற்றுக்கொண்டார். ஒவ்வொரு நாளும்
மாலை 6 மணியளவில் அவரை சாலை ஓரத்தில் சந்திப்பேன்.
தன் சரீரத்தை ஆரோக்கியமாக
வைத்துக் கொள்ள தினமும் ஓமலூரிலிருந்து 2 km கிலோமீட்டர் தூரம் நடந்து வருவார். இரண்டு மாத காலமாக சுவிசேஷப் பணியில் வாயிலாக
பழக்கம் (or)
சினேகம் ஏற்பட்டது. ஆனால் அவர் யார் என்று அறிந்து கொள்ள முடியவில்லை.
வாரத்தில் நான்கு தினங்கள் மாலை நேரத்தில் சந்தித்து 2 அல்லது 3 நிமிடங்கள் மட்டும்
பேச வாய்ப்பு கொடுப்பார். அதை பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு முறையும் வித்தியாசமான
கைப்பிரதிகளும்,
நற்செய்தி நூல்களும் கொடுப்பேன். இரண்டு மாதங்களுக்குப் பின்
அவராகவே என்னிடத்தில் பரிசுத்த வேதாகமம் ஒன்று கிடைக்குமா என்று கேட்டார். வேதாகமத்தின்
கிரய தொகையையும் கேட்டு அறிந்து கொண்டு, ஒரு வேதாகமத்துடன்
என்னை சந்தியுங்கள் என்று கூறி தன்னுடைய விலாசத்தை தந்தார்.
மிக ஆவலோடும், எதிர்பார்ப்போடும் அரைமணிநேரம் விடுப்பு எடுத்துக்கொண்டு அவர்
கூறின அடுத்த தினமே ஒரு புதிய வேதாகமத்தை கையிலே ஏந்தின வண்ணமாக அவர் கொடுத்த விலாசத்திற்கு
சென்று ஒரு காவலாளரிடத்தில் அவரை குறித்து கேட்டேன். அவர் பெயர் தியாகராஜன், காவலர் என்னை அழைத்துச் சென்று ஒரு ஜன்னல் வழியாக அவரை காண்பித்து
அவர்தானா என்று கேட்டார். ஆம் அவர்தான் என்று கூறினேன். தன் ஆசனத்தில் அமர்ந்திருந்த
திரு. தியாகராஜன் அவர்களும் என்னை பார்த்து விட்டார். உடனே காவலரிடம் என்னை அழைத்துக்கொண்டு
உள்ளே வரும்படி சைகை காட்டினார். அப்போதுதான் அறிந்து கொண்டேன் அவர் ஒரு நீதிபதி என்று. நீதிமன்றத்தில் இருந்து அவருடைய ஓய்வு அறைக்கு அழைத்துச்
சென்றார்,
இருவரும் உட்கார்ந்தோம்.
அன்றுதான் அவரும் என்னை குறித்து விசாரித்து அறிந்து கொண்டார்.
இயேசுவே மெய்யான தேவன்,
என்னை வாலிப நாட்களில்
பாவமான வாழ்க்கையில் இருந்து விடுவித்து பரம தரிசனத்தினாளும், சந்தோசத்தினாளும் என்னை நிரப்பினார் என்று சுருக்கமாக என் சாட்சியை
பகிர்ந்து கொண்டேன்.
மிகுந்த ஆவலுடன் இரண்டு
நகரங்களையும் கூப்பிய வண்ணமாக புதிய வேதாகமத்தை பயபக்தியுடன் பெற்றுக்கொண்டார். அப்போது
ஒரு வேதாகமத்தின் விலை 5 ரூபாய், விலையையும் செலுத்திவிட்டார்.
1968 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்,உத்தியோகம் மாறுதலாகி அவர் சென்றுவிட்டார், அதன்பிறகு அவரை
சந்திக்க வாய்ப்பு கிட்டவில்லை. மீட்கப்பட்ட ஒரு கிறிஸ்தவரா இருப்பார் என்று நம்புகிறேன்.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.!
1969 ஜனவரி மாதம் பொங்கல்
பண்டிகையை முன்னிட்டு மருத்துவமனைக்கு விடுமுறை நாளாக இருந்தது, அந்த நாளில் சுவிசேஷப் பணி செய்வதற்காக 50 வயது உள்ள ஊழியர், தாமஸ் ஐயா அவர்களை
என்னுடன் சேர்த்துக்கொண்டு 3 கிலோமீட்டர் தொலைவில்
உள்ள காமான்டப்பட்டி கிராமத்திற்கு சென்று
ஒவ்வொரு வீடாக சந்தித்து சுவிசேஷம் அறிவித்து வந்தோம். இந்த கிராமத்தில் உள்ள மக்கள்
நான் பணி செய்து வருகிற மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள அநேகர் வந்து கொண்டிருப்பதால்
என்னை அறிவார்கள். எனவே அன்று எங்களை அன்போடு
ஏற்றுக் கொண்டு நற்செய்தியை கவனமாய்க் கேட்டு, நற்செய்தி புத்தகங்களைப்
பெற்றுக் கொண்டார்கள்.
இந்தக் கிராம தலைவர் குஞ்சுகவுண்டர்
என்பவர் எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர். பலமுறை சுவிசேஷத்தை கேட்டு அறிந்தவர்.
எனவே அன்று அவர் வீட்டிற்கு சென்றோம். அவர் வீட்டில் இல்லை வெளியூர் சென்று இருந்தார்.
அவர் மனைவி எங்களை விசாரித்து யாரென்று அறிந்து கொண்டபின் எங்களை உட்காரும்படி கேட்டுக்
கொண்டதின் பேரில் உட்கார்ந்து அம்மையாருக்கு ஆண்டவரின் அருள் செய்தியை அறிவித்தோம்.
அவர்கள் எங்களைப் பார்த்து
மிக தரக்குறைவாக கிறிஸ்தவத்தை குறித்து நினைத்தபடி சில கருத்துகளையும், இந்துக்கள் கோயில்களுக்கு கிறிஸ்தவ சபை கூடுதலுக்கும் உள்ள வித்தியாசங்களை
குறித்து கூறினார்கள். அதாவது ஓமலூர், பல்பாக்கி ஆகிய
இரண்டு இடங்களிலும் காளியம்மன், மாரியம்மன் என்ற இந்துக்கள்
வழிபட்டு வரும் விக்கிரகங்களுக்கு ஆண்டுக்கு
ஒருமுறை திருவிழாக்கள் நடத்துவார்கள். அப்போது மக்கள் சமீபத்திலும், தூர இடங்களிலிருந்து கூட்டம் கூட்டமாக திரண்டு வருவார்கள். நெடுஞ்சாலையில்
வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறங்களிலும் நின்றுவிடும். எங்கு பார்த்தாலும் மக்கள்
வெள்ளம் ஆகவே இருக்கும். சுற்றுப்புறங்களில் உள்ள பள்ளிகள், தொழிற்சாலைகள் அனைத்தும் விடுமுறையாக இருக்கும்.
மேற்கண்டபடி சுட்டிக்காட்டிய
பின் கிறிஸ்தவ சபை கூடுகையில் மிக மிக சொற்பமானவர்களே கூறுகிறார்கள். நீங்கள் கூறுகின்ற
இயேசு ஆண்டவருக்கு சக்தி இருந்தால் ஏன் மக்கள் இந்துக்கள் கோயிலுக்குச் செல்வது போல்
அலையலையாக திண்டுவரக்கூடாது ?
என்று கம்பீரமாக கூறினார்கள். அவர்களுக்கு சரியான பதில் கொடுக்க
ஆவியானவர் எனக்கு உதவி செய்தார். Mrs. குஞ்சுகவுண்டர் மனைவியிடம் நான் கூறியதாவது, நீங்கள் கூறுவது உண்மைதான் இந்துக்கள் கோயில்களுக்கு திரள் கூட்டமும், நம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ சபைகளுக்கு ஒரு சிலர் ஆக கூடி வருவதற்கு
காரணங்கள் உண்டு என்று கூறி விளக்கமாக ஜெபத்துடன் கீழ்க்கண்டபடி விளக்கம் கொடுத்தேன்.
இந்து மக்கள் இந்து
மார்க்கத்தில் இருப்பதற்கும், விக்ரகங்களை தொழுது கொள்வதற்கும், கோயிலுக்கு செல்வதற்கும் எந்தவிதமான நல்ல ஒழுங்கு நடவடிக்கை
இல்லை. திருடர்,
கொலைகாரர், லஞ்சம் வாங்குகிறவர்கள், கூடுதல் வட்டி வாங்குகிறவர்கள், குடித்து வெறித்து இருக்கிறவர்கள், எல்லாவிதமான பாவங்களை செய்கிறவர்கள் அங்கு சென்றாலும் அவர்களுடைய
மாசடைந்த வாழ்வை குறித்து கேட்பதுமில்லை, சத்தியவழிகளை
குறித்து உபதேசம் சொல்வதுமில்லை. மேலும் திருவிழாக்கள் நடக்கும் நாட்களில் பக்தி வினயமாக
ஒன்றும் செய்யாமல் நடனம்,
கலை நிகழ்ச்சிகள், வியாபாரம், சினிமா நட்சத்திரங்களை அழைப்பது, கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகளை கோயிலில் நடத்துவதால் பார்க்கவும், கேட்கவும், ரசிக்கவும் மக்கள் ஓடி
வருகிறார்கள். துர்நாற்றமுள்ள இடத்தில் ஈக்கள்
ஆயிரக்கணக்கில் பறந்து வருகின்ற வண்ணமாக மக்கள் சிற்றின்பங்களை அனுபவிக்க இந்துக்கள்
கோயில்களுக்குத் திரண்டு செல்கிறார்கள்.
ஆனால் மெய்யான இறைவனை வழிபடுகின்ற ஸ்தலத்திற்கு ஒரு சிலரே செல்கிறார்கள்
காரணம் அங்கு (பரிசுத்த ஆலயத்திற்குள்) போக வேண்டுமானால் வாழ்நாள் முழுவதும் கடும்
பத்தியம் கடைபிடித்து பயபக்கியாய் வாழ வேண்டும். அதாவது பரிசுத்தமான வாழ்க்கை செய்யவேண்டும், பொய், கெட்டவார்த்தைகள், விபச்சாரம், கள்ளச்சாராயம், விக்கிரக ஆராதனை அனைத்தையும் விட்டு, அன்பு, தியாகம், விட்டுக்கொடுப்பது, நீதி, நேர்மை, இறைவனின் தன்மைகளை உடையவர்களாக
வாழ அர்ப்பணிக்க வேண்டும்.
இவ்வண்ணமாக வாழ அர்ப்பணித்துக்
கொண்டவர்கள்தான் தெய்வமகள். மத்தேயு 7: 13-14 வசனத்தில் தேவனாகிய கர்த்தர் கூறின வண்ணமாக அழிவுக்கும், நாசத்திற்கும், நரகத்திற்கும் சொல்லுகிறவர்கள் அனேகர்.காரணம் கட்டுப்பாடில்லாத
விசாலமான வழி ஆனால் நித்திய வழியை (மெய்யான தெய்வீக வழி) கண்டுகொண்டு பின் செல்கிறவர்கள்
ஒரு சிலர். அந்த ஒரு சிலர்தான் பரிசுத்த கிறிஸ்தவ மக்கள் என்று கூறி ஜெபத்துடன் முடித்தேன்.
மேற்கண்ட சத்தியங்களை
பொறுமையாக கேட்கவும்,
சத்தியத்திற்கு பயப்படுவும் ஆவியானவர் உதவி செய்தபடியால் Mrs. குஞ்சுகவுண்டர் முற்றிலும்
ஒப்புக்கொண்டு,
முழங்காற்படியிட்டு ஜெபித்து கொண்டார்கள். சம்பாஷனைக்குப்பின்
தன் தோட்டத்தில் உள்ள வேலைக்காரர்களை அழைத்து, இளநீர் வெட்டிக்
கொடுத்து,
உபசரித்து உண்மையை ஏற்றுக் கொண்டு அன்புடன் எங்களை வழி அனுப்பி
வைத்தார்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.!
1975 ஆம் ஆண்டு ஜூன்
மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வழக்கம்போல் ஓமலூர் பட்டணத்தின் ஒரு தெருவில் சாலை
ஓரமாக நின்று சுவிசேஷ குழுவினருடன் பாடல் பாடி நற்செய்தியை ஆத்துமாக்கள் பேரில் உள்ள
பாரத்துடன் இயேசுவின் அன்பு, அன்பின் தியாகம், இரட்சிப்பை தெளிவாகப் பிரசங்கித்து. தெருசாலையின் இரண்டு புறத்திலும்
மக்கள் நின்று கவனித்து கேட்டார்கள். அவர்களில் ஒரு நபர் இஸ்லாம் மார்க்கத்தை சார்ந்தவர்.
ஆனால் தெய்வ நம்பிக்கை அற்ற குடும்பத்தில் உள்ளவர். கம்யூனிஸ்ட் கட்சியில் ஓமலூர் வட்டார
செயலாளராகவும்,
இவருடைய தகப்பனார் மானிய செயற்குழு உறுப்பினராக உள்ளவர்.
இவருடைய பெயர் மக்பூல், தெரு பிரசங்கங்கள் முடிந்த பிறகு கை பிரதிகள், சுவிசேஷ புத்தகங்கள் அனைவருக்கும் கொடுத்து கொண்டிருக்கையில்
மக்புல் அவர்கள் என் அருகில் வந்து நின்று பலவிதமான கேள்விகளை கேட்டார். அவருடைய கேள்விகளுக்கு
முறைப்படி பதில் கொடுக்க பரிசுத்த ஆவியானவர் உதவி செய்தார். முடிவாக ஓய்வுநாள் ஆராதனைக்கு
வரும்படி சொன்னேன்,
அன்புடன் ஏற்றுக்கொண்டு ஜூன் மாத இரண்டாம் ஓய்வுநாள் ஆராதனையில்
கலந்துகொண்டு ஆண்டவரின் அருள் வார்த்தைகளை
கவனமாக கவனிக்க பரிசுத்த ஆவியானவர் உதவி செய்தார். அன்று கொடுக்கப்பட்ட தேவசெய்தி 2 கொரிந்தியர் 5:17 வசனத்தின்படி ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான், பழையவைகள் ஒளிந்தன எல்லாம் புதிதாயின. புதிய ஆவிக்குரிய அனுபவத்திற்கும், இறைவன் கொடுக்கும் புதிய வாழ்விற்கும் அன்று ஒப்புக்கொடுத்தார்.
இவருடைய பிழைப்புக்கடுத்த தொழில் யாதெனில் கடவுள் ஒருவர் உண்டா? என்கிற கேள்வி கேட்கவும்,
கடவுள் இல்லை என்று சொல்வதும், பணம் உள்ளவர்களிடத்தில் பயமுறுத்தி பணத்தை பறிப்பதும்,
இல்லை என்றால் தன் கைவசமுள்ள நபர்களுடன் சென்று அடித்து பொருள்களை களவாடுவது.
எப்போதும் அவருடன் பயங்கரமான ஆயுதங்களை வைத்துக் கொண்டிருப்பார்.
ஆனால் அன்று ஆராதனையில் கர்த்தர் கிரியை செய்தபடியால் புது சிருஷ்டிப்பின் வாழ்வுக்குள்
வந்துவிட்டார். மூன்றாம் நாள் ஆராதனையில் சாட்சிப் பகுதியில் சகோதரன் மக்புல் எழுந்து
நின்று,
தான் மனந்திரும்பி ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்து விட்டதாக கூறி
தன்னிடத்தில் உள்ள தான பயங்கரமான ஆயுதங்களை (சைக்கிள் சைன், கத்தி கைத்துப்பாக்கி)
அனைத்தையும் பிரசங்க பீடத்திற்கு முன் வைத்துவிட்டு நேர்முட்டியில் நின்றார்.
அன்றுமுதல் அவருடைய
வாழ்க்கை புதுமையாக மாறியது. அவருடைய மாற்றத்தை கண்ட மனைவி, இரண்டு பிள்ளைகளும் ஆண்டவரை ஏற்றுக் கொண்டார்கள். ஒழுங்காகவும்
உற்சாகமாகவும் சபைகூடுதலுக்கு வருவார்கள். 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குடும்பமாக
திருமுழுக்குப் பெற்றார்கள். பல மாதங்களுக்குப் பின் வாரந்தோறும் சுவிசேஷ குழுவுடன்
சேர்ந்து கிராமங்களுக்குச் சென்று காட்சி கொடுப்பார். 1980 ஆம் ஆண்டிலிருந்து இஸ்லாமிய
மக்கள் மீது தரிசனம் உள்ளவராய் அவர்கள் மத்தியில் ஊழியம் செய்து வருகின்றார்.
1981-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் "சமாதானப் பெருவிழா" என்கின்ற தலைப்பில்
நற்செய்திக் கூட்டம் ஓமலூரில் சிறப்புடன் நடத்த ஒழுங்கு செய்து, கூட்டங்களுக்கு முக்கிய நபர்களையும் அழைத்தோம். கடந்த மாத சாட்சியில்
இடம்பெற்ற இஸ்லாமிய நண்பர் மன்னான் அவர்களுக்கு அழைப்பு கொடுக்க மேற்கண்ட சகோ.மக்புல்
ஈசாக் அவர்களை அழைத்துச் சென்றேன். மன்னான் பாய் அவர்கள் இல்லத்திற்கு மாலை ஆறு முப்பது
மணிக்கு சென்றோம். திரு மன்னான் பாய் அவர்கள் சேலம் மாவட்டத்தின் இஸ்லாம் மக்களின்
தலைவர். இஸ்லாம் மார்க்கத்தில் அதிக பற்றுதலும், மதிப்பும் உடையவர். இஸ்லாம் மார்க்கத்தின் வளர்ச்சிக்காக தன் கம்பெனி வருவாயில்
ஒரு பகுதியை கொடுப்பவர்.
மெக்கா ஸ்தலத்திற்கு
பலமுறை சென்றவர்,
ஏழை,
எளிய மக்கள் இடத்தில் அன்பும் நட்பும் கொண்டு உதவி செய்வார்.
இத்தன்மைகளைக் கொண்ட இவரிடத்தில் இஸ்லாம் மார்க்கத்தில் இருந்து இயேசு பகவானை உள்மனதுடன்
ஏற்றுக் கொண்டுள்ள மக்புல் ஈசாக் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தேன். இஸ்லாம் மார்க்கத்தில்
இருந்து ஒருவர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டிருப்பது அவருக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமுமாக இருந்தது. மேலும் இஸ்லாம் மார்க்க தலைவர் மக்புல்
ஈசாக் நோக்கி ஏன் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டீர்? என்று கேள்வி
கேட்டார். சகோ. மக்புல் ஈசாக் ஏற்றுக் கொண்டதற்கு காரணத்தையும், இயேசுவை ஏற்றுக்கொண்ட பின் தான் பாவத்திலிருந்து விடுதலை பெற்ற
அனுபவத்தையும் தெளிவாக கூறினார்.
தன்னுடைய அனுபவ சாட்சியை பகிர்ந்து கொண்ட பின், இஸ்லாமியத்தில் உள்ள சில தவறுகளை கூறினார். உடனே இஸ்லாம் தலைவர்
கடும் கோபத்துடன் எழும்பி நின்று அதை பார்த்து, இஸ்லாமியத்திற்கு
விரோதமாக பேசியதாலும்,
கிறிஸ்தவனாக மாறியதாலும்
உன்னை கொலை செய்து விடுவேன், உன்னை கொலை செய்தால்
அல்லா அவர்கள் எனக்கு பரலோகத்தில் வெகுமதிகளை கொடுப்பார் என்று கூறிக்கொண்டே இஸ்லாமிய
மார்க்கத்தின் குர்ரான் புத்தகத்தை பயபக்தியுடன் கரத்தில் வைத்துக்கொண்டு ஒரு மேடையில்
பிரசிங்கிக்கின்ற வண்ணம் இரவு 7 மணி முதல் 8 மணி வரை அல்லா அவர்களை குறித்தும், முகமது நபிகள் போதனைகளை குறித்தும் விமர்சித்து பேசிமுடித்தார்கள்.
அவருடைய செய்தியைக் கேட்டுக் கொண்டே ஜெபித்துக்
கொண்டிருந்தேன்,
அவருக்கு சரியான விதத்தில் உண்மையான சத்தியங்களை அவருக்கு கூற
வேண்டும் என்று ஜெபத்தில் ஆவியானவரின் உதவியை நாடினேன்.
பரிசுத்த ஆவியானவர்
என்னை தெளிவாகவும்,
தைரியமாகவும் வழிநடத்தினார். இஸ்லாமிய தலைவர்களிடத்தில் பேசுவதற்கு
முன்பாக ஒரு நிபந்தனை ஒன்றை கூறி அவருடைய சம்மதத்தைப் பெற்றுக் கொண்டேன்.
நிபந்தனையின் பொருள் :-
1. கிறிஸ்தவமோ அல்லது இஸ்லாமியமோ இரண்டில் ஒன்றுதான் மெய் மார்க்கமாக
இருக்கக்கூடும் இதை ஒப்புக் கொள்வீர்களா என்று கேட்டேன்?, ஒப்புக்கொண்டார்.
2. இந்த இரண்டு மார்க்கத்தில் எது உண்மையான மார்க்கம் என்று அறிந்தால்
அதை ஏற்றுக் கொள்ளவேண்டும். இஸ்லாமியம் தான் மெய்யான மார்க்கம் என்று அறிவுக்கு எட்டினால்
தாமதமின்றி இஸ்லாமியத்தை நான் (A.ஜோசப்) ஏற்றுக்கொண்டு
கிறிஸ்தவத்திற்கு வந்தனம் கூறி விடை பெற வேண்டும். அல்லது கிறிஸ்தவம் தான் மெய்யான
சத்திய மார்க்கம் என்று நீங்கள் (இஸ்லாமியத் தலைவர்) அறிந்தால் இஸ்லாமியத்தை விட்டு
கிறிஸ்தவத்தை பின்பற்ற வேண்டும், இந்த இரண்டாம் நிம்மதிக்கும்
சம்மதம் தெரிவித்தார்.
3. இஸ்லாமிய தலைவர் இரவு
7 மணி முதல் 8 மணி வரை( ஒரு
மணிநேரம் ) பேசிய போது கவனமாக நான் கவனித்தேன். அவருடைய வார்த்தைகளில் ஒன்றுக்கும்
நான் குறுக்கிடவில்லை. இதை சுட்டிக்காட்டி நான் பேசும்போது உங்களுக்குள் கேள்வி எழுப்பினால்
என்னுடைய கருத்துக்கள் பரிமாறின பின்புதான் நீங்கள் பேசவேண்டும் என்ற நிபந்தனைக்கும்
ஒப்புதல் கொடுத்தார். இந்த இஸ்லாமிய நண்பர் எனக்கு நெருக்கமான குடும்ப நண்பராக இருந்த
படியால் அவருடைய குடும்ப வாழ்க்கை எனக்கு ஓரளவுக்கு தெரிந்திருந்தது மேலும் அவர் இரண்டு
மனைவிகளை உடையவர். இரு மனைவிகள் இடத்திலும் வித்தியாசமான அன்பும், ஐக்கியமும் இருந்தது. இவைகளெல்லாம் என் மனதில் கொண்டு என்னுடைய
அனுபவ சாட்சிகளை பகிர்ந்துகொள்ள துவங்கியபோது இரவு 8:15 pm மணி,
பரிசுத்த ஆவியானவர் என்னை பயன்படுத்தினார். ஆவியானவர் நாங்கள்
அமர்ந்திருந்த அறையில் அசைவாடிக்கொண்டிருந்தார்.
அனைவராலும் உணர முடிந்தது. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு முன் இருந்த தீய வாழ்க்கை, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின் உண்டான தூய வாழ்க்கை, சத்தியத்தின் பாதையில் உண்டாகின்ற மகிழ்ச்சி, நித்திய வாழ்வின் நம்பிக்கை இவைகளை தெளிவாக எடுத்துரைக்க ஆவியானவர்
உதவி செய்தார்.
பாவதீய வாழ்க்கையிலிருந்து விடுதலை கொடுத்து தூயவாழ்வை அருளின
கிறிஸ்துவே தேவன்தான் என்று கூறவா? அல்லது
நபி என்று கூறவா? அவர் நபி அல்ல அல்லாவாகிய தேவன் என்று உறுதியுடன் கூறி, பரிசுத்த
ஆவியானவர் அசைவாடிக் கொண்டிருக்கிறார். முழங்கால் படியிட்டு வேண்டுதல் செய்வோம் என்று கூறியபோது இஸ்லாமிய தலைவர் மறுப்பு
கூறாமல்,
கேள்வி ஒன்று கேளாமல் முழங்கால்படியிட்டு ஜெபத்தில் இருந்ததால், என் இருதயம் பரிசுத்த ஆவியினால் பொங்கி வழிந்தது. நடக்க முடியவில்லை, உட்கார முடியவில்லை அப்போது நேரம் சரியாக இரவு 12 மணி, இஸ்லாமிய தலைவர் தன் வீட்டு வேலைக்காரனை அழைத்து, பால், பழம் கொண்டுவர ஆணையிட்டார்.
அத்தபுஸ்டியுள்ள ஒரு கடிதம் ஒன்றை எழுதி அத்துடன் ரூ . 101 ரூபாய் காணிக்கையாக கொடுத்தார்.
பரிசுத்த வேதாகமம் ஒன்று பெற்றுகொள்ள வாசித்தார், பால்,
பழம் சாப்பிட்டு விட்டு இரவு 1 மணி அளவில் அவர்கள் இல்லத்தை
விட்டு கடந்து சென்றோம். அவருடைய விருப்பப்படி வேதாகமம் ஒன்று அவருக்கு கொடுக்கப்பட்டது.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.!
முழுமையாக ஊழியத்திற்கு
அழைக்கப்படுதல் :-
தொழுநோய் மருத்துவமனையில்
வேலை பெறுவதற்கு தேவ ஒத்தாசையைத் தேடி, கருத்துடன், நிபந்தனையுடன்
ஜெபித்தேன். என் ஜெபத்தின் கருத்து :- ஆண்டவரே
ஒரு ஆண்டுக்கு மட்டும் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு கிடைக்க உதவி செய்யும். ஒரு ஆண்டுக்கு
கிடைக்கும் வருவாயை கொண்டு (சம்பளம்) எங்கள் தோட்டத்தின் மீதுள்ள கடனைக்கட்டி தோட்டத்தை
மீட்டுக்கொண்டு விவசாயம் செய்து, அதில் வரும் வருவாயைக்
கொண்டு ஊழியம் செய்வேன்.
எனவே ஒரு ஆண்டு காலத்திற்கு
மட்டும் மருத்துவமனையில் வேலை வாய்ப்பை தாருமென்று நிபந்தனையுடன் தேவ சமூகத்தில் ஜெபித்தேன்.
கர்த்தர் ஜெபம் கேட்டு அற்புதமானவிதத்தில் வேலை கிடைக்க கிருபை அளித்தார். ஜெபத்தில்
கேட்டுக்கொண்ட வண்ணமாக ஒரு ஆண்டிற்குள் கடனை கட்டி, தோட்டத்தை மீட்டுக்கொண்டோம். இது மாத்திரமல்லாது
அதே ஆண்டில் எனக்கு திருமணமும் நடந்து அதன் தேவைகளை கர்த்தர் அற்புதமாக சந்தித்தார்.
மருத்துவமனையில் ஆதியாகமம்
39: 2-4,
யோசேப்போடே கர்த்தர்
இருக்கிறார் என்று எஜமான் கண்டு, தன் வீட்டிற்கு விசாரணை
காரணாக வைத்து தனக்கு உண்டான எல்லாவற்றையும்
யோசேப்பினிடத்தில் ஒப்புவித்தான். இதே வண்ணமாக தேவனாகிய கர்த்தர் என்னோடு இருந்ததினால்
மருத்துவமனை மேலாளர் கண்களில் தயவும், ஒத்தாசையும் கிடைக்க ஆண்டவர் கிருபை செய்திருந்தார்.
எனவே நல்ல சம்பளம், செல்வாக்குகள், வசதிகள், மேல்நாட்டு மக்களுடன்
தொடர்பு,
ஐக்கியம் ஏற்பட்டிருந்தபடியால் ஒரு ஆண்டிற்கு பின் வேலையை விட்டு
ஊழியத்திற்கு வந்துவிடுகிறேன் என்று நிபந்தனையுடன் ஜெபித்த நான், ஒரு பக்கம் சுவிசேஷப்
பணி,
மற்றும் திருச்சபை ஊழியம் வளர்ந்து வந்தபடியினாலும், 10 ஆண்டுகாலம் மருத்துவமனையில்
பணி செய்து கொண்டிருந்தேன்.
அன்பான தேவன் 9 ஆண்டுகாலமாக பொறுமையுடன் என்னை கவனித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் என் நிபந்தனையை நினைவுகூர்ந்து முழுநேர திருப்பணிக்கு திரும்பிவரவில்லை. நானாகவே
என் நிபந்தனைப்படி ஊழியத்திற்கு வருவேன் என்று காத்திருந்த தேவன், மருத்துவ பணியை விட்டு வராததை அறிந்த கர்த்தர், அவரே என்னை அவரது தீர்மானத்தின்படி இருக்க சித்தம்கொண்டார்.
கீழ்காணும் மூன்று சம்பவங்களின் படி என்னை சந்தித்து உணர்த்தி,
முழு நேர ஊழியத்திற்கு அழைத்தார் :-
1973 ஆம் ஆண்டு, மார்ச்
மாதம் 9-ஆம் தேதி மாலை 6 மணியளவில், விறகு
கட்டை ஒன்றை கைகளால் வெட்டிக்கொண்டு இருந்தேன். என் வலது கை தோள்பட்டைக்கு பின்புறமாக
விறகு கட்டையை வீசும்போது,
என்னுடைய மூன்று வயது மூத்த மகன் ஜட்சன் எனக்கு பின்புறமாக நின்று
கொண்டிருந்ததை அறியாததினால் விறகு கட்டை அவனுடைய
கண் அருகில் அடித்ததால் ஓ...ஓ....ஓ..! என்று வீறிட்டு அழுது கொண்டு கீழே விழுந்து கிடந்தான்.
இரத்தம் வடிய கண் இமை இரண்டும் மூடி வீக்கம்கொண்டது, இந்த விபத்து ஏற்பட்டவுடன், ஒரு ஆண்டு காலத்திற்கு பின் ஊழியத்திற்கு வந்து விடுகிறேன், என்ற நிபந்தனையை அன்று பரிசுத்த ஆவியானவர் நினைவுபடுத்தியால் உள்ளம் உடைக்கப்பட்டவனாக, ஆண்டவரே என்னுடைய நிர்விசாரத்தை மண்ணியும், என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊழியத்துக்கு வந்துவிடுகிறேன், என் மகனுக்கு கண் எவ்வித சேதமும் இல்லாமல் காத்துக் கொள்ளும், என்று கண்ணீருடன் ஜெபித்தப்பின் கண் மருத்துவமனைக்கு எடுத்து
சென்றோம். டாக்டர் பரிசோதனைக்குப் பின் கண்ணில் எவ்வித சேதமும் இல்லை பயப்பட வேண்டாமென்று
டாக்டர் கூறினார்.
தேவ தயவால் சில தினங்களுக்குள்
குணமடைந்து விட்டது. என் வேலையை இராஜினாமா செய்வதற்கு, அனுபவம் முதிர்ந்த வயதுள்ள ஊழியர்கள் Rev.D.L. ஞானாதிக்கம் & Rev.பெஞ்சமின்,
சேலம். இவர்கள் என்
ஊழியத்திற்கு ஆலோசகர்களாகவும், என்னை வழிநடத்துகிறவர்களாக
இருந்தமையால் அவர்களை அணுகி, மருத்துவ பணியை விட்டு
முழுநேர திருப்பணிக்கு வருவதற்கு தீர்மானித்து உள்ளதை தெரிவித்து, அவர்கள் ஆலோசனைகளை கேட்டேன்.
சில தினங்களுக்கு பிறகு
இருவரும் ஒரே விதமான ஆலோசனை கூறினார்கள். அதாவது :- மருத்துவ பணி செய்துகொண்டே ஊழியம் செய்வது நல்லது, யாருடைய உதவியும் தேவைப்படாது. கூடார வேலை செய்துகொண்டே ஊழியம்
செய்துவந்த பவுல் அடிகளை போல் மருத்துவ பணி
செய்துகொண்டு ஊழியம் செய்வது நல்லது. எனவே வேலையை ராஜினாமா செய்யவேண்டாமென்று இரண்டு
ஊழியரும் ஒரேவிதமான பதில் கூறி என்னை ஊக்குவித்த படி, மருத்துவப் பணி செய்து கொண்டு தொடர்ந்து ஊழியம் செய்து வந்தேன். ஊழியம் வளர்ந்து வந்தது. புதிய ஆத்துமாக்கள் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம்
பெற்று சபையில் சேர்க்கப்பட்டு, சபை உற்சாகமாக காணப்பட்டது.
என் வயதுக்கு, மூத்த ஊழியர்கள் கொடுத்த ஆலோசனை சரியானதுதான் என்று நினைத்து என்னை
திருப்தி படுத்திக் கொண்டேன்.
இரண்டாவது முறையாக தேவன் என்னை சந்தித்து உணர்த்தியதை கீழே எழுதி குறிப்பிடுகிறேன் :-
1973 ஆம் ஆண்டு மே மாதம்
முதல் ஓய்வு நாள் ஆராதனை முடிந்த பின் விசுவாசிகள் கூடி, அருகிலுள்ள ஏற்காட்டிற்கு உல்லாசப் பயணமாக சென்று சுற்றிப்பார்க்கவும்,
அதேநேரத்தில், உல்லாசப் பயணமாக வருபவர்களுக்கு
கைப்பிரதிகள், சுவிசேஷம் கொடுக்கலாம் என்று ஒருமனதாக பேசி தீர்மானித்தோம்.
ஏறக்குறைய 4000 அடி உயரமுள்ள மலை சிகரத்தில் அமைந்துள்ள பட்டணம்தான் ஏற்காடு.
ஆங்கிலேயர் ஆட்சியின் காலத்தில் ஆங்கிலேயர்கள் வாசம் செய்த இடம், கோடை காலத்தில் உல்லாசமாக ஓய்வு எடுக்க கூடிய இடம்தான் ஏற்காடு. மே மாதம் குறித்த நாளில் 25 விசுவாசிகள் ஒன்றுசேர்ந்து பேருந்தில் பயணம் செய்து ஏற்காடு சேர்ந்தோம். பேருந்து நிலையத்திலிருந்து "லேடீஸ் சீட்" என்கின்ற உயர்ந்த இடத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தோம்.
மிகவும் உயரமான செங்குத்தான
இடம் எங்களைப் போன்று உல்லாசப் பயணமாக வந்து, சென்று
கொண்டிருந்த மக்களுக்கு கைப்பிரதிகள் சுவிசேஷ புத்தகம் கொடுத்துக்கொண்டும்,
ஏற்காட்டில் உள்ள சபை போதகருடன் (நாங்கள் இருவரும்) விசுவாசிகளைவிட்டு
சற்று அரை கிலோமீட்டர் தூரத்தில் முன் சென்று கொண்டிருந்தோம்.
என்னுடைய மூத்த
சகோதரர் மற்ற விசுவாசிகளை வழிநடத்திக் கொண்டு வந்தார். செங்குத்தான மலைப் பகுதி லேடிஸ்
சீட்டில் இருந்து ஒரு அம்பாசிடர் கார் எங்களை நோக்கி மிக வேகமாக வந்துகொண்டிருந்தது.
இவ்வளவு வேகமாக இந்த கார் வருகிறது யார் மீதாவது விட்டுவிடுவானோ என்று என்னுடன் வந்து
கொண்டிருந்த போதகரிடத்தில் கூறி முடிப்பதற்குள்ளாக
எங்களை கடந்து சென்று எங்கள் விசுவாசிகள் கூட்டத்தில் உள்ள ஒருவர் மீது கார் மோதி விட்டதால், அனைவரும் கதறி கதறி அழுத சத்தம் ஒரே துக்க சத்தமாக கேட்டது.
நான் பின்னிட்டு பார்த்த
போது நம் விசுவாசிகள்தான் கதறி சத்தமிட்டுக் கொண்டு இருந்தார்கள். மனவேதனையுடன் ஐயோ
எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் யார் மீதாகிலும் கார் மோதி இருந்தால் நாம் சகித்துக்
கொள்ளலாம் நாம் அழைத்து வந்துள்ள விசுவாசிகள் மீது மோதி இருக்கக்கூடாதென்று போதகரிடத்தில் கூறிக் கொண்டே வந்தேன். அருகில் சென்று
பார்த்த போது என்னுடைய மூன்று வயது மூத்த மகன் மீதே கார் மோதி இரத்தவெள்ளத்தில் காணப்பட்டான்.
இந்த காட்சியை பார்த்த மாத்திரத்தில் தேவனாகிய கர்த்தரை நோக்கி சத்தமாக கூறிய வார்த்தை, நான் என்னுடைய வேலையை விட்டுவிடுகிறேன் என் மகனுக்கு ஜீவனை தாரும், சரீரத்தில் பழுது ஏற்படாமல் காத்துக்கொள்ளும் என்ற வண்ணமாக கூறி அறிக்கையிட்டேன்.
உடனே என் வேலையை ராஜினாமா செய்து விடுகிறேன் என்ற தீர்மானத்துடன் அதே காரில் அவனை எடுத்துக்கொண்டு
மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்து பரிசோதித்து பார்த்தபோது பாதிப்பான விபத்தாக
காணப்படவில்லை.
மருத்துவமனையில் பணி
செய்வது ஊழியத்திற்கு உதவியாகவும், வளர்ச்சிக்கு
ஏதுவாகவும் இருந்தபடியால்,
விசுவாசிகளும், என் குடும்பத்தாரும்
வேலையை விட வேண்டாம். ஊழியத்திற்கு உதவியாகவும், வளர்ச்சிக்கு ஏதுவாக இருந்தபடியால் விசுவாசிகளும், என் குடும்பத்தாரும் வேலையை விட வேண்டாம், ஊழியத்திற்கு மருத்துவப் பணி தடையாக இல்லையே ஏன் வேலையை விடவேண்டும்
என்று கேள்விகள் கேட்கவும்,
தடை செய்யவும், ஆலோசனைகள் கூறி
வந்தார்கள். இதனால் ஒரு சில மாதங்கள் கடந்தன.
மூன்றாவது முறையாக என்னை உணர்த்தி மருத்துவ பணியிலிருந்து பிரிந்து
முழுமையாக அழைத்த அழைப்பை குறிப்பிட்டு எழுதுகிறேன் :-
1974-ஆம் ஆண்டு பிப்ரவரி
மாதம் 19-ம் தேதி இரவு உணவுக்குப்பின் ஸ்தோத்திரப் பாடல்களைப் பாடி வேதம்
வாசித்து ஜெபம் செய்த பின் படுக்கைக்கு சென்று இன்ப நித்திரையிலிருந்து வழக்கம் போல காலை 5 மணிக்கு பாடல் பாடி வேதம் வாசித்து ஜெபம் செய்த பின் காலை கடன்களை
முடித்து 7
மணி அளவில் மருத்துவமனைக்கு செல்லும் நேரம் வரை என் மகன் ஜெட்சன்
படுக்கையிலேயே படுத்திருந்தான், நன்றாக தூங்குகிறான்
என்கிற நினைப்புடன் இருந்த நான் அவனை உற்றுப் பார்த்து போது படுக்கையிலேயே சிறுநீர்,மலம் கழித்துக் கொண்டு, ஈக்கல் அவன் மீது
அமர்ந்த வண்ணமாக உணர்வற்ற நிலையில் இருந்தான், மரித்தவன் போல
காணப்பட்டான். அந்த நாளில் எங்கள் சபையில் செய்தி கொடுக்க, ஊழியர் சுந்தர் சிங் என்பவர் வந்திருந்தார்கள். அவர் என் மகனைப்
பார்த்தவுடன் இரண்டு கரங்களால் அவனை எடுத்து ஏந்திக்கொண்டு நான் பணிசெய்து கொண்டிருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். மருத்துவ பரிசோதனைக்கு
பின் அவனுக்கு IV
(நரம்பு ஊசி) கொடுக்க, நரம்பு இரத்தக்
குழாய் கண்டுபிடிக்க முயற்சித்தார்கள் நேரம் கடந்து கொண்டிருந்தது.
இந்த சமயத்தில் முழுமனதுடன் இனி தாமதம் செய்யாதபடி, இன்றே நான் என் பணியை ராஜினாமா செய்து விடுகிறேன், என் மகனுக்கு ஜீவன், சுகம் தந்தருளும்
என உண்மை,
உறுதியுடன் ஜெபித்து தேவனுடன் ஒப்புறவு கொண்டேன். நரம்பு கண்டுபிடித்து
IV கொடுப்பதற்கு முன்பாகவே என் மகன் நிறைவுபெற்று கண் திறந்து பார்த்தான், உடனே ஒரு டம்ளர் டீ கொடுத்தார்கள். டீ அருந்தின சில நிமிடங்களில் தெளிவடைந்து உட்கார்ந்து கொண்டான்.
டாக்டர்களே ஆச்சரியப்பட்டார்கள். மருத்துவமனைக்கு சுயநினைவற்றவனாக தூக்கிச் செல்லப்பட்டவன்
1-1/2
மணி நேரத்தில் சிகிச்சை இல்லாமல் பெலனடைந்து நடந்து வீட்டிற்கு வந்தான். இதற்கு
வைத்தியம் உண்மையான ஜெபம்.
கர்த்தருக்கு நன்றி
கூறி அன்று தாமதமின்றி ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டேன். “யோவான் 12:26” வசனத்தின்படி, முழுமையாக கர்த்தரை சார்ந்து அவருக்கு ஊழியம் செய்வோம் கர்த்தர்
என்னை கணம் பண்ணி,
அனைத்து நன்மைகளை அருள்செய்வார் என்கின்ற விசுவாசத்துடன் கடந்துசெல்ல
கர்த்தர் பெலன் தந்தருளினார். என்னுடைய ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்ட தலைமை மருத்துவ
அதிகாரி Dr.எலிசபெத்தி வாம்ஸ்டின் அவர்களுக்கு என்னுடைய ராஜினாமா கடிதத்தை
அங்கீகரிக்க மனம் இல்லாவிட்டாலும் தெய்வ பணி செய்வதற்கு தடையாக இருக்க கூடாது என்ற
நல்ல எண்ணத்துடன் அங்கீகரித்துக் கொண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி ஒரு பிரிவு உபசார
விழா ஒழுங்கு செய்தார்கள். அனைத்து பணியாட்கள்
அனைவரும் வந்திருந்தார்கள். அக்கூட்டத்தில் "விந்தை கிறிஸ்தேசு ராஜா உந்தன் சிலுவை
என் மென்மை" என்ற பொருளுள்ள பாடலை பாடி, என்னை மீட்டு
அழைத்த தேவாதி தேவனுக்கு பணிவிடை செய்து அவருடைய புனித நாமத்தை பிரஸ்தாபப்படுத்த செல்கிறேன்.
கடந்த 10 ஆண்டு காலமாக
எல்லாவிதத்திலும் உதவி அளித்து வந்த டாக்டர் எலிசபெத் வாம்ஸ்டின் அவர்களுக்கு நன்றி கூறி அவர்கள் கொடுத்த நினைவு வெகுமதிகளைப் பெற்றுக் கொண்ட என்னை
வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்கள். நான் உனக்கு
கட்டளையிடவில்லையா? “பலங்கொண்டு திடமனதாயிரு, திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்”.
யோசுவா 1:9 இந்த தேவ வேதவாக்கு என் உள்ளத்தில் தொனிக்க தேவ பலத்துடனும் எதிர்பார்ப்புக்களுடனும்
என் இல்லத்திற்கு வந்து சேர்ந்தேன், கர்த்தருக்கு
ஸ்தோத்திரம்.
“தேவன் தனிமையானவர்களுக்கு
வீடு வாசல் ஏற்படுத்தி கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்”. சங்கீதம் 68 : 6.
எங்கள் திருமண வாழ்வில் எங்கள் பெற்றோருடன் மூன்று ஆண்டுகாலம்
ஒரே இல்லத்தில் வாழ்ந்து வந்தோம். நாங்கள் எங்கள் பெற்றோர், சகோதர், சகோதரிகள் ஒரே இல்லத்தில்
வசிப்பதற்கு இடம் மிகவும் இடுக்கமாக இருந்தமையால் அப்போது அமைக்கப்பட்டிருந்த ஜெப வீட்டிற்கு
அருகாமையில் ஒரு சிறு கூரை வீடு கட்டினோம், 16 அடி நீளம்
9 அடி அகலம் 2 அறைகள் அமைக்கப்பட்டிருந்தது, வீட்டிற்குள்
நுழையும் போது நன்றாக குனிந்து தான் உள்ளே செல்ல
முடியும். சமையலறை ஒன்று, மற்றொன்று படுக்கையறை, படுக்கை அறையிலேயே தான் வீட்டு சாமான்கள், பெட்டி படுக்கை அனைத்தும் இருக்கும்.
நன்றாக காற்று அடித்து மழை பொழியும்போது வீட்டுக்குள் தண்ணீர்
மேல் கூரையில் இருந்து கசிந்து விழும். அப்போது படுக்க இயலாமல் ஸ்தோத்திரப் பாடல்களைப்
பாடி நின்ற வண்ணமாக ஜெபிப்போம். அவ்விதமாக நேர விதமான நேரங்களில் தேவனாகிய கர்த்தர்
எங்கள் அருகில் இருக்கிற வண்ணமாகவே உணர்ந்து சோர்ந்துவிடாமல் உற்சாகமாய் இருக்க பரிசுத்த
ஆவியானவர் உதவி செய்வார். சில நேரங்களில் வீட்டிற்குள் குடை பிடித்துக் கொண்டு படுத்து
நித்திரை செய்து இருக்கிறோம். இந்த சூழ்நிலையில் வசதியான வீடு ஒன்று கட்டுவதற்கு என்
மனைவி ஆலோசனை கூறுவாள். மருத்துவ பணியை விட்டு முழு நேர ஊழியத்திற்கு வரும் முன் வீடு
கட்ட வேண்டும் என்று என்னை துரிதப்படுத்துவாள்.
நமக்கு வீடு தேவை என்று கர்த்தர் அறிவாரானால் கர்த்தரையே நமக்கு
வீடு கட்ட உதவி செய்வார்,
ஆனால் வீடு கட்ட என்னிடத்தில் பணம் இல்லை என்று கூறுவேன். மருத்துவமனையில்
வேலை செய்யும் போது சம்பளத்தில் ஒன்றும் சேமித்து வைக்க வில்லை. நன்றாக புசித்தோம், உடுத்தினோம், மீதமுள்ள தொகையை
சுவிசேஷ பணிக்காக பயன்படுத்துவேன். இரண்டு சுவிசேஷ ஊழியர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தேன்
இரண்டு ஊழியர்களும் என்னுடைய கிராமத்தை சேர்ந்தவர்கள். 1. அண்ணாமலை ஜேம்ஸ் 2.ராமர்
லாசர் எனவே என்னால் பணம் சேர்த்து வைக்கவோ வீடு கட்டவோ இயலவில்லை நாட்டமுமில்லை. எல்லாம்
கர்த்தர் செய்வார் என்கின்ற விசுவாசம் மாத்திரம் என்னிடத்தில் அழியாத சொத்தாக இருந்தது.
1974 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் தேதியிலிருந்து முழுநேர ஊழியராக
பணி செய்து வருகிறேன். நான் மருத்துவ பணி செய்து கொண்டிருக்கும் போது என்னுடன் ஜெர்மனி
தேசத்தைச் சார்ந்த சகோதரர் மேர்மியர் என்பவர், நான் மருத்துவமனை
பணியை விட்டு வரும்போது விலகும்போது ஜெர்மன் தேசத்திற்கு சென்று இருந்தார், ஒரு ஆண்டு காலம் முடிந்த பின் திரும்ப செட்டிபட்டி மருத்துவமனைக்கு
வந்தார்கள். நான் வேலையை விட்டு முழுமையாக திருப்பணி செய்து கொண்டிருப்பதை கேள்விப்பட்டு
என்னை பார்க்கும் படி என் வீட்டுக்கு வந்தார். என் வீட்டிற்கு வருவது இதுவே முதல் முறை.
மிகவும் சிரமப்பட்டு
குனிந்து வீட்டிற்குள் நுழைந்து விரிக்கப்பட்டிருந்த படுக்கை கட்டிலின் மீது உட்கார்ந்தார், மேலும், கீழும், மயில் அறைக்குள்ளும் சென்று உற்றுப் பார்த்தவராக வியப்புடன்
படுக்கையறை,
துணி மாற்றும் அறை, சாப்பாட்டு அறை
மற்றும் குளியல் அறை எங்கே ? என்று என்னை பார்த்து
கேட்டார் சகோ. மேர்மியர் அமர்ந்திருந்த அறையை சுட்டிக்காட்டி கூறினேன், எங்களுக்கு இதுதான் எல்லாம் என்று பதில் கூறினேன். தாமதமின்றி கூறினார் நீ ஒரு
வீடு கட்டிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். ஆம் வீடு எனக்கு தேவைதான் ஆனால் என்னால்
கட்ட முடியாது எனக்கு வீடு தேவை என்று என்னை அழைத்த தேவனுக்கு தெரியும் அவர்தான் அதற்கு
ஆவன செய்ய வேண்டும். சங்கீதம் 123:1-3 வசனங்களில் தாவீது கூறுகின்ற வண்ணமாக அனைத்து
நன்மைகளுக்கும் எங்கள் கண்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி காத்திருக்கிறது.
இயேசு தான் எங்களுக்கு பதிலும், வாழ்வோமாக இருக்கிறார் என்று கூறினேன். புன்சிரிப்புடன் சரி
பரிசுத்த ஜோசப் என்றார். அவர் என்னை பரிசுத்த ஜோசப் என்றுதான் அழைப்பார், அவர் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர் ஓயாமல் புகை பிடிப்பார் நான்
பார்க்கும் போதெல்லாம் அவரை பார்த்து புகைப்பிடிப்பது உடலுக்கு நல்லதல்ல அடுத்து கர்த்தருக்கும்
பிரியமானதல்லவென்று கூறுவதுண்டு. எனவே என்னைப் பார்க்கும்போதெல்லாம் HOLY ஜோசப் இன்று தமாஷாக அழைப்பர். என் வீட்டிற்கு வந்த அவருக்கு
தேநீர் கொடுத்தோம் தேநீர் பெற்று அருந்தினார். விடைபெற்றுச் செல்லும்போது அடுத்து நாள்
என்னை வந்துபார் என்று கூறிவிட்டு அவர் இருப்பிடத்திற்குச் சென்று விட்டார்.
அவர் அன்பு அழைப்பை
ஏற்று குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனையில் உள்ள அவர் அறைக்கு சென்றேன். என்னை அமரும்படி
கூறினார். வீடு கட்டுவதற்கான ஒரு வரைபடத்தை காண்பித்து இவ்விதவிதமான ஒரு சிறு வீடு
கட்டவேண்டும் என்று கூறிக்கொண்டே வரைபடத்தை என்னிடத்தில் கொடுத்தார். தொழுநோய் மருத்துவமனையில்
உள்ள அதிகமான கஷ்டிடங்கள் இவருடைய மேற்பார்வையில்தான் கட்டப்பட்டது, எனவே கட்டிட தொழிலாளர்கள் யாவரும் இவருக்கு தெரியும்.
1975 ஆம் ஆண்டு ஏப்ரல்
மாதம் 7ஆம் தேதி காலை 7 மணி அளவில் சில கட்டிட தொழிலாளிகளுடன் என் வீட்டிற்கு வந்தார்.
எனக்கு சொந்தமான காலி இடத்தில் அவரே நூல் கயிறு கட்டி கட்டிடத்திற்கு அஸ்திபார ( Fountation ) வேலைகள் செய்ய ஒழுங்கு செய்து விட்டுச் சென்றார். வீடு வாசல்
அற்ற தன்மையானவர்களுக்கு வீடு வாசல் ஏற்படுத்தி கொடுக்கின்ற தேவன் எவ்வளவு உண்மையுள்ளவர்.
தேவாதி தேவனுக்கு கனமும்,
வல்லமையும், மகிமையும் உண்டாவதாக.
அடித்தளம்(Fountation work)
வேலை போட்டு முடிந்தது. கட்டிடவேலை நடந்து கொண்டிருக்கும் வேளையில்
நடந்த சம்பவத்தை குறிப்பிட ஏவப்படுகிறேன் தற்போது மாத வருமானம் இல்லை. மாதம்தோறும்
Dr.Biene
என்பவர் ஜெர்மன் தேசத்தை சேர்ந்தவர். அவர் இங்கு சில ஆண்டுகள்
பணி செய்தார். 1974 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு பணிசெய்ய
சென்றுவிட்டார். அவர் செல்லும்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் அவருடைய கணக்கில்
பணம் இருந்தது. அத்தொகையை எடுத்துக்கொள்ளாமல் மாதந்தோறும் ரூபாய் 100-ஐ எனக்கு கொடுக்கும்படி
ஒழுங்கு செய்துவிட்டுச் சென்றார். ஏழை விசுவாசிகள் கொடுக்கும் காணிக்கையுடன், Dr.Biene அவர்களின் உதவித் தொகையைக்கொண்டும் அனுதின தேவைகள் சந்திக்கப்பட்டு
வந்தது.
1975 ஆம் ஆண்டு திடீர்
விலைவாசி உயர்வால் காணிக்கை கொடுத்து வந்த விசுவாசிகளால் காணிக்கை கொடுக்க முடியவில்லை. Dr.Biene வங்கி கணக்கிலும் பணமில்லை. உணவிற்கு ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தோம்
இந்த சூழ்நிலையில்தான் வீடு கட்டுவதற்கு சகோ.மேர்மியர் முன் வர கர்த்தர் உதவி செய்தார்.
வீடு கட்டுமான பணியில் நாங்களும் வேலை செய்து அதற்குரிய கூலி தொகையை எடுத்து உணவுக்கு
பயன்படுத்தி வந்தோம். எங்களுக்கென்று கட்டப்படும் கட்டிடத்தில் வேலை செய்து கூலி பெற்று
அன்னாளில் காலத்தை கடத்தி வந்தோம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
தேவ கிருபையால் இரண்டு
மாதத்திற்குள் வீடுகட்டி முடிந்தது. 1975 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதி மாலை 4 மணியளவில்
வீடு பிரதிஷ்டை கூட்டம் வைத்திருந்தோம், வீட்டை திறந்து
வைப்பதற்கு Dr.எலிசபெத் வாம்ஸ்டன் அவர்களும், சகோ.மேர்மியர் அவர்களும்
பிரதிஷ்டை ஆராதனை நடத்துவதற்கு சங்கை. ஜெயமினி ஜோசப் சேலம், அவர்களும் வருவதற்கும் சம்மதம் தெரிவித்தார்கள். 28 ஆம் தேதி
இரவு புதுவீட்டில் சாமான்களை எடுத்து வைத்தோம், அத்தனையும் காலி
பாத்திரங்களே ஒரு பாத்திரங்களிலும் உணவு பண்டங்கள் இல்லை, உப்பு முதற்க்கொண்டு இல்லை.
29 ஆம் தேதி மாலை அழைக்கப்பட்ட விருந்தினர்கள் வருவார்கள் ஆனால்
வருகிறவர்களுக்கு டீ குடிப்பதற்கு கூட பணமில்லை. நானும் என் மனைவிமாக சேர்ந்து எங்களுக்கு
ஒத்தாசை வரும் பர்வதமாகிய கர்த்தரிடத்தில் எங்கள் கண்களை ஏறெடுத்தோம். இருபத்தி ஒன்பதாம்
தேதி காலை வந்தது. கர்த்தருடைய பாதத்தை பற்றிக் கொண்டோம். யாரிடத்திலும் தேவையைக் கூற
விரும்பவில்லை,
என்ன செய்வது என்று ஒன்றும் விளங்காதவனாக வேதாகமத்தை கையில்
ஏந்திக்கொண்டு எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தேன்.
காலை 9 மணியளவில் போஸ்ட்மேன்
வந்தார் சார் உங்களுக்கு மணியாடர் வந்துள்ளது என்று கூறினார். மணியாடர் படிவத்தில்
கையொப்பம் இட்டு ரூபாய் 100 பெற்றுக்கொண்டேன். நம்முடைய தேவன் அற்புதமாக உதவி செய்கிறவர்.
அல்லேலூயா. அத்தொகையை அனுப்பியவர் சகோ.கிறிஸ்டியன்
பாண்டிச்சேரி இவர் பிரான்ஸ் தேசத்திலிருந்து வந்து நரிக்குறவர், மலைஜாதி மக்கள் மத்தியில் சுவிசேஷப் பணி செய்கிறவர். என்னை குறித்து
கேள்விப்பட்டு ரூபாய் 100 உதவியாக அனுப்பி வைத்தார்கள். இந்த நாட்களில் ரூபாய் நூறு என்பது
ரூபாய் 1000 த்துக்கும் அதிகமான தொகை. அந்த நாளில் சங்கீதம் 115 : 12 ஆம் வசனத்தின்படி தேவன் எங்களை நினைத்தருளி ஆசீர்வதித்தார்.
சஞ்சலம் நீங்கியது, சந்தோஷம், நம்பிக்கை பெருகியது.
கர்த்தரைத் துதித்தோம். சிறப்பான முறையில் தேவ நாமம் மகிமை பட ஆசீர்வாதமாக வீடு பிரதிஷ்டை
நடைபெற்றது. டாக்டர். எலிசபெத் வாம்ஸ்டின் அவர்கள் வீட்டை திறந்து வைத்தார்கள். Rev. ஜோசப் ஜெயமணி அவர்கள் பிரதிஷ்டை ஆராதனையுடன் ஜெபித்து வீட்டை ஆசீர்வதித்தார்கள்.
நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது. அல்லேலூயா.
சங்கீதம் 136:28.
தர்மபுரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் சுவிசேஷப் பணி செய்தல்
:-
நான் மற்றொருவன் உடைய
அஸ்திவாரத்தின் மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில்
சுவிசேஷத்தை அறிவிக்கும் படி நாடுகிறேன். ரோமர் 15 : 21.
நான் மருத்துவமனையில்
பணி செய்து கொண்டிருந்த நாட்களில் பரசுராமன் என்கின்ற தொழு நோயாளிக்கு சுவிசேஷம் அறிவித்தேன்.
இவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, பாவமன்னிப்புக்கென்று, மனந்திரும்பி
ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார். இவருடைய சொந்த ஊர் தர்மபுரி மாவட்டத்திலுள்ள இருமத்தூர்
என்ற கிராமம். நான் முழுநேரமாக ஆண்டவரின் பணிக்கு அர்ப்பணித்து வேலையை விட்டு விட்ட
நாட்களில் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்ட தொழுநோயாளி
பரசுராமனின் அழைப்பை ஏற்று என் உடன் ஊழியர் ஜேம்ஸ் அவர்களை அழைத்து இருமத்தூர் கிராமத்திற்குச்
சென்று பரசுராமனை சந்தித்து ஆவிக்குரிய ஆலோசனைகள் கொடுத்து ஜெபித்தோம். அதன் பிறகு
அருகிலுள்ள கிராமங்களுக்கு எங்களை அழைத்துச் சென்றார். அன்று பகல் முழுவதும் பல கிராமங்களில்
மக்களை சந்தித்து நற்ச்செய்தியை அறிவித்தோம்.
மக்கள் ஆவலுடன் கேட்டார்கள்.
இப்பகுதியில் உள்ள மக்கள் கல்வி அறிவு, நாகரிகம் அற்றவர்கள்.
விவசாயம்,
கூலி வேலை செய்து வாழ்பவர்கள். இப்பகுதிகளில் பேருந்து வசதி
பேருந்து வசதி இல்லை. 5
கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பேருந்தில் பிரயாணம் செய்ய
வேண்டியுள்ளது. காட்டுப்பகுதிகள் நிறைந்த இடம் போக்குவரத்து வசதி இல்லாததால் இப்பகுதியில்
வாழ்கின்ற மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட வில்லை. மக்கள் இயேசு கிறிஸ்துவை குறித்து
கேள்வி படவேயில்லை. பாடல்களைப் பாடி நற்செய்தி அறிவிக்கும் போது, மெய்யான இறைவன் இயேசு, அவர் உங்களைப்
பாவத்தில் இருந்து விடுவித்து, சுக வாழ்வையும், நித்திய வாழ்வையும் தருபவர் என்று தெளிவாக அறிவித்ததாலும், பாமர மக்கள் எங்களை பார்த்து அவர்கள் கேட்பது, இயேசு எந்த ஊரில் இருக்கிறார் ? அவரை பார்க்க முடியுமா ? அவருக்கு ஓட்டு
போட்டால் விலைவாசி குறைத்து நன்மை செய்வாரா ? எங்கள் கிராமங்களுக்கு
சாலை வசதிகள் செய்து கொடுத்து பயணம் செய்வதற்கு பேருந்து வசதி செய்வாரா ? நீங்கள் இயேசுவை குறித்து
சொல்வதைக் கூர்ந்து கேட்கும் போது மிகவும் நல்லவர் போன்று தெரிகிறது என்று அந்த கிராம
மக்கள் எதிர்பார்ப்புடன் எங்களிடத்தில் கூறியது, அவர்களின் அறியாமையை குறித்தும், நாம் தான் அவர்களை
வழிநடத்த வேண்டும் என்றும் உள்ளத்தில் உறுதியான பாரம் உருவெடுத்தது.
மஞ்சமேடு,அரசம்பட்டி, நாகரசம்பட்டி, பண்ணந்தூர், பாரூர் ஆக 5 கிராமங்களை சந்தித்து
விட்டு இரவு 9 மணி அளவில் சகோ பரசுராமன் இல்லத்திற்கு வந்தோம். அங்கு இரவு
தங்குவதற்கு இடம் இல்லாததால் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணி செய்து கொண்டிருக்கும்
லில்லி ராஜா மணி வீட்டிற்கு அழைத்து சென்றார். அவர்கள் பாரம்பரிய கிறிஸ்தவர்கள், கணவன் மறுத்துவிட்டார் இரண்டு பிள்ளைகளுடன் வருத்தத்துடன் வாழ்க்கையை
கழித்து வந்தார்கள். அன்று இரவு 2 மணிவரை ஆவிக்குரிய சத்தியங்களை
சாட்சிகளுடன் அவர்களுக்கு பிரசங்கிக்கும் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்தபடியால் குடும்பமாக
அழுகையுடன் கர்த்தருக்கு ஒப்புக் கொடுத்தார்கள். தொடர்ந்து இரண்டு தினங்கள் அப்பகுதி
கிராமங்களில் சுவிசேஷம் அறிவிக்க கர்த்தர் கிருபையளித்தார். இந்த சுவிசேஷ பயணத்தில்
ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் 4 தினங்கள் தங்கி
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள (போக்குவரத்து பேருந்து வசதியற்றது) கிராமங்களில் சுவிசேஷப்
பணி செய்து திருச்சபைகள் உருவாக்க வேண்டும் என்று தீர்மானிக்க கர்த்தர் கிருபை செய்தார்.
இத்தீர்மானத்தின்படி 1975ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை சுவிசேஷப் பணி செய்யவும் மூன்று கிராமங்களில்
திருச்சபை உருவாக கர்த்தர் கிருபை செய்தார். இந்த ஊழியத்தில் நிகழ்ந்த முக்கியமான சில
சம்பவங்களை குறிப்பிடப்பிட ஏவப்படுகிறேன்.
1. தர்மபுரி மாவட்ட கிராம பகுதிகளுக்கு ஊழியத்திற்காக செல்லும்
போது ஏராளமான கைபிரதிகளும்,
சுவிசேஷ புத்தகங்களும் எடுத்துக்கொள்வோம். பிரயாணத்திற்கு போதுமான
பணம் இருக்காது. பணி ஸ்தலத்திற்கு செல்வதற்கு மட்டும் பணம் இருந்தால் அதுவே போதும்
என்று கர்த்தர் மீது வைத்திருக்கும் விசுவாசத்தைக் கொண்டு பயணப்பட்டு சென்று ஆசிரியை ராஜாமணி வீட்டில் இரவு இளைப்பாறிவிட்டு
காலை 7
மணி அளவில் கிராமங்களுக்கு கடந்து செல்வோம். எங்கு என்ன சாப்பிடுவோம்
என்று நினைக்கவே மாட்டோம்,
கிராம மக்கள் மனதில் இரக்கம் கொண்டு சாப்பிடுவதற்கு எதைக் கொடுத்தாலும்
மனரம்மியத்துடன் சாப்பிடுவோம். ஒவ்வொரு சுவிசேஷ
புத்தகங்களை 10
பைசாவுக்கு கொடுப்போம். இந்த பைசாக்களை வைத்துக் கொண்டு ஏதாகிலும்
சாப்பிடலாம் என்று நினைத்தால் உணவுவிடுதி மற்றும்
தேனீர் விடுதிகள் இருக்காது. கடந்து செல்லுகையில்
வயல்வெளியில் நிலக்கடலை,
கொய்யாப்பழம் கிடைக்கும் இவைகளை பெற்று புசித்து, தண்ணீர் குடித்து, மரத்தடியில் உட்கார்ந்து
இளைப்பாறிவிட்டு தொடர்ந்து நடந்தே அடுத்த கிராமங்களுக்கு சென்று நற்செய்தியை அறிவிப்போம்.
ஒருமுறை தர்மபுரி மாவட்டத்தில்
கம்பைநல்லூர் கிராம மையப்பகுதி வீதியில் நின்று "பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுமே"
என்கின்ற பாடலை இருவரும் பாடினோம். வீட்டிற்குள் இருந்த மக்கள் திரண்டு வந்து கூடி
நற்செய்தியை கேட்டார்கள். முடிவில் கைப்பிரதிகளையும், சுவிசேஷ புத்தகங்களையும் பெற்றுச் சென்றார்கள். நாங்களும் அடுத்த
வீதியில் உள்ள மைதான பகுதிக்கு சென்றோம். அங்கு அ.இ.அ.தி.மு.க கூட்டம் நடத்துவதற்கு
அழகான மேடை அமைத்து,
ஒலிபெருக்கி அமைத்து இருந்தார்கள். முந்தின வீதியில் நாங்கள்
பாடிய பாடலை கேட்டு ரசித்த ஒரு நபர் எங்களை அணுகி, நாங்கள் பாடிய பாடலை மேடையில் அமைந்திருக்கும் ஒலிப்பெருக்கியில் பாடுங்கள் என்று
எங்களை வேண்டிக்கொண்டார்கள். நாங்கள் பாடகர்கள் அல்ல கிறிஸ்துவின் தொண்டர்கள் நற்செய்தி
அறிவிப்பது என்பது தான் எங்கள் பிராதான நோக்கம் என்று பதில் கூறினோம்.
அதற்கு அந்த நபர் கூறினார், நான்தான் அ.இ.அ.தி.மு.க கட்சியின் செயலாளர், இந்த மேடை என் பொறுப்பில் உள்ளது எனவே அந்தப் பாடலை ஒரு முறை
பாடிவிட்டு இயேசு கிறிஸ்துவை குறித்து கொஞ்ச நேரம் சொல்லுங்கள். நீங்கள் நலமானதைத்தான்
சொல்கிறீர்கள். யாராகிலும் எதிர்ப்பு தெரிவித்தால் உங்களுக்கு தொல்லை நேராதபடி நான்
பார்த்துக்கொள்கிறேன்,
பாடலை பாடுங்கள் என்று மீண்டும் ஆர்வத்துடன் கூறினார். நாங்களும்
ஆர்வத்துடன் மேடையில் அமைந்துள்ள ஒலிபெருக்கியில் பாடலை பாடினோம்.
நூற்றுக்கணக்கான மக்கள்
திரண்டு வந்து மகிழ்வுடன் பாடலை கேட்டார்கள் பாடல் முடிந்த பின் இரட்சிப்பின் செய்தி
அறிவித்தோம். அசுத்த ஆவி கிரியை செய்ததால் ஒரு சிலர் மேடையில் ஏறி இது அ.இ.அ.தி.மு.க
கட்சி பிரச்சாரத்திற்காக அமைக்கப்பட்ட மேடை நீங்கள் எப்படி இங்கு வந்து இயேசுவை பற்றி
பேசலாம் என்று கோபமாக சத்தமிட்டார்கள். உடனே எங்களை பாடும்படி அழைத்த கட்சியின் செயலாளரும், ஒரு கூட்டம் மக்களும் எங்களை ஊக்குவித்து பேசுங்கள் என்று கூறினார்கள்.
முடிவில் 2 கூட்டமாக
கூடி விட்டார்கள். ஒரு கூட்டத்தார் பேசுங்கள் என்றும், மறுகூட்டத்தார் பேசக்கூடாது என்றும் மறுப்பு தெரிவித்தார்கள்.
இரண்டு கூட்டத்தாருக்கும் சண்டை நேரிடும் தருணத்தில் நாங்கள் இருவரும் கடந்து சென்றுவிட்டோம்.
தேவ கிருபையால் இங்கு அனேக மக்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு சபையாக கூடி ஆராதித்து வருகிறார்கள்.
3. மற்றொரு மாத ஊதியத்தின்
முகாமில் பன்னந்தூர் என்கின்ற கிராமத்தில் இரண்டு நாட்களில் மாலை நேரங்களில் சுவிசேஷ
பொதுக்கூட்டம் நடந்த நடத்த கர்த்தர் கிருபை செய்தார். கிராம மக்கள் அனைவரும் திரண்டு
வந்து கவனத்துடன் கவனித்துக் கொண்டார்கள். இரண்டாம் நாள் கூட்ட முடிவில் ஆண்டவரை ஏற்றுக்கொள்வதற்கு
அழைப்பு கொடுத்த வேலையில் 20 சகோதர, சகோதரிகள் ஒப்புக்
கொடுத்தார்கள். அதில் ஒருவர் ஹோமியோபதி டாக்டர், ஒருவர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை, டெய்லர், மற்ற அனைவரும் விவசாயிகள் அந்த நாட்களில் போதுமான பொருளாதார
வசதிகள் இல்லாததால் தர்மபுரி பட்டணத்திலுள்ள ஒரு போதகர் இடம் இவர்களை ஒப்புக்கொடுத்தேன்.
பண்ணந்தூர் இன்று ஒரு உறுதியான சபையாக காணப்படுகிறது.
4. 1975 ஆம் வருடம்
டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி நடந்த சம்பவத்தை குறிப்பிட விரும்புகிறேன். இந்த நாட்கள்
நாங்கள் திட்டமிட்டபடி தர்மபுரி மாவட்டத்திற்கு சுவிசேஷ பணிக்கு செல்ல வேண்டிய நாள்.
என் மனைவி 10 மாத கர்ப்பிணி. பிரசவ வேதனையோடு இருக்கிறாள் ஊழியத்திற்கு தடை உண்டாகாதபடி
சுகப்பிரசவம் உண்டாக ஜபித்துக் கொண்டு இருந்தேன். ஜெபத்தில் இருக்கும்போதே ஆண் குழந்தை
பிறந்தது என்று கேள்விப்பட்டு கர்த்தரை துதித்தேன்.
ஊழியத்திற்கு செல்வதற்கு
வாசல் திறக்கப்பட்டுவிட்டது. என்று விசுவாசித்து என் மனைவிக்காகவும், குழந்தைக்காகவும் ஜெபம் செய்து கர்த்தருடைய கரத்தில் ஒப்புவித்து விட்டு கர்த்தர்
பார்த்துக் கொள்வார் என்று விசுவாசத்துடன் ஊழியத்திற்கு சென்றுவிட்டோம்.( என் கண்களில்
கண்ணீர் கலங்க இதை எழுதுகிறேன் ) நாங்கள் ஊழியத்திற்கு சென்ற 15 நிமிடங்களுக்குப் பின்
என் மனைவிக்கு ஜன்னி வந்துவிட்டது. காரணம் குழந்தை வயிற்றில் இருக்கும் போது நல்ல ஊட்டச்சத்தான
உணவு இல்லை பல தினங்கள் பட்டினியாய் வெறும் தண்ணீரைக் குடித்துவிட்டு படுத்த நாட்கள்
உண்டு.
ஒருநாள் 50 பைசா மட்டுமே
இருந்ததால் இரண்டு சிறிய பண்ணு வாங்கிக் கொண்டு வந்து ஜெபத்துடன் திருவிருந்தில் அப்பம்
சாப்பிடுவது போல் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டோம். சாப்பிட்டவர்கள்( நாங்கள் இருவர், பிள்ளைகள் இருவர், அப்பா அம்மா இருவர்,
ஒரு உடன் ஊழியர் ) 7 பேர் எனவே சரிரத்தில் ரத்தம் குறைவாகவே இருந்ததால்,
பிரசவத்தின் போது ரத்தம் குறைந்ததாலும் ஜன்னி வந்தது. குழந்தையை பார்த்தால்
ஒரு குரங்கைப் போல் காணப்பட்டது. செய்தியை கேள்விப்பட்ட Dr.எலிசபெத்
வாம்ஸ்டின் அவர்கள் தாமதமில்லாமல் வந்து பார்த்து என் மனைவி, குழந்தை இருவரையும் மருத்துவமனையில் சேர்த்து நல்ல ஊட்டச்சத்து உணவு,
வைத்தியம் செய்தார்கள்.
நல்ல பாதுகாப்பான, வசதியான இடத்தில் சேர்ந்து பராமரிக்க கர்த்தர் கிருபை செய்தார்.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். காரணம் ஊழியத்திற்த்திற்கு செல்லும்போது கர்த்தருடைய கரத்தில்
ஒப்புவித்து சென்றேன் தேவனாகிய கர்த்தரே இந்த மாபெரும் உதவியை Dr. வாம்ஸ்டின் வாயிலாக செய்தார்.
ஊழியம் முடிந்து 4 தினங்களுக்கு பின் வீட்டிற்கு வந்து என் மனைவி, குழந்தையை பார்க்க ஆவலுடன் வீட்டுக்குள் நுழைந்தபோது இருவரையும் காணோம்.
படுக்கையில் மருத்துவமனையில்
இருக்கிறார்கள் என்று அறிந்து மருத்துவமனைக்குள் சென்றேன். அப்போது நுழைவு வாயிலில்
Dr.வாம்ஸ்டின் நின்று கொண்டு இருந்தார்கள் அவர்களுக்கு
வந்தனம் கூறிவிட்டு, என் மனைவி, குழந்தையை
பற்றி விசாரித்தேன். அப்போது டாக்டர் கூறியது இருவரும் நன்றாக இருக்கிறார்கள் ஆனால்
நான் அவர்களை அனுப்பமாட்டேன். டாக்டர் இது நல்லது. நீங்களே வைத்து பாதுகாத்துக் கொண்டால்
ஊழியம் செய்வதற்கு எனக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று பதில் கூறி மனநிறைவுடன்
அவர்களுக்கு நன்றி கூறி வாழ்த்தினேன். இந்த சம்பவத்தில் இடம்பெற்ற குழந்தை என் மூன்றாவது
மகன் பரமானந்தம்.
“ நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை “ யோசுவா 1:15
“ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன்
நீ என்னை மகிமைப்படுத்துவாய்” சங்கீதம் 50:15
மேற்கண்ட
வேத வசனத்தின்படி என்னை கைவிடாமலும், விலகாமலும் இருந்தமையால் ஆபத்தில் என் கூப்பிடுதலை
கேட்டு விடுவித்தபடியால் அவரை மகிமைப்படுத்தி பிரஸ்தாபப்படுத்துகிறேன்.
5. தர்மபுரி மாவட்டத்தில் கடத்தூர் என்கின்ற கிராமத்தில் நிகழ்ந்த
சம்பவத்தைப் குறிப்பிடுகின்றேன்.
1976 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் களத்தூர் கிராமத்தில் மூன்று நாள் சுவிசேஷக்
கூட்டங்கள் ஒழுங்கு செய்து நடத்த கர்த்தர் உதவி செய்தார். இப்பகுதியில் கம்யூனிஸ்ட்
மக்கள் நிறைந்த இடம் எனவே முதல் நாள் கூட்டத்திற்கு 15 முதல் 20 மக்களே கூடிவந்து அற்புதமான
தேவ செய்தியை கேட்டார்கள், கூட்ட முடிவில் பாவகட்டிற்குள் உள்ள மக்களுக்களின் விடுதலைக்காகவும்,
பிசாசு பிடித்தவர்களுக்காகவும், வியாதி உள்ளவர்களுக்கும் ஜெபிக்கப்படும் என்று அறிவிப்பு
கொடுத்தபோது கூட்டத்திற்கு வந்த அனைவரும் ஜெபித்துக் கொண்டார்கள்.
இரண்டாம் நாள் கூட்டத்தில்
மேடையில் நின்று பாடல்களைப் பாடி முடித்தபின் விடுதலையின் செய்தி கொடுப்பதற்குமுன்
ஜெபம் செய்யப்பட்டது. தேவ செய்தியை கேட்கும்படியாக வந்தவர்களில் ஒருவர் வேகமாக ஓடி
வந்து மேடையில் ஏறி மைக் முன் நின்றபடி இயேசு வாழ்க ! இயேசு தொண்டர் வாழ்க ! என மூன்று
முறை முழக்கமிட்டார். முதல் நாள் கூட்டத்தில் அவர் ஆண்டவரை விசுவாசித்து ஜெபம் செய்து
கொண்டார். அவருக்குள் மூன்று ஆண்டு காலமாக வியாதியில் இருந்து வந்ததாலும், மூன்று ஆண்டுகளாக
நன்றாக தூக்கம் வராமல் வேதனைப்பட்டு ரூபாய் 30000/- செலவுசெய்து வைத்தியம் செய்தும்,
இந்துக்கள் வழிபடும் பல கோயில்களுக்கு சென்றும் சுகம் கிடைக்காமல், நித்திரையும் இல்லாமல்
இருந்த அவர். முதல் நாள் கூட்டத்தில் பங்கு பெற்று ஜெபம் செய்து கொண்ட அன்று இரவு நன்றாக
நித்திரை அடைந்ததாகவும், ஆரோக்கியமானதாகவும் சாட்சி கூறி இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான
தெய்வம் என்பதில் சந்தேகமில்லை என்று உறுதியுடன் கூறினார். இவருடைய பெயர் கிருஷ்ணசாமி.
மின் இலாக்காவில் Fose
Man-ஆக பணி செய்து கொண்டிருந்தார்.
இந்த அற்புதமான விடுதலையை
கண்ட அவருடைய மனைவி, பிள்ளைகள் அனைவரும் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு திருமுழுக்கு எடுத்துக்கொண்டார்கள்.
மூன்றாம் நாள் கூட்டத்திற்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்து சத்தியத்தை கேட்டார்கள்.
கூட்டத்தின் முடிவில் 10 ஆத்துமாக்கள் ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்தார்கள். இவர்களைக்
கொண்டு சபை உருவாக கர்த்தர் கிருபை செய்தார்.
இந்த சபையில் சகோ. கிருஷ்ணசாமி மோசஸ் அவர்கள் மூப்பராயிருந்து பணி செய்து வருகிறார். கர்த்தர் அவர்களுடனே (எங்களுடனே) கூட கிரியையை நடப்பித்து அவர்களால் (எங்களால்) நடந்த அடையாளங்களினால் வசனத்தை உறுதிப்படுத்தினார். மார்க்கு 15 : 20
======================================================
வாழ்வதற்காக பிறந்த நம்மத்தியில்
வாழ வைப்பதற்காக பிறந்தவர் நம் ஐயா..!
இரவுக்கு நிலவு வெளிச்சம் தருவது போல
இருண்ட மனிதர்களுக்கு தேவ ஒளியை
தேவைக்கேற்ப தந்தவர் நம் ஐயா..!
அவர் உயிர்பிழைக்க போராடவில்லை
ஊழியத்திற்கு உழைக்கப் போராடினார்
பூமியில் ஊழியத்திற்கு உழைத்து விட்டார்
வானில் உன்னதமானவரோடு ஊஞ்சலாட
சென்றுவிட்டார்...!
ஐயாவின் உடலுக்கு எல்லை இருந்தாலும்
அவருடைய ஊழியத்திற்கு இல்லையே
எல்லை...!
இயேசுவை கனவில் கண்ட ஐயாவை
இப்பொழுது நம்முடைய கனவில்
கர்த்தரோடு கண்டோம்..!
அய்யாவின் கண்களில் கவலையை
நினைத்து கண்ணீர் வந்ததைவிட
கர்த்தரை நினைத்து ஆனந்தக் கண்ணீர்
வந்ததுதான் அதிகம்...!
மரணம் என்றால் நடுக்கம் ஏற்படும் மனிதர்கள்
மத்தியில் மரணத்தையே அழைத்து அனைத்துகொண்டவர்
நம் ஐயா...!
உதிர்ந்த பூக்களிடம் உருவாகும் புதிய வாசம்
உயிர் பிரிந்த ஐயாவிடம் உருவெடுக்கும்
இயேசுவின் நேசம் ...!
தேவனோடு ஜெபிக்க சென்றுவிட்டார்..!
குயவனோடு படைக்க சென்றுவிட்டார்...!
மேய்ப்பனோடு மேய்ச்சலுக்கு சென்றுவிட்டார்...!
இறைவனோடு இளைப்பாற சென்றுவிட்டார் ...!
வல்லவரின் வருகை பொழுது வலது
புறமாய் வந்திடுவார் ஐயா ..! நம் ஐயா.....!!!
இப்படிக்கு
விடிவெள்ளி வளாகத்தின் விதை ..!