ரஷ்யாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா- 50 ஆயிரத்தை தாண்டியது ஒருநாள் பாதிப்பு

தற்போது உலக நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத்தொடங்கியதை அடுத்து, ரஷ்யாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு இரண்டாவது நாளாக 50 ஆயிரத்தை தாண்டி பதிவாகியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 51,699 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மார்ச் 9ஆம் தேதிக்கு பிறகு இன்றுதான் மீண்டும் உட்ச எண்ணிக்கையை தொட்டுள்ளது. ஆறு மாதங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது. வேகமாக பரவக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸ்கள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலிருந்து நாடுமுழுவதும் வேகமாக பரவத்தொடங்கியது.

image

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் 92 பேர் உயிரிழந்துள்ளதாக அரசின் கொரோனா வைரஸ் பணிக்குழு தெரிவித்திருக்கிறது. கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. உலகளவிலான இறப்பு புள்ளிவிவரங்களில் ரஷ்யாவீல் அதிகப்படியான இறப்பு பதிவாகியுள்ளது. அங்கு தடுப்பூசி செலுத்துதல் மிக மெதுவாக நடப்பதும், 2020இல் குறுகியகால பொதுமுடக்கத்துக்கு பிறகு மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க ரஷ்யா தயங்குவதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/soK3UZ9

Post a Comment

Previous Post Next Post