நிலக்கரி நிறுவனத்தில் 295 சர்வேயர், ஓவர்மேன்

டிப்ளமோ படித்திருந்தால் போதும்மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் 295 சர்வேயர் மற்றும் ஓவர்மேன் பணிகளுக்கு டிப்ளமோ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Sruveyor & Overman1.  Junior Overman: 82 இடங்கள் (பொது- 43, பொருளாதார பிற்பட்டோர்-8, எஸ்சி-14, எஸ்டி-7, ஒபிசி-10). தகுதி: Mining/Mining Engineering பாடத்தில் டிப்ளமோ. மேலும் முதலுதவி சான்றிதழ், டிஜிஎம்எஸ் ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஓவர்மேன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.31,852/-2.  Surveyor: 68 இடங்கள் (பொது-27, பொருளாதார பிற்பட்டோர்-6, எஸ்சி-12, எஸ்டி-14, ஒபிசி-9). தகுதி: Mining/Mining Engineering பாடத்தில் டிப்ளமோ மற்றும் சர்வேயர் பணிக்கான என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.34,391/-3.  Mining Sirdar: 145 இடங்கள் (பொது-74, பொருளாதார பிற்பட்டோர்-14, எஸ்சி-13, எஸ்டி-35, ஒபிசி-9). தகுதி: Mining Engineering பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ அல்லது பி.இ., முடித்து Mining Sirdar சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் முதலுதவி சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.வயது: (அனைத்து பணிகளுக்கும்). பொது பிரிவினர் 30 வயதுக்குள்ளும், எஸ்சி/எஸ்டியினர் 35 வயதிற்குள்ளும், ஒபிசியினர் 33 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.கட்டணம்: ரூ.1000/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ பொருளாதார பிற்பட்டோர் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது. www.mahanadicoal.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.01.2023.



from Dinakaran.com |23 Jan 2023 https://ift.tt/XrNRZQc

Post a Comment

Previous Post Next Post